மீண்டும் வந்த இலவச லேப்டாப்.. பல லட்சம் மாணவர்களுக்கு குஷி.. திமுக முடிவிற்கு பின் விஜய் காரணமா?
சென்னை: இலவச லேப்டாப் திட்டம் மீண்டும் அமலுக்கு வந்துள்ளது. அதிமுக காலத்தில் நிறுத்தப்பட்ட இந்த திட்டம் மீண்டும் கொண்டு வரப்பட்டு உள்ளது. இது தொடர்பாக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு உள்ளது.
தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு இந்த அறிவிப்பை வெளியிட்டு உள்ளார். இன்று கல்வி தொடர்பான பல அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. அதில், நீலகிரி குன்னூர், சென்னை ஆலந்தூர் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் புதிய அரசு கலைக் கல்லூரிகள் தொடங்கப்படும். அரசு பாலிடெக்னிக் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் செயற்கை நுண்ணறிவு, ரோபோட்டிக்ஸ் உள்ளிட்ட பல்வேறு வளர்ந்து வரும் துறைகளின் புதிய பிரிவுகள் ஏற்படுத்தப்படும்.
ரூ.50 கோடியில் அரசு பொறியியல் கல்லூரிகளில் திறன் மிகு மையங்கள் அமைக்கப்படும். பழங்குடி மாணவர்கள் இடைநிற்றலை தடுக்க 14 உயர் நிலைப்பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும். அரசு பல்கலைகழகங்களுக்கு வழங்கப்படும் நிதி உதவி ரூ.700 கோடியாக உயர்த்தப்படும்.

மும்மொழிக்கொள்கையை ஏற்காததால் ஒன்றிய அரசு ரூ.2150 கோடியை தமிழ்நாடு அரசுக்கு வழங்கவில்லை. மாநில அரசே தனது சொந்த நிதி ஆதாரத்தில் இருந்து இதற்காக நிதியை விடுவித்துள்ளது. இருமொழிக் கொள்கையை விட்டுத்தரமாட்டோம் என உறுதியாக உள்ள முதல்வரின் பக்கம் நின்று மக்கள் ஆதரவு அளித்துள்ளனர்.
முக்கியமாக அடுத்த 2 ஆண்டுகளில் 20 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப கைக்கணினி (அ) மடிக்கணினி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
திட்டத்திற்கு காரணம் என்ன?
இந்த திட்டத்தை அறிவிக்க பல காரணங்கள் உள்ளன.
1. தமிழ்நாடு அரசு ஏஐ தொடர்பான பாடத்திட்டங்களை கொண்டு வருவதாக அறிவித்துள்ளது. இதை படிக்க லேப்டாப் அவசியம்.
2. தமிழக மாணவர்களை உலக தரத்திற்கு கொண்டு செல்ல ஏற்கனவே நான் முதல்வன் திட்டம் அமலில் உள்ளது. இது போன்ற திட்டங்களில் மாணவர்கள் சிறப்பாக செயல்பட லேப்டாப் அவசியம்.
3. தேசிய அளவில் மட்டுமின்றி உலக அளவில் பல நிகழ்ச்சிகளுக்கு தமிழக அரசு பள்ளி மாணவர்கள் கொண்டு செல்லப்படுகிறார்கள். அவர்கள் பின்தங்காமல் இருக்க லேப்டாப் அவசியம்.
4. அதோடு மிக முக்கியமாக அரசு பள்ளி மாணவர்களுக்கு வசதியாக தனியார் பள்ளி மாணவர்களுக்கு இணையான வசதிகள், வாய்ப்புகள் தேவை. அதற்கு லேப்டாப் அவசியம்.
5. அரசு லேப்டாப் தர வேண்டும் என்று பல தரப்பினரும் கோரிக்கை வைத்தனர்.
6. அதிமுக காலத்தில் திட்டம் நின்று போனாலும் திமுக தரவில்லை என்ற பிம்பம் இருந்தது. அது திமுக மீது குறையாக இருந்தது. இது சரியாகி உள்ளது.
7. அதோடு டேட்டாபடி இந்த திட்டத்தை கொண்டு வந்ததால் ஏற்கனவே பல லட்சம் பேர் பலனடைந்து உள்ளனர். மீண்டும் கொண்டு வந்தால் அது பல லட்சம் பேருக்கு உதவும்.
விஜய் காரணமா?
1. இன்னொரு பக்கம் இதற்கு விஜய் காரணம் என்றும் கூறப்பட்டு உள்ளது. விஜய்க்கு சிறுவர்கள், இளைஞர்கள் ரசிகர்கள் அதிகம்.
2. அவர்கள் பலர் தங்களுக்கு அரசு லேப்டாப் தரவில்லை.. விஜய் வந்தால் தருவார் என்ற எண்ணம் உள்ளது.
3. விஜய் ரசிகர்கள் பலர் இதை பற்றி பள்ளி மாணவ, மாணவிகளிடம் இப்போது பேசி வருகின்றனர். அவர்கள்தான் எதிர்கால வாக்காளர்கள். அவர்கள் விஜய் பக்கம் போனால் திமுகவிற்கு சிக்கல்.
4. அடுத்த 1 வருடத்தில் தேர்தல். அப்படி இருக்க இந்த திட்டத்தை விஜய் வாக்குறுதியாக தரலாம். அதற்கு முன் திமுக மீண்டும் திட்டத்தை கொண்டு வந்தால் அது நல்லது.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications