சசிகலா புஷ்பா படுக்கையறைக்குள் “மர்ம நபர்”..விவாகரத்து கேட்கும் 2வது கணவர்.. நோட்டீஸ் அனுப்பிட்டார்
சென்னை : சசிகலா புஷ்பாவின் படுக்கை அறைக்குள் மர்மநபர் இருந்ததாகவும், வீட்டில் ஆணுறை இருந்ததாகவும் கூறியது சர்ச்சையான நிலையில், சசிகலா புஷ்பாவின் இரண்டாவது கணவரும் விவாகரத்து கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அதிமுக மாநிலங்களவை உறுப்பினராக இருந்தவர் சசிகலா புஷ்பா. அதிரடி பேச்சுகளுக்கும் அதிரடி செயல்களுக்கும் சொந்தக்காரரான இவர் அடிக்கடி பல்வேறு சர்ச்சைகளில் சிக்குவது வழக்கம்.
மறைந்த தமிழக முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா ஆகியோர் தன்னை கன்னத்தில் அறைந்தனர் என மாநிலங்களவையில் அவர் பேசிய பேச்சு பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

சர்ச்சை சசிகலா புஷ்பா
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அவரது வீட்டில் பணிபுரிந்த பணிப்பெண்கள் சசிகலா புஷ்பா தனக்கும், தனது முதல் கணவர் மற்றும் மகன் ஆகியோருக்கு நிர்வாண மசாஜ் செய்ய வலியுறுத்தியதாக புகார் தெரிவித்தது சர்ச்சையை கிளப்பியது. இவ்விவகாரம் பூதாகரமான நிலையில் அதற்கு முன்னதாக திமுக நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா உடன் விமான நிலையத்திலும் தகராறில் ஈடுபட்டார். இது அப்போதைய தலைப்புச் செய்தியாக மாறியது.

படுக்கையறையில் மர்ம நபர்
இப்படி தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கி வந்த சசிகலா புஷ்பா தலைநகர் டெல்லியில் வழக்கறிஞர் ராமசாமி என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். இருவரும் சென்னை அண்ணாநகரில் உள்ள வீட்டில் வசித்து வந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பாக வழக்கறிஞர் ராமசாமி சென்னை காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்தார். அந்த புகாரில் மதுரையிலிருந்து சென்னைக்கு திரும்பிய போது வீட்டின் படுக்கை அறையில் சசிகலா புஷ்பா இருந்தார் எனவும், மற்றொரு படுக்கையில் மர்ம நபர் ஒருவர் இருந்தார் எனக் கூறினார். மேலும் அமுதா என்ற பெண்ணும் இருந்ததாகவும் வீட்டில் மதுபானங்கள் மற்றும் உணவு பொட்டலங்கள் சிதறி கிடந்ததாக கூறினார்.

பாலியல் தொழில் என புகார்
வீட்டுக்குள் மர்ம நபர்களை அனுமதித்து குறித்து சசிகலா புஷ்பாவிடம் தட்டிக் கேட்ட போது தன்னை தஞ்சாவூர் ராஜா, சசிகலா புஷ்பா, அமுதா ஆகியோர் மிரட்டியதாகவும் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்திருந்தார். புகார் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை முடிவில் சசிகலா புஷ்பா தஞ்சாவூர் ராஜா அமுதா ஆகிய 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து இது குறித்து பேசிய ராமசாமி தனது வீட்டில் சசிகலா புஷ்பா பாலியல் தொழில் செய்ததாகவும் புகார் அளித்தார்.

விவாகரத்து நோட்டீஸ்
இந்நிலையில், சசிகலா புஷ்பாவின் இரண்டாவது கணவரான வழக்கறிஞர் ராமசாமி சசிகலா புஷ்பாவிடம் விவாகரத்து கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 2018 ஆம் ஆண்டு திருமணம் செய்த நிலையில் 2022 ஆம் ஆண்டு விவாகரத்து கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது. வழக்கறிஞர் ராமசாமி அனுப்பியுள்ள விவாகரத்து நோட்டீஸில் திருமணத்திற்குப் பின்பு சசிகலா புஷ்பா தொடர்ந்து தகராறில் ஈடுபட்டு வந்ததாகவும், இது தொடர்பாக டெல்லி, தூத்துக்குடி உள்ளிட்ட காவல் நிலையங்களில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். சசிகலா புஷ்பா அவரது இரண்டாவது கணவர் விவாகரத்து நோட்டீஸ் அனுப்பியுள்ள சம்பவம் தற்போது மீண்டும் பரபரப்பை கிளப்பியுள்ளது.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications