சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

எந்த தவறும் செய்யாத எனக்கு எதிராக விசாரணை ஆணையமா? அதிர்ச்சி அளிக்கிறது.. அண்ணா பல்கலை சூரப்பா பேட்டி

Google Oneindia Tamil News

சென்னை: தனக்கு எதிராக தமிழக அரசு விசாரணை குழு அமைத்தது அதிர்ச்சி அளிக்கிறது என்று அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா தெரிவித்துள்ளார்.

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மீது விசாரணை நடத்த தமிழக அரசு குழு ஒன்றை அமைத்துள்ளது. துணைவேந்தர் சூரப்பா மீது பல்வேறு புகார்கள் குவிந்த நிலையில் இந்த விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது .

ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இன்னும் 3 மாதங்களில் இந்த குழு விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்கும்.

அண்ணா பல்கலை. துணைவேந்தராக கர்நாடகா சூரப்பா நியமனம்- தமிழக தன்மானத்தின் மீது தாக்குதல்: ஸ்டாலின் அண்ணா பல்கலை. துணைவேந்தராக கர்நாடகா சூரப்பா நியமனம்- தமிழக தன்மானத்தின் மீது தாக்குதல்: ஸ்டாலின்

சூரப்பா

சூரப்பா

இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த அண்ணா பல்கலை., துணை வேந்தர் சூரப்பா பேசியதாவது , என்னை விசாரிக்க தமிழக அரசு குழு அமைத்தது அதிர்ச்சி அளிக்கிறது. நான் ஒரு பைசா கூட லஞ்சம் வாங்கியது கிடையாது.இதுவரை நான் எந்த தவறும் செய்தது கிடையாது. எந்த தவறும் செய்யாத எனக்கு எதிராக விசாரணை ஆணையமா?.

விசாரணை ஆணையம்

விசாரணை ஆணையம்

விசாரணை ஆணையத்தை எதிர்கொள்வதில் எந்த தயக்கமும் இல்லை. எதையும் சந்திக்க நான் தயாராகவே இருக்கிறேன். எனக்கு கவலை இல்லை, என்னுடைய வங்கி விவரங்களை சோதிக்கட்டும். எனக்கு எதிராக சிலர் தவறான புகார்களை வைக்கிறார்கள். என்னை சிலர் மிரட்டுகிறார்கள்.

மிரட்டல்

மிரட்டல்

என்னுடைய மகள் அண்ணா பல்கலையில் பணிபுரியவில்லை. பெயர் குறிப்பிடாமல் எனக்கு மிரட்டல்கள் வருகிறது. நான் பல இடங்களில் பணியாற்றி இருக்கிறேன். நான் ஐஐடி உள்ளிட்ட பல இடங்களில் பணியாற்றி இருக்கிறேன். எனக்கு புதிது இல்லை. நான் தூய்மையானவன்.

தூய்மை

தூய்மை

என்னை விசாரணை செய்ய போகிறார்கள்..செய்யட்டும். மக்கள் என்னை பற்றி தெரிந்து கொள்ளட்டும். விசாரணை நடக்கட்டும், முடிவுகள் வரட்டும், மக்களுக்கு உண்மை தெரியும். நான் கடந்து வந்த பாதை மக்களுக்கு தெரியட்டும், என்று அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா தெரிவித்துள்ளார்.

English summary
It is shocking, Let the TN Govt investigate me says Anna University VC Surappa in Press Meet.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X