மனசு நெருடுது..தம்பட்டமடிப்பது சரி ஆனா இழிவாக பேசாதீர்! நிர்மலா சீதாராமனை விளாசி தள்ளிய திருமாவளவன்
சென்னை: ‛‛நம்மை பற்றி தம்பட்டமடிப்பது சரி. ஆனால் இழிவாக பேசாதீர்''என நாடாளுமன்றத்தில் பேசிய நிர்மலா சீதாராமன் குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் எம்பியுமான தொல் திருமாவளவன் விமர்சித்துள்ளார்.
நாடாளுமன்றத்தின் இருஅவைகளிலும் விலைவாசி உயர்வு, பணவீக்கம் குறித்து விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சி எம்பிக்கள் கூறி வந்தனர். இதற்கு மத்திய அரசு ஒப்புக்கொள்ளாமல் இருந்ததால் அவை நடவடிக்கைகள் தொடர்ந்து பாதிக்கப்பட்டன.
இந்நிலையில் அவைகளில் விலைவாசி உயர்வு பற்றி விவாதிக்க மத்திய அரசு முன்வந்தது. அதன்படி நாடாளுமன்றத்தின் லோக்சபாவில் நேற்று விலைவாசி உயர்வு பற்றிய விவாதம் நடந்தது. எதிர்க்கட்சி எம்பிக்களின் கேள்விக்கு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பதிலளித்தார்.

மத்திய அமைச்சர் விளக்கம்
இந்த விவாதத்தின்போது நிர்மலா சீதாராமன் இந்திய பொருளாதாரம் பற்றி விரிவாக பேசினார். அப்போது அவர், ‛‛ உலகிலேயே அதிவேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரமாக இந்தியா உள்ளது. உலகமே பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில் இந்தியாவின் வளர்ச்சி தொடர்கிறது. கொரோனா இடர்பாடுகளையும் கடந்து உலகின் பிற நாடுகளை விட இந்தியாவின் பொருளாதாரம் சிறப்பான நிலையில் உள்ளது. அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட்டதால் பொருளாதார வளர்ச்சி மீண்டுள்ளது. கொரோனா, ரஷியா- உக்ரைன் போர் உள்ளிட்ட சூழலிலும் 7 சதவீதத்திற்குள் பணவீக்கத்தை அரசு கட்டுப்படுத்தியுள்ளது. பொருளாதார மந்த நிலையோ, தேக்க நிலையோ ஏற்படும் என்ற கேள்விக்கே இடமில்லை'' என்றார்.

திருமாவளவன் எம்பி எதிர்ப்பு
இந்த வேளையில் மத்திய அமைச்சர் இந்தியாவின் பொருளாதாரத்தை அண்டை நாடுகளோடு நிர்மலா சீதாராமன் ஒப்பீட்டு செய்து பேசினார். இதனை விடுதலைகள் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், எம்பியுமான தொல் திருமாவளவன் கடுமையாக எதிர்த்துள்ளார். இதுபற்றி அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:

இலங்கை கையேந்துவதாக..
விலைவாசி உயர்வு தொடர்பான விவாதத்திற்கு விடையளித்த அமைச்சர் நிர்மலா சீதாராமன் பொருளாதார நிலை குறித்து இந்தியாவை அண்டை நாடுகளோடு ஒப்பீடு செய்தார். அப்போது இலங்கை, பாகிஸ்தான், பங்களாதேஷ் ஆகிய நாடுகள் ஐஎம்எப் மற்றும் பிற நாடுகளில் கையேந்துகின்றன என குறிப்பிட்டார்.

இழிவு செய்வது அரசியல் நாகரீகமா?
நம்மை பற்றி தம்பட்டமடிப்பது சரி. ஆனால் ஒரு பொறுப்புள்ள பதவியில் இருப்பவர் உலகமே உற்று கவனிக்க கூடிய ஒரு அவையில் பிற நாடுகளை இழிவு செய்வதுபோல் பேசியது அரசியல் நாகரீகமா?. கையேந்துகிறார்கள் என்பது நாடாளுமன்றத்தில் அனுமதிக்கப்படும் சொற்களா? தெளிவு படுத்துவார்களா? .

நெருடலாக உள்ளது
விலைவாசி உயர்வு, பட்டினிச்சேவைகள் போன்றவை மக்களை வாட்டி வதைக்கும் நியைில் இந்தியா எல்லாவற்றிலும் தன்னிறைவு பெற்றுவிட்டதை போல தம்பட்டமடிப்பது நெருடலாக உள்ளது. உலகமே கவனித்து கொண்டிருக்கும் மக்களின் அவையில் இவ்வாறு பிற நாடுகளை கேலி செய்வது அரசியல் நாகரீகமா? எனும் கேள்வி எழுகிறது'' என கூறியுள்ளார்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications