• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

திமுகவுடன் "அவர்"?.. அப்ப பாஜக யாருடன் கூட்டணி.. ட்விஸ்ட் வைத்த அண்ணாமலை.. பரபரக்கும் களம்

Google Oneindia Tamil News

சென்னை: கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசித்துவிட்டு, இன்னும் 2 தினங்களில் கூட்டணியா அல்லது தனித்து போட்டியா என்பது பற்றி அறிவிக்கப்படும் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்

தமிழகத்தில் விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது.. தேர்தல் வேலைகளும் களைகட்ட ஆரம்பித்துவிட்டன.

ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, தென்காசி, திருநெல்வேலி, விழுப்புரம், வேலூர், காஞ்சிபுரம் ஆகிய 9 மாவட்டங்களில் அக்டோபர் 6, மற்றும் 9 என இரு கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ளது.

அறிவிச்சாச்சு... அடுத்து என்ன செய்யப் போகிறோம்... துறைச் செயலாளர்களுடன் முதல்வர் நாளை ஆலோசனை..! அறிவிச்சாச்சு... அடுத்து என்ன செய்யப் போகிறோம்... துறைச் செயலாளர்களுடன் முதல்வர் நாளை ஆலோசனை..!

 தனித்து போட்டி

தனித்து போட்டி

இதற்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கி நடந்து வருகிறது.. இதனால் அரசியல் கட்சிகள் மும்முரமாகி உள்ளன.. கூட்டணி போட்டி, தனித்து போட்டி போன்ற விவகாரங்களிலும் ஈடுபட்டு வருகின்றன.. கடந்த ஒரு மாதகாலமாகவே, திமுக, அதிமுக, பாமக போன்ற கட்சிகள் இது குறித்த விவாதங்களையும், ஆலோசனை கூட்டங்களையும் தங்களுக்குள் நடத்தி வந்தன.

 பாமக

பாமக

இந்நிலையில், ஆளுங்கட்சியான திமுக அனைத்து கூட்டணி கட்சிகளுக்கும் இன்று அழைப்பு விடுத்துள்ளது.. இந்த கூட்டத்தில்தான் தனித்து போட்டியா? கூட்டணியா? அப்படி ஒருவேளை கூட்டணி என்றால் அவர்கள் யார் யார் என்பதெல்லாம் தெரியவரும்.. ஆனால், பாமகவோ தனித்து போட்டி என்று அறிவித்துவிட்டது.. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் தனித்துப் போட்டியிடுவதாக அக்கட்சி அறிவித்துள்ளது.

கலக்கம்

கலக்கம்

இது மற்ற கூட்டணி கட்சிகளை கலக்கமடைய வைத்துள்ளது... குறிப்பாக அதிமுகவுக்கு நெருக்கடியை தந்துள்ளது.. ஆனாலும் அதிமுக தரப்பு தங்கள் கலக்கத்தை வெளிக்காட்டிக் கொள்ளவில்லை.. மாறாக, பாமகவை விமர்சிக்க ஆரம்பித்து விட்டனர்.. "பாமக ஜென்டில்மேனாக நடந்துகொண்டால் எந்தப் பிரச்சினையும் இல்லை.. எங்களை விமர்சித்தால் நாங்கள் பாமகவை விமர்சிப்போம்.. அதிமுகவை விமர்சிக்கும் தகுதி யாருக்குமே கிடையாது.. கூட்டணியிலிருந்து விலகியதால் எந்த இழப்பும் இல்லை, அவங்களுக்குதான் இழப்பு" என்று காட்டமாக கூறினர்.

  PMK VS AIADMK | உள்ளாட்சி தேர்தலில் பாமக தனித்து போட்டி | Oneindia Tamil
   அவகாசம்

  அவகாசம்

  எனினும், பாமக ஏன் தனித்து போட்டி என்பதற்கு விளக்கம் தந்துள்ளது.. பாமக தேசிய ஜனநாயகக் கூட்டணில் தான் நீடிக்கும், ஆனால் போட்டியிடும் இடங்கள் குறித்து பேச கால அவகாசம் இல்லாமல் போனதாலேயே தனித்து போட்டியிடுகிறோம் என்று காரணம் கூறியுள்ளது..

   எதிர்பார்ப்பு

  எதிர்பார்ப்பு

  இப்படிப்பட்ட சூழலில், கூட்டணியின் முக்கிய கட்சியான பாஜக யாருடன் கூட்டணி என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.. பாஜகவின் நிலைப்பாடு என்ன என்பது குறித்து அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலையிடம் செய்தியாளர்கள் கேட்டனர்.. அதற்கு பதிலளித்த அண்ணமலை, அது குறித்து கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசித்துவிட்டு இரு தினங்களில் கூட்டணியா அல்லது தனித்து போட்டியா என்பது பற்றி அறிவிக்கப்படும்" என்றார்.

   17 பேர் கொண்ட குழு

  17 பேர் கொண்ட குழு

  கடந்த மாதம், எல்.முருகன் ஒரு பேட்டி தந்திருந்தபோது, "உள்ளாட்சி தேர்தலை சந்திக்க பாஜக தயாராக உள்ளதாகவும், தற்போதுள்ள கூட்டணியே தொடரும் என்றும் கூறியிருந்தார். ஆனால், அதிமுக தங்கள் கூட்டணி பற்றி எந்த தெளிவான அறிவிப்பும் அதுவரை வெளியிடவில்லை.. ஆனால், அதிமுக கூட்டணியில் உள்ள பாஜகவோ, உள்ளாட்சி தேர்தலை சந்திக்க மாநில அளவிலான குழுவை அமைத்தது. முன்னாள் மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், மாநில துணை தலைவர்கள் நயினார் நாகேந்திரன், விபி துரைசாமி உள்ளிட்ட 17 பேர் கொண்ட குழுவினர் நியமிக்கப்பட்டிருந்தனர்.

   ஆட்சி அமையும்

  ஆட்சி அமையும்

  அதேபோல, சில தினங்களுக்கு முன்பு அண்ணாமலை பேட்டி தந்தபோது, "நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தலில் அதிக இடங்களை பாஜக கூட்டணி கைப்பற்ற வேண்டும். நாடாளுமன்ற தேர்தல், சட்டப்பேரவைத் தேர்தல், வேல் யாத்திரை எனத் தொடர்ச்சியாக ஓய்வில்லாமல் கட்சி பணியாற்றியதை போல் வரும் உள்ளாட்சி தேர்தலிலும் தீவிரமாக உழைக்க வேண்டும். தொடர்ந்து கடுமையாக உழைத்தால் தமிழகத்தில் பாஜக ஆட்சி அமையும்" என்று நம்பிக்கை தெரிவித்திருந்தார்.

   அறிவிப்புகள்

  அறிவிப்புகள்

  இந்நிலையில், உள்ளாட்சி தேர்தலில் பாஜக தனித்து போட்டியிடுமா? கூட்டணி வைத்து போட்டியிடுமா? என்பதெல்லாம் 2 நாட்களில் தெரிந்துவிடும்... அதுமட்டுமல்ல, திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்தே, பாமகவின் நிலைப்பாடுகளிலும் மாற்றம் தென்பட துவங்கியது. முதல்வரும், வன்னியர்களுக்கான இடஒதுக்கீடு, மணி மண்டபம் என அடுத்தடுத்து பல்வேறு அசத்தலான அறிவிப்புகளை வெளியிட்ட நிலையில், பாமகவின் கூட்டணி முடிவு கணிக்கப்பட்ட ஒன்றாக இருந்தது. ஆனால், அதிமுகவோ, பெரிதும் ஆர்வம் காட்டாமல் உள்ள நிலையில், பாஜகவுடன் மீண்டும் இணைந்து தேர்தலை சந்திக்குமா என்பதும் எதிர்பார்ப்புக்குரிய ஒன்றுதான்.

  English summary
  BJP state president Annamalai said that after discussing with party executives, it will be announced in two days whether to form an alliance with the ADMK or not.
   
   
   
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X