சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சென்னை அமெரிக்க துணை தூதரகத்தின் ஜெனரலாக ஜூடித் ராவின் நியமனம்.. இன்று பதவியேற்பு!

Google Oneindia Tamil News

சென்னை: சென்னையில் இருக்கும் அமெரிக்க துணை தூதரகத்தின் அமெரிக்க தூதரக ஜெனரலாக ஜூடித் ராவின் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இன்று காலை அவர் பதவியேற்றுக்கொண்டார்.

சென்னையில் இருக்கும் அமெரிக்க துணை தூதரகத்தின் அமெரிக்க தூதரக ஜெனரலாக ராபர்ட் ஜி புர்கேஸ் இருந்தார். இவரின் பதவிக்காலம் முடிந்த நிலையில் தற்போது தூதரக ஜெனரலாக ஜூடித் ராவின் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

Judith Ravin Becomes Consul General of US in Chennai

இன்று காலை அவர் பதவியேற்றுக்கொண்டார். இது தொடர்பாக பேட்டி அளித்துள்ள ஜூடித் ரேவின், சென்னையில் இந்த பொறுப்பை ஏற்பது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. தென்னிந்தியாவிற்கு அமெரிக்காவின் பிரதிநிதியாக இருப்பது சந்தோசம் தருகிறது.

அதிலும், கொரோனா காலத்தில் நான் இந்த பொறுப்பை ஏற்றுள்ளேன். கண்டிப்பாக சிறப்பாக எனது பணியை செய்வேன். கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு, புதுச்சேரி, அந்தமான் நிக்கோபார், லட்சத்தீவுகளுக்கான பிரநிதியாக திறமையாக செயல்படுவேன் என்று ஜூடித் ராவின் குறிப்பிட்டுள்ளார்.

ஜூடித் ராவின் இதற்கு முன் லீமா, பெருவில் அமெரிக்க தூதரகத்தின் பொது விவகாரத்துறை கவுன்சிலராக இருந்தார். அதேபோல் சர்வதேச உறவுகள் அலுவலக ஜெனரலாக வாஷிங்க்டனில் இவர் பணியாற்றி இருக்கிறார். மேலும் பாகிஸ்தான், டொமினிக்கன் குடியரசு, சூடான், கேமரூன், மெக்சிகோ ஆகிய நாடுகளில் இவர் பல்வேறு தூதரக, ராஜாங்க பணிகளை அமெரிக்கா அரசு சார்பாக பார்த்து இருக்கிறார்.

தமிழகத்தில் ஆன்லைன் வகுப்புகள் கட்டாயம் அல்ல.. பள்ளிக்கல்வி ஆணையர் அதிரடி.. கிடுக்கிப்பிடி உத்தரவுதமிழகத்தில் ஆன்லைன் வகுப்புகள் கட்டாயம் அல்ல.. பள்ளிக்கல்வி ஆணையர் அதிரடி.. கிடுக்கிப்பிடி உத்தரவு

ஜூடித் ராவின் தனது இளங்கலை படிப்பை பிரான்ஸ், ஸ்பெயின் மற்றும் அமெரிக்காவில் முடித்தார். அதேபோல் ரோமன் மொழி மற்றும் இலக்கியத்தில் ஹார்வேர்ட் பல்கலையில் இவர் முதுகலை படித்துள்ளார். ஆங்கிலம் அல்லாமல் இவர் ஸ்பானிஷ், பிரென்ச் மொழிகள் தெரிந்தவர்.

2003ல் இவர் அமெரிக்காவின் டிபார்ட்மென்ட் ஆப் ஸ்டேட்டில் சேரும் முன் இவர் ஆசியா, ஆப்ரிக்கா, லத்தீன் அமெரிக்கா ஆகிய நாடுகளில் எடிட்டர், மொழிபெயர்ப்பாளர், பத்திரிகையாளர் பணிகளை செய்து இருக்கிறார். Beyond Our Degrees of Separation: Washington Monsoons and Islamabad Blues (2017) என்ற புத்தகத்தின் துணை எழுத்தாளர் மற்றும் Ballet in the Cane Fields: Vignettes from a Dominican Wanderlogue (2014) என்ற புத்தகத்தின் எழுத்தாளர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜூடித் ராவின் தற்போது சென்னையில் அமெரிக்க துணை தூதரகத்தின் அமெரிக்க தூதரக ஜெனரலாக தனது பணியை தொடங்கி உள்ளார்.

English summary
Judith Ravin Becomes Consul General of US in Chennai today.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X