5 ஆண்டுகள் ஓடிவிட்டன.. கருணாநிதி நினைவு தினம்.. முதலமைச்சர் ஸ்டாலின் இன்று சென்னையில் அமைதிப் பேரணி
சென்னை: தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சரும், திமுக தலைவருமான கருணாநிதி மறைந்து இன்றோடு 5 ஆண்டுகள் நிறைவடையும் நிலையில் அவரது நினைவு தினத்தை முன்னிட்டு முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் சென்னையில் இன்று அமைதிப் பேரணி நடைபெற உள்ளது.
தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சரும், திமுக முன்னாள் தலைவரும், இந்தியாவின் முதுபெரும் அரசியல் தலைவருமாக திகழ்ந்தவர் கருணாநிதி. நவீன தமிழ்நாட்டின் சிற்பி என்று போற்றப்படும் இவர் 1924 ஆம் ஆண்டு ஜூன் 3 ஆம் தேதி பிறந்தார். இந்த ஆண்டு ஜூன் 3 ஆம் தேதி முதல் கருணாநிதி நூற்றாண்டு விழா தமிழ்நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

அடுத்த ஆண்டு ஜூன் 3 ஆம் தேதி வரை இந்த நூற்றாண்டு விழாவை கொண்டாட திட்டமிடப்பட்டு இருக்கிறது அரசு. இந்த நிலையில் கருணாநிதியின் 5 ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. கடந்த 2018 ஆம் ஆண்டு ஆகஸ்டு 7 ஆம் தேதி அவர் காலமானார்.
அவர் மறைந்து இன்றோடு 5 ஆண்டுகள் நிறைவடைகின்றது. இந்த நிலையில் தமிழ்நாடு முழுவதும் கருணாநிதியின் 5 வது ஆண்டு நினைவு தினத்தை திமுகவினர் கடைபிடிக்க உள்ளார்கள். தலைநகர் சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி நடைபெறுகிறது.
சென்னை அண்ணா சாலையில் அமைந்து உள்ள ஓமந்தூரார் தோட்ட வளாகத்தில் இருக்கும் கருணாநிதியின் சிலையில் இருந்து திமுகவினர் முதலமைச்சர் முக ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி புறப்பட்டு செல்லும். இந்த பேரணி மெரினா கடற்கரையில் உள்ள கருணாநிதியின் நினைவிடம் நோக்கி செல்லும் அங்கு முதலமைச்சர் முக ஸ்டாலின் கட்சி நிர்வாகிகளுடன் மலரஞ்சலி செலுத்த உள்ளார்.
இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், திமுக மூத்த நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர். அதன் தொடர்ச்சியாக கோபாலபுரத்தில் உள்ள கருணாநிதியின் வீடு மற்றும் சிஐடி காலனியில் இருக்கும் அவரது வீட்டுக்கு சென்று முதல்வர் முக ஸ்டாலின் அஞ்சலி செலுத்துகிறார்.
-
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
அம்மாவை இழந்த அஜித்துக்கு மு.க. ஸ்டாலின் ஆறுதல்.. ஒரு வரியில் சொன்ன நெகிழ்ச்சி வார்த்தை.. குவியும் பாராட்டு -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க!












Click it and Unblock the Notifications