ரூ.10000 கோடி.. பேஸ்மெண்டில் என்ன நடந்தது? அண்ணாமலை மீது கல்யாண ராமன் திடுக் புகார்!
சென்னை: பாஜக தலைவர் அண்ணாமலை மீது ஏற்கனவே கடுமையான புகார்களை வைத்தவர் கல்யாண ராமன். கட்சியில் இருந்து நீக்கப்பட்ட கல்யாண ராமன் தற்போது அண்ணாமலை மீது மேலும் சில திடுக்கிடும் புகார்களை அடுக்கி உள்ளார்.
அண்ணாமலை மீது அவர் வைத்துள்ள புகார்கள் பின்வருமாறு, 10000 கோடிகள் அண்ணாமலை கொள்ளையடித்தாக திருச்சி சூர்யா குற்றம் சாட்டுவதை பார்த்த பின்னர் வரும் முதல் கேள்வி ஏன் அண்ணாமலை மௌனம் காக்க வேண்டும்?! சூர்யா கூறியதில் எனக்கு முழுமையான நம்பிக்கை இல்லாவிட்டாலும் நிச்சயமாக அந்த தொகை மூன்று பூஜ்ஜியங்களை கொண்டதாக இருக்கும் என்பதை நான் அறிவேன். காரணம் ஆரம்ப காலத்தில், இஜட் கேட்டகிரி பாதுகாப்பு வருவதற்கு முன்பே ரெசிடென்சி ஓட்டலில் காபி சாப்பிட செல்வதாக சென்று பேஸ்மெண்டில் ஒளிந்து இருந்த காரில் சென்று மருமகனை மூன்று முறை சந்தித்து செய்து கொண்ட பாஜக-அதிமுக கூட்டணியை முறிப்பேன் என்ற ஒப்பந்தம்.

அக்கா தமிழிசை மீது வன்மத்தை கக்க வேண்டும் என தன்னை தூண்டியது அண்ணாமலை என்று சூர்யா கூறுவதில் உண்மை இருப்பதாகவே பார்க்கிறேன். அப்படி என்றால் அண்ணாமலை ஒரு பயந்தாங்கொள்ளி என்பது தெளிவாகிறது.
அண்ணாமலை செயல்பாடு: தனக்கு தகுதியை மீறி கிடைத்த பதவியை காப்பாற்றிக் கொள்ள போட்டியாக பிற்காலத்தில் வரவாய்ப்புள்ள நபர்களை கட்சியில் இருந்து ஓரம்கட்ட வேண்டும் என அண்ணாமலை திட்டமிட்டது கட்சிக்குள் அனைவருக்கும் தெரியும், அதில் ஓரளவு வெற்றியும் பெற்ற நிலையில் புதிதாக திரும்ப வந்த டாக்டர் தமிழிசை தனக்கு தலைவலியாக வருவார் என்பதால் அவரையும், மாநில தலைவருக்கு தகுதியான நபராக அறியப்படும் பேராசிரியர் சீனிவாசன் அவர்களையும் சூர்யா தொடர்ந்து தாக்கியது எப்படி?! கட்சிக்குள் ரகசியமாக மாநில தலைவருக்கு புகாராக வந்த ஆடியோக்கள் சூர்யாவிடம் சென்றது எப்படி?!
கடந்த சுமார் 44 ஆண்டுகளில் வன்னியர், முக்குலத்தோர், தேவேந்திர குல வேளாளர்கள் என தமிழகத்தின் ஒட்டு மொத்த மக்கள் தொகையில் சுமார் 35-40% மக்களை கொண்ட இந்த முப்பெரும் சமுதாயங்களுக்கு முக்கியத்துவம் வழங்க வேண்டும் என தலைமை ஆலோசித்து வரும் நிலையில் முக்குலத்தோரில் முக்கிய நபராக அறியப்படும் அண்ணன் நயினார் நாகேந்திரன் மீது 4 கோடி பணம் குறித்த பிரச்சனை உருவாக காரணம் யார்?!
மோசமான திட்டம்: ஆலமரத்தின் கீழ் எதுவும் முளைக்காது; அண்ணாமலையின் தலைமையின் கீழ் பாஜக வளராது. அண்ணாமலையின் தகுதிக்கு சுடுகாட்டிற்கு தான் தலைவனாக இருக்க முடியும். ஏனென்றால், அங்குதான் கேள்வி கேட்காத ஜடங்கள் இருக்கும். அதிகபட்சம் அடிமைகளை வைத்து அண்ணாமலையால் கட்சி நடத்த முடியும்.
அண்ணாமலை அதிமுக பக்கம் திரும்பி விடக்கூடாது என்பதால் அதை கவனித்துக் கொள்ளும் பொறுப்பு ரவீந்திரன் துரைசாமி மற்றும் ஜெ. வி. சி, ஸ்ரீராம் அகியோருக்கு திமுகவால் வழங்கப்பட்டது. அவர்கள் இருவரும் அண்ணாமலையால தமிழகமே மாறப்போகிறது என்ற பிம்பத்தை வெறும் சமூக வலைத்தளங்களை வைத்து கட்டமைக்க முயற்சித்தனர். அதே நேரத்தில் சுயநலத்திற்காக, தன்னுடைய சொந்த அரசியல் வளர்ச்சிக்காக எதையும் செய்ய தயாராக உள்ள அண்ணாமலை தவறியும் அதிமுக பக்கம் சென்றுவிடாமல் பார்த்துக் கொண்டனர். அண்ணாமலையின் அறிவுக் குறைபாட்டிற்கு ஆதாரம் அண்ணாமலை நம்பிய ரவீந்திரன் துரைசாமியும், ஸ்ரீராமும் தான்.
என்ன செய்தார்?: இங்கே ஒரு வரலாற்று நிகழ்ச்சியை சொல்ல வேண்டும். தனியார் டிவி அலுவலகம் எழும்பூரில் இருந்தபோது நடந்த ஒரு விவாதத்தின்போது அன்றைய பாரத பிரதமரையும், தேசிய தலைவர் அமித்ஷாவையும் ஒருமையில் பேசியவன் தான் இந்த ரவீந்திரன் துரைசாமி. இன்று தன்னை இந்துத்துவ ஆதரவாளனாக காட்டிக் கொள்ளும் சாமர்த்தியம் பிரமாதம். ஆடு கசாப்புக் கடைக்காரனை நம்புவது போல அண்ணாமலை நம்பியதில் பெரிதாக ஆச்சரியம் ஒன்றுமில்லை
நான் முன்பே கூறியது தான். கோவை குண்டு வெடிப்பு சம்பவம், கூட்டணி உடைப்பு, ரகசிய வீடியோக்கள் என அனைத்தையும் திட்டமிட்டு செய்தது அண்ணாமலை தான். சீனியர்களை தனிப்பட்ட முறையில் அழைத்து அவமானப்படுத்தியது, மிரட்டியது என அண்ணாமலை செய்த பல செயல்களின் பின்னால் இருப்பது அண்ணாமைக்கு உள்ள "Sociopath" என்ற மனோவியாதி.
10000 கோடிகள் அண்ணாமலை கொள்ளையடித்தாக திருச்சி சூர்யா குற்றம் சாட்டுவதை பார்த்த பின்னர் வரும் முதல் கேள்வி ஏன் அண்ணாமலை மௌனம் காக்க வேண்டும்?! சூர்யா கூறியதில் எனக்கு முழுமையான நம்பிக்கை இல்லாவிட்டாலும் நிச்சயமாக அந்த தொகை மூன்று பூஜ்ஜியங்களை கொண்டதாக இருக்கும் என்பதை நான்…
— Kalyan Raman (மோடியின் குடும்பம்) (@KalyaanBJP_) July 16, 2024
அந்த வியாதியின் வெளிப்பாடுகளில் ஒன்று தான் வாய்கூசாமல் பொய் பேசுவது!!!
20000 புத்தகங்கள் படித்திருக்கிறேன், 2 லட்சம் வழக்குகளை பார்த்திருக்கிறேன், 600 கற்பழிப்பு வழக்குகளை கையாண்டு இருக்கிறேன் என வாய்கூசாமல் பொய் பேசி இதன் மூலமாக தன்னை ஒரு ஹீரோவாக சமூகம் பார்க்கும் என மனப்பிராந்தி அண்ணாமலை என்ற நபரின் அடிநாதம்.
ஒரு பைத்தியத்தின் கீழ் வேலை செய்வது என்பது கடினமான காரியம் என்பது பாஜகவின் அனைத்து தலைவர்களின் ஒட்டுமொத்த கருத்து. அதைத்தான் நான் பிரதிபலிக்கிறேன், என்று கல்யாண ராமன் குறிப்பிட்டு உள்ளார்.
-
லாஸ்ட் சான்ஸ்.. பாஜக வேண்டவே வேண்டாம்.. அண்ணாமலையை டெல்லியிலேயே லாக் செய்த மேலிடம்.. ஏன் தெரியுமா? -
அமித் ஷாவுக்கே அடங்காத அண்ணாமலை! சைலண்டாய் டெல்லியில் பார்த்த வேலை! ஆர்வக்கோளாறில் ஆதரவாளர்கள்! -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
சிங்கம் ஒன்று புறப்பட்டதே.. அண்ணாமலைக்கு ஷிப்ட் ஆன ரஜினிகாந்த் ரசிகர்கள்.. தவெக இதை எதிர்பார்க்கல -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
அண்ணாமலைக்கு, விஜய் கொடுத்த நம்பிக்கை! பாஜகவிற்கு ‘குட்பை' கூறி புது கட்சி தொடங்குவது ஏன்? பின்னணி -
அண்ணாமலை கைகளை பிடித்த அஜித், ரஜினி.. மதுரையில் பரபரக்கும் போஸ்டர்களால் அதிரும் அரசியல் களம்! -
அப்போ ரஜினிக்கு பதில் அண்ணாமலை.. இனி விஜய், உதயநிதிக்கு மாற்றாக மாற முடியுமா?












Click it and Unblock the Notifications