திமுகன்னா நேரா போட்றீங்க.. பாஜகன்னா சுத்தி வளைக்கறீங்க.. நேரா சொல்ல பயமா ஆண்டவரே.. நெட்டிசன்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: திமுக, அதிமுகவை நேரடியாக விமர்சிக்கும் மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் பாஜக, ஆர்எஸ்எஸ் என்றால் பெயரை குறிப்பிடாமல் மறைமுகமாக விமர்சிக்கிறார் என நெட்டிசன்கள் விமர்சித்துள்ளார்கள்.

ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அதிமுக ஆட்சியை கமல்ஹாசன் கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். டெங்கு காய்ச்சல் தொடங்கி கொரோனா வரை, நீட் முதல் மாநில பட்டியலில் கல்வி வரை அனைத்து தரப்பு விஷயங்களையும் நேரடியாக கமல்ஹாசன் விமர்சித்திருந்தார்.

Kamal Haasan was questioned by netisans for not directly mentioning BJP

ஆனால் பாஜகவை மட்டும் பட்டும்படாமல் கமல் விமர்சித்து வந்ததாக சொல்லப்பட்டது. சட்டசபை தேர்தலில் கூட திமுக, அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்படாத திட்டங்கள் குறித்தே கமல்ஹாசன் பிரச்சாரத்தில் முன்வைத்திருந்தார்.

இந்த நிலையில் தமிழக சட்டசபைத் தேர்தலில் திமுக கூட்டணி ஆட்சியை கைப்பற்றியது. இதையடுத்து முதல் கையெழுத்தாக கொரோனா நிவாரணம், ஆவின் பால் குறைப்பு, நகர பேருந்துகளில் மகளிருக்கு இலவச பஸ் பயணம் உள்ளிட்ட திட்டங்களுக்கு முதல்வர் ஸ்டாலின் கையெழுத்திட்டிருந்தார்.

திமுக தேர்தல் அறிக்கையின் முக்கிய வாக்குறுதியான இல்லத்தரசிகளுக்கு ரூ 1000 உரிமைத் தொகை, சமையல் கேஸ் சிலிண்டர் மானியம் ரூ 100 உள்ளிட்டவை குறித்து திமுக அரசு நிறைவேற்றாதது குறித்து அதிமுக ஆர்ப்பாட்டம் நடத்தியது. கமல்ஹாசனோ, 90 நாட்களாகியும் பெண்களுக்கு மாத உரிமைத் தொகை திட்டம் இன்னும் செயல்படுத்தவில்லை.

அதை உடனடியாக செயல்படுத்துங்கள் கோரிக்கை விடுத்திருந்தார். இந்த நிலையில் அவர் திமுகவின் சாயம் வெளுத்துவிட்டது என நேற்றைய தினம் ஒரு ட்வீட் போட்டுள்ளார். அதில் கொரானாவில் தேர்தல் நடக்கும், வாக்கு எண்ணிக்கை நடக்கும், பதவி ஏற்பு விழா நடக்கும், சட்டமன்றம் நடக்கும், உள்ளாட்சித் தேர்தலுக்கான முஸ்தீபுகள் நடக்கும். ஆனால், கிராம சபை மட்டும் நடக்காது. அதிமுகவிற்கும், திமுகவிற்கும் எந்த வித்தியாசமும் இல்லை.

முந்தைய ஆட்சியில் கிராம சபை நடத்த தொடுத்த வழக்கை திமுக ரகசியமாக வாபஸ் பெற்றுக் கொண்டபோதே இந்த அரசும் கிராம சபைகளைக் கண்டு அஞ்சுகிறது என்பதைப் புரிந்துகொண்டோம். திமுகவின் சாயம் வெளுத்துவிட்டது என கடுமையாக விமர்சித்திருந்தார். அது போல் இந்த ட்வீட்டுக்கு முன்னர் மத்திய அரசை விமர்சித்து ஒரு ட்வீட் போட்டுள்ளார்.

அதில் ஊடகங்களை எதிர்கொள்ள மாட்டோம், விவாதங்களுக்கு அனுமதிக்க மாட்டோம், மாற்றுக் கட்சித் தலைவர்களின் ட்வீட்டர் அக்கவுண்டுகளை முடக்குவோம். இது போன்ற வீர தீர போர்ப்பயிற்சிகளை இவர்கள் எங்கே பெற்றார்கள்? என குறிப்பிட்டுள்ளார். மத்திய அரசை விமர்சித்துள்ள கமல் மற்ற ட்வீட்டுகளை போல் பாஜக அரசு என குறிப்பிடவில்லை.

இதை நெட்டிசன்கள் கேள்வி எழுப்பியுள்ளார்கள். அதில் ஒருவர் திமுகவின் B Team என்று ADMK மற்றும் BJPயும் பிஜேபியின் B Team என்று DMKவும் இவரை மாறி மாறி குற்றம் சாட்டின. ஆனால் இவர் மய்யமாக நின்று இரண்டு (மத்திய, மாநில) ஆட்சியாளர்களும் செய்யும் தவறுகளை மிக தைரியமாக பதிவிடுகிறார். MNM தலைவரின் நேர்மையான பதிவிற்கு ஒரு ராயல் சல்யூட் என கமலை பாராட்டியிருந்தார்.

அதற்கு இன்னொருவர் அட யாரன்னு சொன்னாத்தான் என்னவாம்!
திமுகன்னா மட்டும் திமுகன்னு போடத்தெரியுது ஆனா #RSS #BJP ன்னா மட்டும் சுத்திவளச்சி,ஒடச்சின்னு எழுதுறேல் ஆனா இறுதிவரை பிஜேபி அரசுன்னு சொல்லமாட்டீங்க ஆண்டவரே! நாங்களே புரிஞ்சுக்கணும் இம்புட்டு பயமா அவெங்களுக்கு! So Sad ஆண்டவா So Sad ஆண்டவா! என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

ஆண்டவரே டிவிட்டர் ஒன்னும் பிஜேபி கட்சி இனையம் இல்லை இதே காங்கிரஸ் ஜாக் இந்திய வருகையை கொண்டாடியது.. வரலாறு அப்படி இருக்க நடுவுல நீங்க ஏன் ஆண்டவரே என்கிறார் இன்னொரு நெட்டிசன்.

பாஜகனு சொல்ல என்னாசார் பிரச்சினை உங்களுக்கு என்கிறார் நெட்டிசன்.

யாரு? எந்த கட்சி? யாரை நோக்கியை கேள்வி ஒன்றும் இல்லை என்ன ஒரு வீரதீர செயல் ? யாரிடம் கேற்கிறோம் என்றாவது சொல்லிட்டு கேளுங்க சார்

யாரோ எவரோ
நமக்கு எதுக்கு .. ஆண்டவரே.
கடைசி வரை அது யாருன்னு சொல்ல ல.but சொல்ல வரீங்க.

ஆம் ஆண்டவரே. உகாண்டா அதிபர் மிக மோசம்.

யாரென்று வெளிப்படையாக சொல்வதற்கு உங்களுக்கு ஏன் தயக்கம் ?

நம்மவரே, நானும் உங்கள் ரசிகன்தான். ஆனால், தங்களுக்கும் இந்த ட்வீட் லேசாக பொருந்துவது போல தோன்றுகிறது. நீங்கள் ஏன் எந்த ஒரு நேர்காணல் மற்றும் பத்திரிகை நிரூபரர்களைச் சந்திக்க தயங்குகிறீர்கள் என்று தெரிந்துகொள்ள ஆவலாய் உள்ளேன் !? (தேர்தலுக்கு பின்பு)

இவர்கள்னா யாரு?? சீனாகாரனா? இல்லை பாகிஸ்தான்காரனா? ஆளும் பாஜக அரசுனு சொல்ல என்ன பயம்??

ஆண்டவரே நீங்க யாரை சொல்றீங்களா அவங்களை நேரடியாக tag போட்டு சொல்லலாமே

யாரை சொல்றாரு, கைலாசா அரசையா? கமல் அவர்களே உங்கள் முதுகெலும்பு வேலை செய்கிறதா, உங்களால் பெயரை நேரடியாக குறிப்பிட முடியாதா, அரசியலில் வந்ததால் அனைவரின் மதிப்பையும் மரியாதையையும் நீங்கள் இழந்து விட்டீர்கள்.

எங்கயா கத்தக்கிட்ட இந்த வித்தை? இடஒதுக்கீட பறிச்ச பாஜக பேரும் வரல... வாங்கி கொடுத்த திமுக பேரும் வரல..

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+