சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தி.மு.க.வால் எங்களுக்கு மனவருத்தம் ஏற்பட்டது... உண்மையை போட்டு உடைக்கிறார் காமராஜர் பேத்தி!

Google Oneindia Tamil News

சென்னை; தமிழக தேர்தல் களம் உச்சக்கட்ட வேகத்தில் சென்று கொண்டிருக்கிறது. ஒவ்வொரு கட்சியும் வேட்பாளர்களை இறுதி செய்யும் பணி, இறுதிக்கட்ட பிரசார பயணத்தை வகுத்து வருகின்றன.

இந்த பரபரப்பான சூழ்நிலையில் பெருந்தலைவர் காமராஜரின் பேத்தி கமலிகா காமராஜருடன் பல்வேறு கேள்விகளை முன்வைப்போம் வாங்க.

 Kamarajs granddaughter has said We are saddened by the dmk

எதனை மையப்படுத்தி இந்த முறை வாக்கு சேகரிக்க போறீங்க?
நாட்டில் நடைபெறும் நல்ல விஷயங்கள் கெட்ட விஷயங்களை மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். மக்களுக்கு சொல்ல வேண்டியது ஏதுமில்லை. காங்கிரஸ் செய்ய போகும் விஷயங்களை வைத்துதான் வாக்கு சேகரிக்க போகிறோம்.

காங்கிரஸ், திமுக கொண்டு வந்த திட்டங்களை பாஜக காப்பியடிப்பதாக ஒரு குற்றச்சாட்டு பரவுகிறது. அதை எப்படி பார்க்கிறீங்க?
முந்தைய ஆட்சி கொண்டு வந்த நல்ல, நல்ல திட்டங்களை பாஜக மறைக்க பார்க்கிறது. எதை மறைத்தாலும் உண்மை ஒருநாள் வெளிவரும். இது தவறான செயல்.

தமிழகத்தில் காங்கிரசின் பலம் என்ன? எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறுவீர்கள்?
எங்களுக்கு கொடுத்த 25 தொகுதிகளிலும் நிச்சயம் வெற்றி பெறுவோம்.

காமராஜர், அண்ணா காலத்தின் அரசியல் நாகரிகம் இப்போது இருக்கிறதா?
அப்போதுள்ள தலைவர்கள் எல்லாம் மக்கள், நாட்டு நலனுக்காக போராடினார்கள். நலத்திட்டம் கொண்டு வந்தார்கள். இப்போதுள்ள தலைவர்கள் தங்கள் குடும்பத்துக்காக பாடுபடுகின்றனர். இதை காமராஜர் பேத்தியாக சொல்கிறேன்.

காங்கிரசுக்கு குறைவான தொகுதிகள்தான் ஒதுக்கப்பட்டுள்ளதா?
ஆமாம்... இது காங்கிரஸ் தொண்டர்களுக்கு மன வருத்தத்தை கொடுத்துள்ளது.

உங்களுக்கு எந்த தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கிடைத்துள்ளது?
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் தொகுதியை கேட்டுள்ளேன். அங்கு தாத்தா அதிகம் பயணித்து, மக்கள் நலப்பணிகள் செய்துள்ளார்.

காங்கிரஸ் தனியாக தேர்தல் அறிக்கை வெளியிட்டால் என்னென்ன திட்டங்கள் அறிவிக்கப்படும்?
ராகுல்காந்தி கூறியபடி எங்கு தேவை அதிகம் இருக்கிறதோ, அங்கு திட்டங்கள் கொண்டு சேர்க்கப்படும்.

காங்கிரஸ் கட்சியின் முக்கிய பிரமுகர்கள் தேர்தல் பிரசாரத்துக்கு வருவார்களா?
கண்டிப்பாக... ராகுல்காந்தி கண்டிப்பாக வருவார். பிரியங்கா காந்தி வருவதற்கு வாய்ப்புகள் உள்ளன.

நீங்கள் போட்டியிடும் தொகுதியின் வளர்ச்சிக்காக வைத்துள்ள திட்டங்கள் என்னென்ன?
ஆலங்குளம் தொகுதியில் அரசு மருத்துவமனை 8 மணி நேரம் மட்டுமே இயங்கி வருகிறது. அந்த மருத்துவமனை 24 மணி நேரமும் இயங்கும் வகையில் செய்வேன். அங்குள்ள ராமநதி, ஜம்மு நதியை இணைப்பேன். இதனால் பல ஏக்கர் விவசாய நிலங்கள் பயனடையும்.

ஒதுக்கப்பட்டுள்ள தொகுதிகள்.. குறைவானது என்ற குறை இருக்கிறது.. கே பாலகிருஷ்ணன் பளீச் பேட்டிஒதுக்கப்பட்டுள்ள தொகுதிகள்.. குறைவானது என்ற குறை இருக்கிறது.. கே பாலகிருஷ்ணன் பளீச் பேட்டி

புதுவையில் காங்கிரஸ் ஆட்சி கவிழ காரணம் என்ன?
வெளியேறிய 4 எம்.எல்.ஏ.க்களும் ஆட்சி மீது அதிருப்தி கொண்டிருந்தால், முதலிலேயே வெளியேறி இருப்பார்கள். தற்போது தேர்தல் வரும் நேரத்தில் வெளியேறியது சந்தேகமாக உள்ளது. இதற்கு பின்னால் யார் இருக்கிறார்கள்? என்பது மக்களுக்கு தெரியும்.

சட்டமன்றத்தில் பெண்களுக்கு சம உரிமை குறித்து மத்திய அரசுதான் முடிவெடுக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. இது பற்றி உங்கள் கருத்து என்ன?
பெண்களுக்கு சம உரிமை என்பது ஒரு சில இடங்களில் வந்து கொண்டிருக்கிறது. ஆனால் ஒரு சில இடங்களில் பின்னோக்கி தள்ளப்படுகிறது. இதில் சீக்கிரம் நல்ல முடிவு கிடைத்தால் சந்தோஷப்படுவேன்.

அரசியலில் இன்னும் கூடுதல் பெண்கள் வரவேண்டும் என்று நினைக்கீறீர்களா?
கண்டிப்பாக இன்னும் நிறைய பெண்கள் அரசியலுக்கு வர வேண்டும்.

பெண் ஐ.பி.எஸ் மீது பாலியல் புகார் வந்துள்ளது? தமிழகத்தில் பெண்கள் பாதுகாப்பு நிலை எந்தளவில் உள்ளது?
தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. இதுபோல் புகார்கள் சொல்கிறவர்கள் பாதி பேர் உள்ளனர். ஆனால் இதை சொல்லாமல் மீதி பேர் உள்ளனர். இதுபோல் புகார்கள் வரும்போது அதை கிடப்பில் போடாமல் உடனடியாக நடவடிக்கை எடுத்தால், இந்த அரசை பெண்கள் தூக்கி வைத்து கொண்டாடுவார்கள்.

English summary
The Tamil Nadu constituency is going at a peak pace. Each party is finalizing the candidates and paving the way for the final campaign.In this turbulent situation we will ask various questions with Granddaughter Kamaraj’s granddaughter Kamalika Kamaraj
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X