இருக்கும்போது செய்தேன்.. இப்ப என்கிட்ட காசு இல்லை.. நடிப்பை தொடங்கினால்தான் எல்லாம்.. கருணாஸ் பளீச்
சென்னை: பதவியிலிருந்த போது நிறைய செய்தேன். ஆனால் இப்போது என்னிடம் பணம் இல்லாததால் கொரோனா காலத்தில் மக்களுக்கு நிவாரணங்களை அளிக்க முடியவில்லை என முன்னாள் எம்.எல்.ஏ. கருணாஸ் தெரிவித்துள்ளார்.
Recommended Video
திருவாடாணை தொகுதியின் எம்எல்ஏவாக இருந்தவர் கருணாஸ். இவர் முக்குலத்தோர் புலிகள் படையின் தலைவராக இருப்பவர். இவர் சமூக மக்களுக்கு இடஒதுக்கீடு கிடைக்க பாடுபட்டவர்.
இதுகுறித்து நடிகரும் முன்னாள் எம்எல்ஏவுமான கருணாஸ் ஒன் இந்தியா தமிழுக்கு அளித்த பேட்டி கேள்வி பதில் வடிவில்:

தமிழகத்தில் விடியல்
கே: தமிழகம் விடியலை நோக்கித்தான் செல்கிறதா
ப: ஆமாம், ஊழல்வாதிகளுக்கு தண்டனை கிடைக்கிறது என்றால் பதவியில் உள்ள அடுத்த அமைச்சர்கள் அதே தவறை செய்ய யோசிப்பார்களே. அதிமுக செய்த ஊழலையே திமுகவும் செய்தால் இந்த கட்சிக்கு மக்களிடத்தில் என்ன வரவேற்பு இருக்கும்? மேயர், உள்ளாட்சி துறை அமைச்சர், துணை முதல்வர் உள்ளிட்ட பதவிகளை வகித்த ஸ்டாலின் இன்று ஒட்டுமொத்தமாக முதல்வராக பதவியேற்று அவர் அறிவித்த அறிவிப்புகள் , மக்களுக்கான திட்டங்கள்தான் எதிர்காலத்தில் இந்த திமுக எத்தனை ஆண்டுகள் தமிழகத்தில் காலூன்றி நிற்க போகிறது என்பதை தீர்மானிக்கும் 5 ஆண்டுகளாக இதை பார்க்கிறேன். எனவே தளபதி சொன்னதை செய்வார் என நம்புகிறேன்.

தொகுதி
கே: முன்னாள் எம்எல்ஏவாக இருக்கும் நீங்கள் உங்கள் தொகுதிக்கு என்ன செய்தீர்கள், தற்போது ஏதேனும் செய்கிறார்கள்
ப: என் தொகுதிக்கு கொடுக்க மேம்பாட்டு நிதி அனைத்தையும் முழுவதுமாக தொகுதிக்கு பயன்படுத்திவிட்டேன். என் கோரிக்கையை ஏற்று ராமநாதபுரத்தில் சட்டக் கல்லூரி, திருவாடாணையில் ஆசியாவில் மிகப் பெரிய கன்மாயை ரூ 18 கோடி நிதியில் தூர்வாரி கடந்த அரசாங்கம் சீரமைத்து தந்துள்ளார்கள். பெரும்பாலான மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரி இருக்கும் போது எனது திருவாடாணை தொகுதியிலும் மருத்துவக் கல்லூரியை கொண்டு வர நான் பாடுபட்டதும் அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கும் சுகாதாரத் துறை அமைச்சராக இருந்த விஜயபாஸ்கருக்கும் தெரியும். இதை நான் போராடி பெற்றுக் கொடுத்தேன், காலத்திற்கு அழியாத திட்டங்கள். இதெல்லாம் பதவியில் இருந்த போது செய்தேன்.

முற்றுப்புள்ளி
ஆனால் கொரோனா காலத்தில் நான் பதவியில் இல்லாத போது லட்சக்கணக்கில் செலவு செய்து நிவாரணம் அளிக்கும் அளவுக்கு என்னிடம் காசு இல்லை. எனக்கு வேறு தொழில் இல்லை. நடித்துக் கொண்டிருந்தேன், ஜெயலலிதா சீட்டு கொடுத்தார், போட்டியிட்டு வென்றேன், அத்துடன் நடிப்புக்கு முற்றுப்புள்ளி வைத்தாகிவிட்டது. இப்போது எனக்கு என்ன தொழில் தெரியும்.

அப்படியல்ல
கே: ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்கு மட்டும்தான் நீங்கள் குரல் கொடுப்பீர்களா, இல்லை அனைத்து தரப்பினருக்கும் குரல் கொடுப்பீர்களா
ப: அப்படியில்லை. நான் 10 ஆம் வகுப்பு படிக்கும் போது 1985 ஆம் ஆண்டு ஈழ விடுதலைக்காக கொடிகளை விற்று அந்த பணத்தை தலைமைக்கு அனுப்பிய வரலாறு இருக்கிறது. இறுதி போரின் போது ராமேஸ்வரத்தில் நடிகர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்தோம். ஆனால் நடிகர் சங்கத்தில் இருந்த சரத்குமாரும் ராதாரவியும் பாதுகாப்பு இல்லை என கூறி அனுமதி அளிக்க மறுத்துவிட்டனர். எனினும் நடிகர் சங்கத்தின் உத்தரவை மீறி நான் தனிநபராக சென்று ஆர்ப்பாட்டம் நடத்தினேன். அந்த மேடையில் நானும் நான் சார்ந்த எனது இனமும் , மொழியும் , நிலமும் ராஜபக்சே என்ற ஒருவரால் அழிக்கப்படுமேயானால், அவர் அழிந்தால், எனது இனமும் மொழியும் நிலமும் காக்கப்படும் என சொன்னால் அதற்கான தற்கொலைப்படையாக செல்ல இந்த கருணாஸ் தயார் என அந்த மேடையில் பேசினேன்.
நான் உருவாக்கியது அல்ல
ஜாதி என்பது நான் உருவாக்கியது அல்ல. அது அரசியலமைப்பு சட்டத்தில் இருக்கிறது. ஜாதி முக்கியம் இல்லை என்றால் அதை ஏன் அரசியலமைப்பில் உருவாக்க வேண்டும்? அரசால் அறிவிக்கப்பட்ட ஜாதி ரீதியிலான சலுகைகள், இடஒதுக்கீட்டை மற்றவர்கள் பெறும் போது நான் சார்ந்த ஜாதி மக்களும் அதை பெற வேண்டும் என நினைப்பதில் என்ன தவறு இருக்கிறது? மாற்று சமூகத்திற்கு ஏன் சலுகைகள் என நான் கேட்கவில்லை, எல்லாருக்கும் கொடுங்கள், என் சமூகத்திற்கும் கொடுங்கள் என்றுதான் நான் கேட்கிறேன் என்றார்.












Click it and Unblock the Notifications