தேவர் திருமகன் மீது முரட்டு நேசம்! முத்துராமலிங்க தேவருக்கு வைரமுத்து மரியாதை! அப்படியே ஒரு கோரிக்கை
சென்னை : இந்த மண்ணின் ஆதி அதிகாரக் குடிகளைக் கைரேகைச் சட்டத்தின் கைவிலங்கொடித்து மீட்டுக்கொடுத்த தேவர் திருமகன் மீது முரட்டு நேசம் கொண்டிருக்கிறோம் என பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தியையொட்டி கவிஞர் வைரமுத்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 115 வது ஜெயந்தி விழா மற்றும் 60 ஆவது குருபூஜை நடைபெறுகிறது. இதையொட்டி ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் உள்ள முத்துராமலிங்கத் தேவரின் நினைவிடத்தில் ஜெயந்தி விழா மற்றும் குருபூஜை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.

பசும்பொன்னில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் நினைவிடத்தில் தமிழக அரசின் சார்பில் அமைச்சர்கள் மரியாதை செலுத்தினர். இதேபோல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் தேவர் சிலைக்கு மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு கவிஞரும் எழுத்தாளருமான கவிஞர் வைரமுத்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், மதுரை விமான நிலையத்திற்கு தேவர் பெயரை சூட்ட வேண்டும் என்று மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்தார்.
மேலும் தேவர் ஜெயந்தியையொட்டி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள வைரமுத்து," இந்த மண்ணின் ஆதி அதிகாரக் குடிகளைக் கைரேகைச் சட்டத்தின் கைவிலங்கொடித்து மீட்டுக்கொடுத்த தேவர் திருமகன் மீது முரட்டு நேசம் கொண்டிருக்கிறோம் சாதிய அடையாளம் தாண்டி அவர் தேசிய அடையாளம் கொண்டவர் என்று எட்டுத்திசையும் கொட்டடிப்போம் சிங்கம் மாலைசூடிப் பார்த்ததுண்டா?இப்போது பாருங்கள்" என பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications