அதிமுக பொதுச் செயலாளர் தேர்தல்.. ஓபிஎஸ், ஈபிஎஸ், சசிகலாவுக்கு அழைப்பு.. குண்டு போட்ட கேசி பழனிசாமி!
சென்னை : அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதவாக்கில் 25 லட்சம் தொண்டர்களைத் திரட்டி அதிமுக பொதுச் செயலாளர் தேர்தலை நடத்தப்போவதாகவும் அதில், எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் என யார் வேண்டுமானாலும் போட்டியிடலாம் எனக் கூறி பரபரப்பைக் கிளப்பி இருக்கிறார் கே.சி.பழனிசாமி.
அதிமுகவில் ஓபிஎஸ் - ஈபிஎஸ் இடையே நிலவி வரும் மோதல் போக்குக்கு மத்தியில் தனி ரூட் பிடித்து டார்கெட்டை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறார் முன்னாள் எம்.பி கேசி பழனிசாமி.
ஓபிஎஸ், ஈபிஎஸ் இருவரையுமே காட்டமாக விமர்சித்து வருகிறார் எம்.ஜி.ஆர் காலத்திலேயே எம்.எல்.ஏவாக இருந்த கேசி பழனிசாமி. கேசி பழனிசாமியை தங்கள் அணிக்குக் கொண்டு வர ஓபிஎஸ் தரப்பினர் கடந்த சில மாதங்களாகவே முயற்சித்து வருகின்றனர்.
ஓபிஎஸ் தரப்புக்கு பிடி கொடுக்காத பழனிச்சாமி, தனது திட்டத்தை நோக்கி, தீவிரமாக நடைபோட்டுக் கொண்டிருக்கிறார்.

4 பக்கம்
அதிமுகவில் ஓபிஎஸ் - ஈபிஎஸ் இடையேயான மோதலால் பரபரப்பான சூழல் நிலவி வரும் நிலையில், திங்கட்கிழமையன்று ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமைக் கழகத்தில், மாவட்ட செயலாளர்கள், தலைமைக் கழக நிர்வாகிகள் கூட்டத்தை நடத்தினார் எடப்பாடி பழனிசாமி. அதேநேரம், ஓ.பன்னீர்செல்வம் அணியினர் தனியார் நட்சத்திர ஹோட்டலில் ஆலோசனைக் கூட்டம் நடத்தினர். ஒருபக்கம் சசிகலாவும், தனது ஆதரவாளர்களைச் சந்தித்து வருகிறார். இதற்கிடையே, முன்னாள் எம்.பி கேசி பழனிச்சாமி தொண்டர்களை ஒருங்கிணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

கேசி பழனிச்சாமி
அதிமுக கட்சி கட்டுப்பாட்டை மீறியதாக ஓபிஎஸ் - ஈபிஎஸ் இருவராலும் கூட்டாக கட்சியை விட்டு நீக்கப்பட்டவர் அதிமுக முன்னாள் எம்.பி கேசி பழனிசாமி. எம்.ஜி.ஆர் காலத்திலேயே எம்.எல்.ஏவாக இருந்தவர் கேசி பழனிசாமி. அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட நிலையில், தன்னை யாரும் கட்சியில் இருந்து நீக்க முடியாது எனக் கோரி, அதிமுக நிர்வாகி போலவே தற்போதும் மிகத் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறார் கேசி பழனிசாமி. தமிழகம் முழுவதும் பயணித்து பல இடங்களில் ஆலோசனைக் கூட்டங்களையும் நடத்தி வருகிறார் கேசிபி.

கேசிபி பிளான்
அதிமுகவுக்கு தலைமை தாங்க ஓபிஎஸ், ஈபிஎஸ் இருவருக்குமே தகுதி இல்லை என்று தொடர்ந்து பேசி வருகிறார். அதுபோக, ஜூம் மீட்டிங்குகளை நடத்தி அதிமுக தொண்டர்கள் மத்தியில் பேசி வருகிறார். இதுவரை 200க்கும் மேற்பட்ட ஜூம் மீட்டிங்குகளை நடத்தி இருக்கிறார் கேசிபி. எடப்பாடி பழனிசாமியை விரும்பாத அதிமுக தொண்டர்களை ஒன்றிணைத்து, அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கு தனியாக தேர்தல் நடத்தி, தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பித்து, இரட்டை இலை சின்னமும், கட்சியும் எங்களுக்குத்தான் என உரிமை கோரும் திட்டத்தோடு காய்களை நகர்த்தி வருகிறார் கேசிபி.

25 லட்சம் தொண்டர்கள்
இந்நிலையில் தனியார் செய்தி ஊடகத்திற்குப் பேட்டி அளித்துள்ள கே.சி.பழனிச்சாமி, "ஒரு லட்சம் தொண்டர்கள் களத்தில் பணியாற்றி வருகிறார்கள். 1 கோடி தொண்டர்களை ஒருங்கிணைப்பதற்கான வேலைகள் நடக்கின்றன. தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்வதற்கான படிவங்களை தயார் செய்து கொண்டிருக்கிறோம். அடுத்த ஆண்டு ஆகஸ்ட் முதல் அக்டோபர் மாதத்திற்குள் 25 லட்சம் அதிமுக தொண்டர்கள் ஓன்றுகூடி அதிமுக பொதுச் செயலாளர் தேர்தலை நடத்த இருக்கிறோம்.

ஈபிஎஸ்- ஓபிஎஸ் - சசிகலா
எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம், சசிகலா ஆகியோரும் அழைக்கப்படுவார்கள். அவர்களும் இந்த தேர்தலில் போட்டியிடலாம். யார் வெல்கிறார்களோ அவர்கள் தலைமையில் இந்த இயக்கம் செயல்படும். இந்த தேர்தலில் வெற்றி பெற்று தலைமை பதவியைப் பிடிப்பவரின் தலைமையில் அதிமுக நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு 40 தொகுதிகளிலும் வெல்ல வேண்டும் என்ற இலக்கோடு நான் பயணித்துக் கொண்டிருக்கிறேன்." எனத் தெரிவித்துள்ளார்.
-
அதிமுகவில் இன்னொரு பெரிய ‘விக்கெட்’.. தவெகவில் இணைந்தார் முன்னாள் டிஜிபி நடராஜ்! -
ரெண்டு பேருமே பெரிய புள்ளி.. தவெகவுக்கு தாவும் விஜயபாஸ்கர்! ரெடியான சண்முகம்! எடப்பாடிக்கு சிக்கல்! -
அதிமுகவில் நீடிக்கிறீர்களா? கேள்வியை தவிர்த்துவிட்டு எஸ்கேப்பான முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்! -
அதிமுகவை நோக்கி தவெக போட்ட வலை.. எம்ஜிஆரை தூக்கும் போதே யோசிச்சுருக்கனும்! கோட்டை விட்ட எடப்பாடி! -
எடப்பாடி பழிவாங்குவார்.. ஜூட் விட ரெடியான விஜயபாஸ்கர்.. நேரம் எடுத்துக்கொள்ளும் சிவி சண்முகம்! -
தவெகவில் இணைய திட்டமா? ஆதரவாளர்களுடன் ஆலோசித்த பின் விஜயபாஸ்கர் சொன்ன பதில் -
நான் யாரு தெரியுமா? மன்னிப்பெல்லாம் கேட்க முடியாது! முகத்தில் அடித்தார் போல் பேசிய சி.வி.சண்முகம்! -
GOAT படத்துல Traffic Police மாதிரி பேசிட்டு.. இது சினிமா இல்ல! மக்கள் பணி! அமைச்சரை விளாசிய அதிமுக! -
எடப்பாடியை சந்திக்காத இரு துருவங்கள்! தவெக தலைமையுடன் சிவி சண்முகம், விஜயபாஸ்கர் ரகசிய ஆலோசனை? -
அதிமுகவில் அடுத்த விக்கெட்.. தவெகவில் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்.. 2016 -இல் திருச்சி கிழக்கில் வெற்றி பெற்றவர் -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
விஜய்க்கு சிக்கல்? எம்எல்ஏக்கள் ராஜினாமாவை விசாரிக்கும் சிபிஐ- அமலாக்கத்துறை? அதிமுக எம்பி ஐடியா












Click it and Unblock the Notifications