சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

டிசம்பர் சூரிய கிரகணத்தில் ஆரம்பித்த கொரோனா ஜூன் சூரிய கிரகணத்தில் முடிவுக்கு வருமா?

கொரோனா வைரஸ் ஒருவர் முகத்தையும் சரியாக கூட பார்க்க விடாமல் மாஸ்க் அணிய வைத்து விட்டது. 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நிகழ்ந்த ஆறு கிரக சேர்க்கையும் சூரிய கிரகணமும் கொரோனா என்னும் உயிர்கொல்லி வைரஸை உலக

Google Oneindia Tamil News

சென்னை: உலக பொருளாதாரத்தையே ஆட்டம் காண வைத்து விட்டது கொரோனா வைரஸ். ஊராடங்கு உத்தரவால் மொத்தமும் முடங்கி விட்டது. இந்திய பொருளாதாரம் படு பாதாளத்தில் இருப்பதாக எதிர்கட்சிகள் குற்றம் சாட்டினாலும் ஆளும் அரசு 20 லட்சம் கோடி மதிப்பிலான பொருளாதார சலுகைகளை அறிவித்தாலும் கொரோனாவின் பாதிப்பில் இருந்து மீள இன்னும் ஓராண்டுகாலம் ஆகும் என்பதே ஜோதிடர்களின் எச்சரிக்கையாக உள்ளது.

2019ஆம் ஆண்டு ஆரம்பம் எல்லாம் அமர்களமாகத்தான் இருந்தது. டிசம்பர் மாதத்தின் இறுதியில் தனுசு ராசியில் ஆறு கிரக சேர்க்கை. அப்போது நிகழ்ந்த கேது கிரகஸ்த சூரிய கிரகணம் ஒரு உயிர்கொல்லி வைரஸை உற்பத்தி செய்து விட்டது. சீனாவில் தொடங்கிய வைரசின் ஆட்டம் ஐரோப்பா, ஆசியா, அமெரிக்கா என கண்டம் விட்டு கண்டம் தாவி 50 லட்சம் பேரை பாதித்து பல லட்சம் உயிர்களை குடித்துள்ளது.

தனுசு ராசியில் இணைந்திருந்த சனியும் குருவும் இப்போது மகரம் ராசியில் இணைந்து வக்ர நிலையில் சஞ்சரிக்கின்றன. மகரத்தில் குரு அதிசாரமாக இருந்தாலும் படிப்படியாக பின்னோக்கி நகர்ந்து தனுசு ராசியில் உள்ள கேது உடன் இணைந்து சஞ்சரிப்பார். சனியும் குருவும் இணைந்து சஞ்சரிக்கும் பொழுதெல்லாம் உலக அளவில் மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.

மிதுனத்தில் நிகழப்போகும் ராகு சூரிய கிரகணத்தால் கொரோனா பாதிப்புகுறையுமா - பரிகாரம் யாருக்குமிதுனத்தில் நிகழப்போகும் ராகு சூரிய கிரகணத்தால் கொரோனா பாதிப்புகுறையுமா - பரிகாரம் யாருக்கு

மிகப்பெரிய மாற்றங்கள்

மிகப்பெரிய மாற்றங்கள்

குருபகவான் அறிவில் சிறந்தவர். தேவர்களின் குருவாக திகழ்பவர். அவரது நுண்ணறிவின் காரணமாக பிரகஸ்பதி என்று அழைக்கப்படுகிறார். ஜோதிடத்தைப் பொருத்த வரை சனி, குருவுக்கு மட்டுமே ராஜ கிரகங்கத்திற்கான அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. பொதுவாக வேதம், உபநிடங்கள் இதற்கெல்லாம் உரிய கிரகம் குரு. அதேபோல் சனி சத்ரிய கிரகம் என்று கூறுவர். குரு சனி சேர்க்கை நிகழும் போதெல்லாம் நாட்டில் மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்படும்.

மகரத்தில் சனி குரு

மகரத்தில் சனி குரு

ஜாதகத்தில் ஒரு ராசியில் குருவும் சனியும் இணைந்து கூட்டணி அமைத்திருந்தால் அதனை குரு சண்டாள யோகம் என்று கூறுவர். 2019ஆம் ஆண்டு தனுசு ராசியில் சனியோடு குரு இணைந்து சஞ்சரித்தார். இப்போது திருக்கணித பஞ்சாங்கப்படி சனி மகரத்தில் இருக்க குரு அதிசாரமாக மகரத்திற்கு சென்று இப்போது வக்ரமடைந்துள்ளார்.

பொருளாதார வீழ்ச்சி

பொருளாதார வீழ்ச்சி

குரு சனி இருவரின் சேர்க்கை ஜீவ கர்ம யோகம் என்ற நிலையை வழங்குகிறது. குரு என்பது கருவூலம், வங்கி, பொக்கிஷம், கஜானா, செல்வ செழிப்பை குறிக்கும். மகரம் ராசியில் குரு நீசமடைபவர். இதனால்தான் உலகத்தில் மிகப்பெரிய பொருளாதார மந்தநிலையும் இந்திய பொருளாதாரத்தின் வீழ்ச்சிக்கும் காரணமாக அமைந்தது.

தொழிலாளர்கள் பாதிப்பு

தொழிலாளர்கள் பாதிப்பு

சனி என்பது வெகு ஜனங்களின் காரகன், ஜீவன காரகன். கொரோனோ வைரஸ் பலரது ஜீவனத்திற்கே வேட்டு வைத்து விட்டது. பல தொழிலாளர்கள் வேலையிழந்து ஒரு நேர சாப்பாட்டிற்கே வழியின்றி கால் நடையாக நடந்து சொந்த ஊர் திரும்பும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கின்றனர்.

பொருளாதார மந்தநிலை

பொருளாதார மந்தநிலை


சனி குரு சேர்க்கை இப்போது பிரிந்தாலும் மீண்டும் நவம்பர் மாதம் இணைகிறது. இந்த கூட்டணி ஜூலை 2021 வரை நீடிக்கிறது. இந்த கிரக கூட்டணியால் ஆளும் அரசுக்கு எதிராக மிகப்பெரிய போராட்டங்கள் வெடிக்கலாம் என்பது ஜோதிடர்களின் எச்சரிக்கையாகும்.
இந்திய பொருளாதாரம் எத்தனையோ முறை மந்தநிலையில் இருந்து மீண்டு இருக்கிறது. அதேபோல மறுபடியும் இந்த பொருளாதார சரிவில் இருந்து மீளும்.

மனித சக்தி

மனித சக்தி

எந்த ஒரு பேரழிவில் இருந்தும் தப்பிக்க மனிதன் ஒரு வழியை கண்டுபிடிப்பான் அத்தகைய மகத்தான சக்தி இருக்கிறது.
நூற்றாண்டுகளுக்கு முன்பு 1918ஆம் ஆண்டு ஸ்பானிஷ் காய்ச்சல் கொள்ளை நோயாக உருவெடுத்தது. பல லட்சம் பேரின் உயிரை குடித்த பின்னரே கட்டுப்படுத்தப்பட்டது. அதேபோலத்தான் இந்த கொரோனா வைரஸ் பாதிப்பும் டிசம்பர் 2020 வரை நீடிக்க வாய்ப்பு உள்ளது என்பது ஜோதிடர்களின் கணிப்பு.

ஜூன் சூரிய கிரகணம்

ஜூன் சூரிய கிரகணம்

ராகு கிரகஸ்த சூரிய கிரகணம் வரும் ஜூன் 21ஆம் தேதி நிகழ்கிறது. அந்த நேரத்தில் சூரியன், சந்திரன், ராகு, புதன் ஆகிய நான்கு கிரகங்கள் மிதுனம் ராசியில் சஞ்சரிக்கின்றன. குரு, சனி, சுக்கிரன்,புதன் ஆகிய நான்கு கிரகங்கள் வக்கிரமடைந்துள்ளன. இதுவும் கொரோனா வைரஸ் வீரியத்தை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. கடந்த டிசம்பர் இறுதியில் சீனாவில் உருவான கொரோனா வைரஸ் இப்போது உலகம் முழுவதும் பரவி 20 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்களை பாதித்துள்ளது. லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர். இந்த பாதிப்பினால் உலகமே முடங்கியுள்ளது. இந்த பாதிப்பு நீங்கி உலகம் இயல்பு நிலைக்கு எப்போது திரும்பும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

கேதுவினால் தீரும் பிரச்சினை

கேதுவினால் தீரும் பிரச்சினை

செப்டம்பர் மாதம் பாம்பு கிரகங்களான ராகு, கேது இடப்பெயர்ச்சி அடைகின்றன. ராகு மிதுனத்தில் இருந்து ரிஷப ராசிக்கும் கேது பகவான் இப்போது உள்ள தனுசு ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கு இடம்மாறும் போது கொரோனா வைரஸ் தாக்கம் படிப்படியாக குறையும் சரியான தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படும் என்றாலும் வைரஸின் தாக்கம் சில ஆண்டுகள் நீடிக்கவே செய்யும்.

English summary
Hope there are some vaccine made on September when Ketu change his sign and enter into scorpion Rashi.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X