கிருபானந்த வாரியாரின் பிறந்தநாள் அரசு விழாவாகக் கொண்டாடப்படும் - முதல்வர் அறிவிப்பு
சென்னை: கிருபானந்த வாரியாரின் பிறந்த நாளான ஆகஸ்ட் 25ஆம் தேதி இனி அரசு விழாவாக கொண்டாடப்படும் என்று முதல்வர் பழனிச்சாமி அறிவித்துள்ளார். எம்ஜிஆருக்கு பொன்மனச் செம்மல், என்ற பட்டத்தை வழங்கியவர் கிருபானந்த வாரியார் என்றும் முதல்வர் பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
வேலூர் மாவட்டம், காட்பாடிக்கு அருகே பாலாற்றங்கரையில் அமைந்துள்ள காங்கேயநல்லூர் என்னும் சிற்றூரில் கடந்த 1906 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 25 ஆம் தேதி கிருபானந்த வாரியார் பிறந்தார். இவரது இயற்பெயர் கிருபானந்த வாரி. முருகப் பெருமான் மீது அளவற்ற பற்றும், பக்தியும் கொண்டவராக அவர் விளங்கியதால் திருமுருக கிருபானந்த வாரியார் என்று அழைக்கப்பட்டார்.

கிருபானந்த வாரியார், 1993ஆம் ஆண்டு நவம்பர் 7 ஆம் தேதி லண்டனில் இருந்து இந்தியா வரும் போது விமானப் பயணத்திலேயே அவர் உயிர் பிரிந்தது. வேலூர் மாவட்டம், காட்பாடிக்கு அருகே கிருபானந்த வாரியாரை சிறப்பிக்கும் வகையில் கோயில் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று ராணிப்பேட்டை, வேலூர் மாவட்டங்களில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். வேலூர் மாவட்டத்தில் பிரசாரம் செய்த அவர், கிருபானந்த வாரியாரின் பிறந்த நாளான ஆகஸ்ட் 25ஆம் தேதி இனி அரசு விழாவாக கொண்டாடப்படும் என்று கூறினார். எம்ஜிஆருக்கு பொன்மனச் செம்மல், என்ற பட்டத்தை வழங்கியவர் கிருபானந்த வாரியார் என்றும் முதல்வர் பழனிச்சாமி கூறியுள்ளார்.
தினகரனை நம்பினால் நடுத்தெருதான்... சதிவலையை தூள்தூளாக உடைப்போம் - வேலூரில் முதல்வர் ஆவேசம்
திருமுருக கிருபானந்த வாரியார் ஏறக்குறைய 150 நூல்களைப் படைத்துள்ளார். அருள்மொழி அரசு, திருப்புகழ் ஜோதி, சொற்பொழிவு வள்ளல், கலைமாமணி, ஞானக்கதிரவன் இன்னும் பல அடங்கும்.
சமய சொற்பொழிவில் கிடைக்கும் தொகையை ஆலயங்களின் திருப்பணிக்காகப் பயன்படுத்தி மகிழ்ச்சியடைவார். மோகனூரில் 1940ம் ஆண்டு அருணகிரிநாதர் அறச்சாலையை ஏற்படுத்தினார். வயலூர், வடலூர், காஞ்சி ஏகாம்பரேஸ்வரர் கோவில், சமயபுரம் போன்ற பல ஊர்களில் உள்ளஆலயங்களுக்குத் திருப்பணிகள் செய்துள்ளார்.