கோடநாடு விவகாரம்: பழிவாங்கும் திமுக அரசு தோல்வியடைந்து விட்டது ஆளுநரை சந்தித்த பின் இபிஎஸ் பேட்டி
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் இன்று சந்தித்து பேசியுள்ளனர். செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிச்சாமி, திமுக அரசு தோ
சென்னை: தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் இன்று சந்தித்து பேசினர். முன்னாள் அமைச்சர்கள் மீது பொய்வழக்கு போடும் திமுக அரசு தோல்வியடைந்து விட்டதாக எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டியுள்ளார்.
Recommended Video
கோடநாடு எஸ்டேட்டில் நிகழ்ந்த கொலை கொள்ளை விவகாரம் மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. சட்டசபையிலும் இது புயலை கிளப்பியது. பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. பட்ஜெட் மீதான விவாதம் 3வது நாளாக நேற்று நடைபெற்றது.
அதிமுக உறுப்பினர்கள் சட்டசபைக்கு வரும்போதே கருப்பு பேட்ஜ் அணிந்து வந்தனர். எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி நேரமில்லா நேரத்தில், நேற்று பேசும் போது, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தங்கியிருந்த கோடநாட்டில் நடந்த கொள்ளை, கொலை தொடர்பாக மூன்று ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட வழக்கை மீண்டும் தற்போதுள்ள அரசு கையிலெடுத்துள்ளது என்று பேசினார்.

இதற்கு தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் பதிலளித்துப் பேசினார். கோடநாடு கொலை வழக்கில் எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்பதுபோல நீங்களே அந்தப் பிரச்சனையைக் கிளப்புகிறீர்கள். அந்த மாதிரிதான் அதிமுகவினரின் போக்கு உள்ளது என்று கூறினார். கொடநாடு விவகாரத்தில் அரசியல் தலையீடு இல்லை எனவும் உண்மையை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் முதல்வர் பதிலளித்தார். முதல்வரின் பேச்சுக்கு எதிர்கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்ததால் பேரவையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.
கொடாநாடு வழக்கு விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து கறுப்பு பேட்ச் அணிந்து வந்திருந்த அதிமுக உறுப்பினர்கள், பொய் வழக்கு போடாதே என்ற வாசகம் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியபடி அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். கலைவாணர் அரங்கத்திற்கு வெளியே அமர்ந்து தர்ணாவிலும் ஈடுபட்டனர்.
செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர் செல்வம், ஜனநாயகத்தில் எதிர்கட்சியினரை தனது அதிகார பலத்தால் எதிர்கட்சியினரை நசுக்க வேண்டும் என்று தவறான கொள்கையை திமுக கையில் எடுத்துள்ளது. துரிதமாகப் பொய் வழக்குகளைப் போட்டு அதிமுகவினரை செயல்பட விடாமல் தடுக்க வேண்டும் என்று செயல்படுகின்றனர்.
எதிர்க்கட்சிகளுக்கு சட்டமன்றத்தில் பேச வாய்ப்பு தராத போக்கு தொடர்கிறது. ஜனநாயக விரோத நடவடிக்கைகளில் திமுக அரசு ஈடுபட்டுள்ளதாகவும் கூறிய அவர், திமுக அரசின் செயல்களை கண்டிக்கும் வகையில் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்துள்ளோம் என்றார்.
எதிர்க்கட்சிகளை நசுக்க ஆளுங்கட்சி முயற்சி செய்கிறது. தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் கொடநாடு வழக்கை கையில் எடுத்துள்ளனர். ஆளும் அரசு மக்களை திசை முயற்சி செய்கிறது. அனைத்தும் பொய் வழக்கு என்பது மக்களுக்கு தெரியும் என்று கூறிய ஓபிஎஸ் இரண்டு நாட்களுக்கு சட்டசபையை புறக்கணிக்கப் போவதாக கூறினார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமி, கோடநாடு கொலை, கொள்ளை வழக்கை தற்போது திமுக அரசு காழ்ப்புணர்ச்சியுடன் கையில் எடுத்துள்ளது. என்னையும் சில அதிமுக நிர்வாகிகளையும் அந்த வழக்கில் சிக்க வைக்க சதி நடப்பதாகக் குற்றம் சாட்டினார்.
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு மீண்டும் தமிழ்நாட்டில் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில் எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிச்சாமியும், துணைத்தலைவர் ஓ.பன்னீர் செல்வமும் இணைந்து இன்று ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை சந்தித்து பேசினர். சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் இந்த சந்திப்பு நடைபெற்றது.
45 நிமிடங்கள் நடைபெற்ற இந்த சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிச்சாமி , அதிமுக ஆட்சி காலத்தில் தொடங்கப்பட்ட பல திட்டங்களை கிடப்பில் போட்டு விட்டு முன்னாள் அமைச்சர்கள் மீது பொய் வழக்கு போட்டு திசை திருப்ப பார்ப்பதாக குற்றஞ்சாட்டினார்.
கோடநாடு வழக்கு நீதிமன்றத்தில் இருக்கும் போது அது எப்படி தேர்தல் வாக்குறுதியாக இருக்க முடியும் என்றும் எடப்பாடி பழனிச்சாமி கேள்வி எழுப்பினார். திமுகவினர் கொடுத்த வெள்ளை அறிக்கை மக்களிடம் எடுபடவில்லை என்பதால் தற்போது கோடநாடு வழக்கை கையில் எடுத்துள்ளனர்.
கோடநாடு வழக்கு நீதிமன்றத்தில் முடியும் தருவாயில் உள்ளது. கோடநாடு வழக்கில் தன்னையும் பிற அதிமுகவினரையும் சேர்க்க முயற்சி செய்கின்றனர். குற்றவாளிகளை பாதுகாக்கும் வகையில் திமுக அரசு நடந்து கொள்வதாகவும் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
-
விஜய்யை கணிக்கல.. முதுகில் குத்திருக்காங்க.. திமுக தோல்விக்கு காரணம்.. ஸ்டாலின் மேஜையில் ரிப்போர்ட் -
யாரு ஹீரோ? விஜய் Vs உதய்! பட்ஜெட் கூட்டத்தில் பட்டைய கிளப்புவது யார்? பரபரப்பாய் ரெடியாகும் லிஸ்ட்! -
இந்தியா கூட்டணியில் இருந்து திமுக விலகுவதாக மு.க ஸ்டாலின் என்னிடம் கூறவில்லை - காங்கிரஸ் ப.சிதம்பரம் -
மாற்றத்திற்கு தயாராகும் அறிவாலயம்! அடைக்கலமாகும் முக்கிய புள்ளிகள்! ஸ்டாலினின் அதிரடி மூவ்! -
பாரதிராஜா முகத்தை பார்த்ததும் உடைந்து போன முன்னாள் முதல்வர் முக ஸ்டாலின்.. உருக்கமான பதிவு -
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்!












Click it and Unblock the Notifications