பெண்களுக்கு ஜாக்பாட்! அக்கவுண்டுக்கே வரும் 5 லட்சம்! மோடியின் மாஸ்டர் ப்ளான்.. இதை செய்தால் போதும்!
சென்னை: பெண்களை தொழில் முனைவோர்களாக மாற்றும் வகையில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு லக்பதி திதி யோஜனா என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் மகளிர் சுய உதவிக் குழுக்களில் (SHG) உள்ள கிராமப்புறப் பெண்களுக்கு, ஆண்டுக்கு குறைந்தபட்சம் ரூ.1 லட்சம் வருமானம் ஈட்டும் வகையில், ரூ.5 லட்சம் வரை வட்டி இல்லாக் கடன் வழங்கப்படவுள்ளது.
பெண்களின் பொருளாதார முன்னேற்றத்துக்காக மத்திய அரசு தொடர்ந்து பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. ஒருகாலத்தில் வீட்டுக்குள் முடங்கியிருந்த பெண்கள், இன்றைக்கு தொழில் முனைவோர்களாக பல துறைகளில் தன்னம்பிக்கையுடன் காலடி எடுத்து வைத்துள்ளனர்.

இந்த மாற்றத்தை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ள முக்கியமான திட்டம்தான் 'லக்பதி திதி யோஜனா'. இந்த திட்டத்தின் அடிப்படை நோக்கம், பெண்களை வெறும் உதவித் தொகை பெறுபவர்களாக இல்லாமல், சொந்தமாக வருமானம் ஈட்டும் தன்னிறைவு தொழில் முனைவோர்களாக மாற்றுவதாகும்.
குறிப்பாக கிராமப்புற பெண்கள் மற்றும் சுய உதவிக் குழுக்களில் உள்ள பெண்களை இலக்காகக் கொண்டு இந்த திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. லக்பதி திதி யோஜனாவின் முக்கிய அம்சம் என்னவென்றால், இந்த திட்டத்தின் கீழ் பெண்களுக்கு ரூ.5 லட்சம் வரை வட்டியில்லா கடன் வழங்கப்படுகிறது. இந்தக் கடனை புதிய தொழில் தொடங்கவோ அல்லது ஏற்கனவே செய்து வரும் சிறு தொழிலை விரிவுபடுத்தவோ பயன்படுத்தலாம். கடனுக்கான வட்டி சுமையை அரசு தானே ஏற்றுக் கொள்வதால், பெண்கள் திருப்பிச் செலுத்த வேண்டிய தொகை குறைவாக இருக்கும்.
விவசாயம், பால் உற்பத்தி, கோழிப்பண்ணை, உணவு பதப்படுத்துதல், கைவினைப் பொருட்கள் தயாரித்தல், சிறிய கடைகள், சேவை சார்ந்த தொழில்கள் என பல துறைகளில் பெண்கள் இந்த திட்டத்தின் மூலம் முன்னேற வாய்ப்பு உள்ளது. தொழில் தொடங்குவதற்கு முன், தேவையான திறன் பயிற்சிகளும், தொழில் மேலாண்மை வழிகாட்டுதல்களும் வழங்கப்படுவது இந்த திட்டத்தின் சிறப்பு அம்சமாக பார்க்கப்படுகிறது.
இந்த திட்டத்தின் பலனை பெற, பெண்கள் அங்கீகரிக்கப்பட்ட மகளிர் சுய உதவிக் குழுவின் உறுப்பினராக இருக்க வேண்டும். வயது வரம்பு 18 முதல் 50 வயதுக்குள் இருக்க வேண்டும். சுய உதவிக் குழுவில் சேர்ந்த பிறகு, அவர்கள் தங்களின் தொழில் யோசனையை அடிப்படையாகக் கொண்டு ஒரு தெளிவான வணிகத் திட்டம் (Business Plan) தயாரிக்க வேண்டும். அந்த திட்டம் சம்பந்தப்பட்ட துறைகளால் பரிசீலிக்கப்பட்டு ஒப்புதல் அளிக்கப்பட்ட பிறகே கடன் வழங்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை மிகவும் எளிமையானது. கிராமப்புற மேம்பாட்டு அமைச்சகத்தின் இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். அதேபோல், அருகிலுள்ள மகளிர் சுய உதவிக் குழு அலுவலகம், மாவட்ட ஊரக வளர்ச்சி துறை அலுவலகம் அல்லது அரசு வங்கிகளை அணுகி ஆஃப்லைனிலும் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் போது ஆதார் அட்டை, முகவரி சான்று, வங்கி பாஸ்புக், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் போன்ற ஆவணங்கள் அவசியம்.
வணிகத் திட்டம் ஒப்புதல் பெற்றவுடன், கடன் தொகை நேரடியாக விண்ணப்பதாரரின் வங்கி கணக்கில் செலுத்தப்படும். சரியான ஆவணங்களுடன் தெளிவான தொழில் திட்டத்தை சமர்ப்பித்தால், விண்ணப்பம் நிராகரிக்கப்படும் வாய்ப்பு குறையும்.
மொத்தத்தில், லக்பதி திதி யோஜனா என்பது பெண்களின் கனவுகளை நனவாக்கும் ஒரு முக்கியமான வாய்ப்பாக பார்க்கப்படுகிறது. பொருளாதார சுதந்திரம், தன்னம்பிக்கை, சமூக மரியாதை ஆகிய மூன்றையும் ஒரே நேரத்தில் பெற பெண்களுக்கு இந்த திட்டம் பெரிதும் உதவும். சரியான வழிகாட்டுதல் மற்றும் முயற்சி இருந்தால், இந்த திட்டம் பெண்களின் வாழ்க்கையில் உண்மையான மாற்றத்தை உருவாக்கும் என்கின்றது மத்திய அரசு.
-
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சிறகடிக்க ஆசை : கண்ணீர் விட்டு அழுத மனோஜ்.. இவருக்கா இந்த நிலைமை? முத்து மீனா செய்த செயல்! கதையே மாறுது -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
Illatharasi: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000! திமுக கூப்பனில் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்க முடியுமா? -
சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்தவர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ்.. ஏப்ரல் 1 மத்திய அரசின் அதிரடி -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல்












Click it and Unblock the Notifications