ராகுலிடம் போன டாக்குமெண்ட்! நள்ளிரவில் நடந்த மீட்டிங்! இன்று வெளியாகும் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல்
சென்னை: காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் இன்று வெளியாகலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது. வேட்பாளர் தேர்வு தொடர்பாக டெல்லியில் நேற்றிரவு ஆலோசனை நடந்த நிலையில், பெரும்பாலான தொகுதிகளில் வேட்பாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். காங்கிரஸ் 28 தொகுதிகளில் போட்டியிடும் சூழலில், இன்று வேட்பாளர்கள் அறிவிக்கப்பட வாய்ப்பு இருப்பதாகச் சொல்லப்படுகிறது.
தமிழ்நாட்டில் சட்டசபைத் தேர்தல் வாக்குப்பதிவுக்கு இன்னும் 20 நாட்களே உள்ள நிலையில், தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது. அனைத்து கட்சிகளுமே கூட்டணியை இறுதி செய்து, பிரச்சாரத்தை ஆரம்பித்துவிட்டது. மாநிலத்தில் உள்ள பெரும்பாலான கட்சிகள் வேட்பாளர்களையும் அறிவித்துவிட்டன. காங்கிரஸ் மற்றும் பாஜக எனத் தேசிய கட்சிகள் மட்டுமே இதுவரை வேட்பாளர்களை அறிவிக்கவில்லை.

காங்கிரஸ்
இதில் காங்கிரஸை பொறுத்தவரை இந்த முறையும் திமுக கூட்டணியிலேயே போட்டியிடுகிறது. கூட்டணி பேச்சுவார்த்தையின் போதே தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்வதில் இழுபறி நீடித்தது. நீண்ட பேச்சுவார்த்தைக்கு பிறகே காங்கிரஸ் கட்சிக்கு 28 தொகுதிகள் ஒதுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இது காங்கிரஸ் கட்சி கடந்த 2021ல் போட்டியிட்ட 25 தொகுதிகளை விட 3 தொகுதிகள் அதிகமாகும்.
28 தொகுதிகள்
அதன்படி பொன்னேரி, ஸ்ரீபெரும்புதூர், சோளிங்கர், உதகமண்டலம், ஈரோடு கிழக்கு, அறந்தாங்கி, கடலூர், மயிலாடுதுறை, காரைக்குடி, சிவகாசி, திருவாடனை, ஸ்ரீவைகுண்டம், நாங்குநேரி, குளச்சல், விளவங்கோடு, கிள்ளியூர், வேளச்சேரி, ஊத்தங்கரை, துறையூர், கவுண்டம்பாளையம், ஆத்தூர், பென்னாகரம், சிங்காநல்லூர், அம்பாசமுத்திரம், கிருஷ்ணகிரி, உசிலம்பட்டி, சங்கரன்கோவில், மேலூர் ஆகிய தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.
சில காரணங்களால் வேட்பாளர் தேர்வில் இழுபறி நிலவி வருகிறது. நேற்றிரவே கூட வேட்பாளர்கள் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது. டெல்லியில் இது தொடர்பாக ஆலோசனைக் கூட்டமும் கூட நடைபெற்றது. அதில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுனா கார்கே, ராகுல் காந்தி ஆகியோர் கலந்து கொண்டனர். சுமார் 1 மணி நேரம் வரை இந்த கூட்டம் நடந்தது. இருப்பினும், நேற்றும் அறிவிப்பு வெளியாகவில்லை.. வேட்பாளர்கள் தேர்வு இன்னும் முழுமையாக முடிவு செய்யப்படவில்லை என்றே தெரிகிறது.
இழுபறி
இதற்கிடையே 85% வேட்பாளர்கள் தேர்வு முடிந்துவிட்டதாகவும் ஓரிரு தொகுதிகளுக்கு மட்டும் வேட்பாளர்களை இறுதி செய்யும் பணிகள் நடந்து வருவதாகவும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்தார். தமிழகத்தில் வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்யும் கால அவகாசம் 6ம் தேதியுடன் முடிவடைகிறது. இதற்கிடையே இன்னும் வேட்பாளர்களை அறிவிக்காமல் இருப்பது கூட்டணிக் கட்சித் தலைவர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது..
இன்று வெளியாகலாம்
இன்று அரசு விடுமுறை நாள் என்பதால் வேட்புமனு தாக்கல் செய்ய முடியாது. நாளை மற்றும் திங்கள் என வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்ய இரு நாட்கள் மட்டுமே கால அவகாசம் உள்ளது. இதற்கிடையே இன்றைய தினம் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் இன்று வெளியிடப்படும் எனத் தெரிகிறது.
-
மாணிக்கம் தாகூர் ராஜினாமா.. என்னதான் ஆச்சு காங்கிரசுக்கு? கண்டுக்கொள்ளாத ராகுல் காந்தி -
இது தமிழ்நாடு ப்ரோ.. பாஜகவுக்கு பல்ப் கொடுத்த எடப்பாடி! கை கொடுக்காத ஷாவின் ’அறுபடை வீடு’ பாலிடிக்ஸ் -
தர்மபுரியில் மாறுது கணக்கு! சௌமியா அன்புமணியை அதிரவைத்த ராமதாஸின் அந்த ஒரு முடிவு! பலே -
181–189 தொகுதிகளில் வெற்றி.. மீண்டும் வெல்லும் திமுக கூட்டணி.. அதிமுக – தவெகவிற்கு ஷாக் தந்த சர்வே -
முடியவே முடியாது.. டெல்லியை எதிர்த்து நிற்கும் அண்ணாமலை! பாஜக பட்டியல் தாமதம்! இது தான் காரணம்! -
லீமா ரோஸ் எனும் விஷ விதை.. பாஜக கண்ணை காட்டுனா போதும்! அதிமுக அவர் கையில்.. குண்டை போட்ட அதிமுக மாஜி -
அடம்பிடித்து ஈரோடு கிழக்கை கேட்டு வாங்கிய காங்கிரஸ்.. இப்போ எங்க போச்சு! நெட்டிசன்கள் சரமாரி கேள்வி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
நல்ல நேரத்திற்காக அரை மணி நேரம் காத்திருந்த விஜய்.. திருச்சி கிழக்கில் வேட்பு மனு தாக்கல் செய்தார் -
கழுத்தில் இருந்த விசிலை பிடுங்கி வீசிய அதிமுக நிர்வாகி! திருப்பூர் அருகே கூட்டத்தில் பரபரப்பு! -
அண்ணாமலை போட்டியிடும் தொகுதி இதுவா? ஈரோட்டில் பாஜக செம ட்விஸ்டு.. மொத்த மொடக்குறிச்சியும் வெயிடிங் -
தன்னையும், மக்களையும் நம்பாதவர்தான்.. 2 தொகுதியில் போட்டியிடுவார்! அட்டாக் மோடில் சீமான்












Click it and Unblock the Notifications