சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பூனம் பாண்டே மட்டும்தான்... ஊரடங்கை மதிக்காமல் ஊர் சுற்றுகிறாரா.. எல்லோருக்கும் தேவை கிடுக்கி பிடி!

நடிகை பூனம் பாண்டே கைது விவகாரம் சரியா என்ற கேள்வி எழுந்துள்ளது

Google Oneindia Tamil News

சென்னை: கவர்ச்சி நடிகை பூனம் பாண்டே மும்பை போலீசாரால் அதிரடியாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளார்.. ஊரடங்கு சட்டங்களை தூக்கி எறிந்து விட்டு தன்னுடைய ஆண் நண்பருடன் காரில் ஊர் சுற்றியதற்காக பூனம் பாண்டே புக் ஆகியுள்ளார். இருப்பினும் பூனம் பாண்டே மட்டும்தான் வெளியே நடமாடி கொண்டிருக்கிறாரா என்ற கேள்வி எழுந்து வருகிறது

Recommended Video

    Shocking:Poonam Pandey arrested in Mumbai

    பூனம் பாண்டே... சர்ச்சைகளுக்கு பேர் போனவர். அடிக்கடி எதையாவது சர்ச்சையை கிளப்பி விட்டு கொண்டிருப்பார்.. சோஷியல் மீடியாவில் இவரது பகீர் கேள்விகள் படு ஃபேமஸ்.. திடீரென கவர்ச்சி போட்டோக்களை பதிவிடுவார்.. "இந்தியா உலகக்கோப்பை வென்றால் அந்த கிரவுண்டில் நிர்வாணமாக ஓடுவேன்' என்று பேட்டியால் பதறடிப்பார்.

    lockdown: poonam pandey arrested for lockdown violation case issue

    அவர்தான் இப்போது ஒரு விவகாரத்தில் சிக்கி உள்ளார்.. லாக்டவுன் விதிக்கப்பட்டுள்ள நிலையிலும் தன்னுடைய ஆண் நண்பர் ஷாம் அகமதுடன் மும்பை மெரைன் டிரைவ் ரோட்டில் சென்றுள்ளார். எந்தவித அவசர காரணமும், அனுமதியும் இல்லாமல் இவர்கள் சுற்றியதால் அவர் மீது வழக்குப் போட்டுள்ளனர். பிறகு எச்சரித்தும் விடுவித்துள்ளனர். இப்போது கேள்வி பூனம் பாண்டேவை ஏன் விடுவித்தார்கள் என்பது இல்லை, பூனம் பாண்டே மட்டும்தான் சாலையில் சுற்றினாரா என்பதுதான்!!

    இதுவரை எப்படியோ தெரியாது.. சில நாட்களாகவே பல்வேறு மாநிலங்களில் மதுக்கடைகள் திறந்து விடப்பட்டுள்ளன.. நம் மாநிலத்திலும் இன்று முதல் 34 வகையான கடைகளை திறந்து விட்டுள்ளனர்.. அத்தியாவசிய பொருட்களுக்கான மளிகை, காய்கறி, மருந்து பொருட்கள் கடைகளே குறிப்பிட்ட நேரம்திறந்து வைக்கப்பட்ட நிலையில், 34 வகையான கடைகளும் இன்று முதல் திறக்கப்படும் என்று சொல்லப்பட்டு விட்டது.

    மத்திய அரசு அறிவித்த சிறப்பு ரயில்களில் 75% உபி, பீகாருக்குதான்! மத்திய அரசு அறிவித்த சிறப்பு ரயில்களில் 75% உபி, பீகாருக்குதான்!

    அதனால் பொதுமக்கள் இயல்பாகவே நடமாடி கொண்டிருக்கிறார்கள்.. அது மட்டுமல்ல, எப்போது டாஸ்மாக் திறக்கப்பட்டதோ அப்போதே அனைத்து தளர்வுகளும் நொறுங்கிபோய்விட்டன என்பதே பரவலான கருத்து.. டாஸ்மாக் என்பது அத்தியாவசிய தேவையா? அல்லது சரக்கு வாங்க சாலைகளில் நடமாடினால் அது காவல்துறையினரால் ஏற்றுக் கொள்ளக்கூடிய காரணமாக இருக்குமோ என்பதும் தெரியவில்லை.

    காரணமில்லாமல் ரோட்டில் திரிந்ததால் பூனம் பாண்டே மீது வழக்குப் பாய்ந்ததாக கூறுகிறார்கள்.. பூனம் பாண்டேவை தவிர இந்திய சாலைகளில் நடமாடி கொண்டிருப்பவர்கள் அனைவருமே அத்தியாவசிய காரணங்களுக்காகத்தான் நடமாடுகிறார்கள் என்பதையும் உறுதியிட்டு யாராவது சொல்ல முடியுமா என்பது சந்தேகம்தான்.

    பூனம் பாண்டே ஒரு பிரபலமான நபர் என்பதால் விஷயம் மீடியாக்களில் வந்துவிட்டது.. பூனம் என்ற நடிகை பற்றின தனிப்பட்ட விஷயத்துக்குள் நாம் போகவில்லை என்றாலும், இந்த சம்பவம் பொதுமக்களுக்கு பல கேள்விகளையே எழுப்பியுள்ளது. இன்று ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு பெயரில் ஊரடங்கை தளர்த்த ஆரம்பித்து விட்டனர். வணிகங்களை அனுமதிக்க ஆரம்பித்து விட்டனர். கிட்டத்தட்ட இயல்பு நிலையை உருவாக்க ஆரம்பித்துள்ளனர். எனவே பூனம் போல மேலும் பலரும் வெளியில் வரவே செய்வர். இப்படிப்பட்ட சூழலில் ஊரடங்கை மேலும் வலுவாக்குவதே பிரச்சினையை குழப்பமில்லாமல் தீர்க்க உதவும்.

    English summary
    lockdown: poonam pandey arrested for lockdown violation case issue
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X