சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தமிழகம் லாக்டவுன்: 27 மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகள் அமல்- 4 மாவட்டங்களில் 50% பேருந்துகள் இயக்கம்

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்த 27 மாவட்டங்களில் அமல்படுத்தப்பட்டிருக்கும் லாக்டவுனில் கூடுதல் தளர்வுகள் இன்று முதல் அமலுக்கு வந்தன. சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் 50% பேருந்துகள் இன்று காலை முதல் இயக்கப்பட்டு வருகின்றன.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அடிப்படையில் மாவட்டங்கள் 3 வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள 11 மாவட்டங்களில் தளர்வுகள் இல்லாமல் லாக்டவுன் வரும் 28-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

 தமிழ்நாடு லாக்டவுன்: இ பதிவு.. சலூன்கள்.. போக்குவரத்து.. இந்த 10 விஷயங்கள் ரொம்ப முக்கியம் மக்களே! தமிழ்நாடு லாக்டவுன்: இ பதிவு.. சலூன்கள்.. போக்குவரத்து.. இந்த 10 விஷயங்கள் ரொம்ப முக்கியம் மக்களே!

பேருந்துகள் இயக்கம்

பேருந்துகள் இயக்கம்

இதர 27 மாவட்டங்களில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்கள் ஒரு வகையாக பிரிக்கப்பட்டுள்ளது. இந்த 4 மாவட்டங்களில் இன்று காலை முதல் குளிர்சாதன வசதி இல்லாத பேருந்துகள் 50% இயக்கப்பட்டு வருகின்றன.

சென்னையில் மெட்ரோ ரயில் இயக்கம்

சென்னையில் மெட்ரோ ரயில் இயக்கம்

இதேபோல் இந்த 4 மாவட்டங்களில் படப்பிடிப்புகள் நடத்தவும் அனுமதிக்கப்பட்டுள்ளது. மேலும் நிறுவனங்கள் செயல்படும் நேரமும் நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களில் 100% பணியாளர்களுடன் நிறுவனங்கள் இயங்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இன்று முதல் மெட்ரோ ரயில் சேவை இயக்கப்பட உள்ளது.

கடை திறப்பு நேரம் நீட்டிப்பு

கடை திறப்பு நேரம் நீட்டிப்பு

இதர 23 மாவட்டங்களில் கடைகள் திறப்பு நேரம் மாலை 5 மணியில் இருந்து 7 மணியாக நீட்டிக்கப்பட்டுள்ளது. அதேபோல் வணிக வளாகங்கள், திரையரங்குகள் தவிர பெரும்பாலான கடைகளை திறக்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த 23 மாவட்டங்களில் பேருந்து போக்குவரத்துக்கு அனுமதிக்கப்படவில்லை.

அலுவலகங்கள் இயங்க தளர்வுகள்

அலுவலகங்கள் இயங்க தளர்வுகள்

மேலும் அரசின் அத்தியாவசியத் துறைகள், சார் பதிவாளர் அலுவலகங்கள் 100% பணியாளர்களுடன் செயல்படலாம் எனவும் அனுமதிக்கப்பட்டுள்ளது. பொதுவாக தொழிற்சாலைகள், நிறுவனங்கள் 33% பணியாளர்களுடன் மட்டும் இயங்க அனுமதிக்கப்பட்டிருக்கிறது.

English summary
The Public transport services resumed in Chennai, Tiruvallur, Kanchipuram and Chengalpattu.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X