ஜெயிக்கலைன்னா செத்துரு..மலையில் இருந்து குதிப்போம்.. 'நாம் தமிழர்' வேட்பாளர்களுக்கு சீமான் கட்டளை!

Subscribe to Oneindia Tamil

சென்னை: லோக்சபா தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் எப்படியாவது வெற்றி பெற்றே ஆகவேண்டும்; அப்படி தேர்தலில் வெல்லாமல் போய்விட்டால் செத்துவிடு; மலையில் இருந்து குதித்து விடு; நானும் சேர்ந்து குதிக்கிறேன் என அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பிறப்பித்திருக்கும் 'கட்டளை' சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

லோக்சபா தேர்தலில் நாம் தமிழர் கட்சி இம்முறையும் தமிழ்நாடு, புதுவையில் தனித்தே களம் காண்கிறது. சீமான் கட்சியின் 40 வேட்பாளர்களும் அண்மையில் அறிவிக்கப்பட்டனர். ஒரே மேடையில் சீமான் 40 வேட்பாளர்களையும் அறிமுகம் செய்தது பேசுபொருளாக இருந்து வருகிறது.

Lok Sabha Election 2024 Seeman warns Naam Tamilar Candidates on Poll Victory

சீமானின் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் பலரும் வேட்பு மனுத் தாக்கல் செய்த போது, இந்தியாவில் தடை செய்யப்பட்ட இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் பெயரில் உறுதி மொழி ஏற்றிருப்பது சர்ச்சையாகி இருக்கிறது. இதனால் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் ஏற்கப்படுமா? என்பதும் கேள்விக்குறியாகி இருக்கிறது.

இதனிடையே சீமான் வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டத்தில் பேசிய சில பேச்சுகள் அடுத்தடுத்து சமூக வலைதளங்களில் விவாதப் பொருளாகி வருகிறது. 40 வேட்பாளர்களை அறிமுகப்படுத்திய சீமான் பேசுகையில், சீதாலட்சுமி ஈரோடு தொகுதியில் நிற்க வேண்டியவர். அடம்பிடித்து திருப்பூர் தொகுதியில் போட்டியிடுகிறார். திருப்பூர் தொகுதியில் வேறு ஒரு தங்கையைத்தான் நிறுத்த முடிவு செய்திருந்தோம். திருப்பூர் தொகுதியில் சீதாலட்சுமி போட்டியிட்டு ஜெயிக்கவில்லை எனில் செத்துரு என சொல்லி இருக்கிறேன். கொன்றே போடுவேன்னு சொல்லி இருக்கிறேன்.. ஜெகதீஷ் கிட்ட எல்லாம் ஜெயிக்கலைன்னா ஏற்காடு மலையில் இருந்து குதிச்சுடுன்னு சொல்லி இருக்கிறேன்.. நானும் வாரேன்.. சேர்ந்தே குதிப்போம்னு சொல்லி இருக்கிறேன்.. அப்படிப்பட்ட ஒரு நிலையில் நாம் நிற்கிறோம். எப்பாடுபட்டவாது நாம் வெல்ல வேண்டும். எங்களுக்கு வாக்களிக்காமல் நாதியற்றவர்களாக்கிவிடாதீர்கள்.. எங்களுக்கு வாக்களிப்பது என்பது உங்களது நன்மைக்காக; உங்களுக்காகத்தான் என்றார்.

Lok Sabha Election 2024 Seeman warns Naam Tamilar Candidates on Poll Victory

விருப்பமே இல்லாத வேட்பாளர்களை தேர்தல் களத்தில் கட்டாயப்படுத்தி வேட்பாளராக நிறுத்தி இருப்பதாக சீமான் பேசியதும் ஏற்கனவே விவாதத்துக்குரியதானது. தற்போது சீமானின் 'செத்துவிடு' அன்பு கட்டளையும் விமர்சனத்துக்கும் விவாதத்துக்குரியதாகி இருக்கிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+