• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

யூடியூபர் மதன் கௌரிக்கு நித்யானந்தாவிடம் இருந்து காப்பிரைட்ஸ் ஸ்டிரைக்! அப்படி என்ன கன்டென்ட் அது?

Google Oneindia Tamil News

சென்னை: யூடியூபர் மதன்கௌரிக்கு நித்யானந்தா அலுவலகத்திலிருந்து காப்பிரைட் ஸ்டிரைக்ஸ் வந்துள்ளதாக வீடியோ வெளியிட்டுள்ளார்.

மதன் கௌரி என்பவர் யூடியூப் சேனல் வைத்து நடத்தி வருகிறார். இவருக்கு 6 மில்லியன் சப்ஸ்கிரைபர்கள் உள்ளனர். தென்னிந்தியாவின் விலாகர்களில் மிகவும் பிரபலமானவராக அறியப்படுகிறார்.

இவர் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்தவர். கடந்த 2013 ஆம் ஆண்டு இவர் யூடியூப் சேனலை தொடங்கினார். கடந்த 11 ஆண்டுகளாக காதலித்து வந்த தோழியை கடந்த பிப்ரவரி மாதம் திருமணம் செய்து கொண்டார்.

பலாத்கார வழக்கு! நித்யானந்தா எங்கே? சத்சங்க வீடியோக்களில் க்ளூ தேடும் போலீஸ்.. விரைவில் கைது? பலாத்கார வழக்கு! நித்யானந்தா எங்கே? சத்சங்க வீடியோக்களில் க்ளூ தேடும் போலீஸ்.. விரைவில் கைது?

சுவாரஸ்யம்

சுவாரஸ்யம்

இவர் நாட்டு நடப்புகளை சுவாரஸ்யமாக அளிப்பதால் இவருக்கு இளைஞர்கள் பட்டாளத்தின் ஆதரவு உள்ளது. எப்போதும் தனித்துவம் தனித்தன்மை இருந்தால் மட்டுமே சோபிக்க முடியும் என்பதை அறிந்த மதன் கௌரியும், தனது வீடியோக்களில் தனி ஸ்டைலை கடைப்பிடித்து வருகிறார்.

வீடியோ

வீடியோ

இவர் நேற்றைய தினம் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் நித்யானந்தா ஆசிரமத்திலிருந்து அவருக்கு ஒரு காப்பிரைட்ஸ் மெயில் வந்ததாக தெரிவித்துள்ளார். அந்த வீடியோவில் மதன் கௌரி பேசுகையில் சிங்கப்பூரில் நான் பாட்டுக்கு சிவனேனு இருக்கேன். எனக்கு யூடியூப்பில் இருந்து காலையில் ஒரு மெயில் வந்துள்ளது.

யூடியூப்பிலிருந்து மெயில்

யூடியூப்பிலிருந்து மெயில்

என்னடா இது காலங்காத்தால மெயிலா என ஓபன் செய்து பார்த்தேன். இதுவரை எனக்கு அது போன்று வராத மெயில் வந்தது. அதாவது எனது சேனலுக்கு காப்பிரைட் ஸ்டிரைக் வந்ததாக அந்த மெயிலில் குறிப்பிட்டிருந்தது. காப்பிரைட் ஸ்டிரைக் என்பது எவ்வளவு பெரிய பிரச்சினை என்பது அனைவருக்கும் தெரியும்.

 வீடியோக்கள்

வீடியோக்கள்

என் வீடியோக்களில் என் முகத்தை மட்டுமே பயன்படுத்தி வருகிறேன். வேறு யாருடைய கன்டென்ட்டையும் நான் பயன்படுத்துவதே இல்லை. பிறகு எப்படி காப்பிரைட் ஸ்டிரைக் வரும் என யோசித்தேன். மெயிலை படித்து பார்த்தால் நித்யானந்தாகிட்ட இருந்து காப்பிரைட் ஸ்டிரைக் வந்துள்ளது.

பிரச்சினை

பிரச்சினை

நித்யானந்தாவுக்கு எப்போது பிரச்சினை என்றாலும் அவருக்கு ஒரு ஹைப்பை கொடுத்து தூக்கிவிடும் நமக்கு எப்படி காப்பிரைட் பிரச்சினை என யோசித்தேன். நித்யானந்தா மாஸ் எனும் வீடியோவை பயன்படுத்தியதால் காப்பிரைட் விதிகளை மீறிவிட்டதாக மெயில் வந்தது. போய் பார்த்தால் அது ஷார்ட்ஸ் வீடியோ.

மும்பையில் போஸ்டர்

மும்பையில் போஸ்டர்

நான் மும்பையில் காரில் போய் கொண்டிருந்த போது நித்யானந்தாவின் பேனர் அங்க இருந்தது. இதை பார்த்துவிட்டு நான் உடனே ஒரு ஜூம் செய்து பார்த்தீர்களா தலைவர் (நித்தி) எல்லா இடத்திலும் இருக்கிறார் என ஷார்ட்ஸ் போட்டிருந்தேன். இதை இன்ஸ்டாகிராமில் ரீல்ஸாகவும் போட்டிருந்தேன். அந்த போஸ்டரில் இருந்தது நித்யானந்தாவின் சொந்த படைப்பு ஏதும் இல்லை.

இதுக்கெல்லாமா ஸ்டிரைக் கொடுப்பாங்க?

இதுக்கெல்லாமா ஸ்டிரைக் கொடுப்பாங்க?

அது டிஸ்கவரி பிளஸ்ஸில் வந்த காட்மேன் அல்லது கான்மேன் என்ற சீரிஸின் பிரமோஷன் போஸ்டர். இது நித்யானந்தாவை பற்றிய கதை. சாலையில் இருந்த ஒரு புகைப்படத்தை எடுப்பதற்கு எப்படி காப்பிரைட் அடிக்க முடியும் என்பது எனக்கு புரியவே இல்லை. மற்றவர்களின் கண்டன்டை எடுத்து யூஸ் செய்ய மட்டுமே உரிமை இல்லையே தவிர ஒரு படத்தையோ புகைப்படத்தையோ ரிவ்யூ செய்து கொள்ள உரிமை உள்ளது. இதற்கு முன்பு எத்தனையோ முறை நான் அவரது வீடியோவை பயன்படுத்தியுள்ளேன். அப்போதெல்லாம் இது போல் வந்ததே இல்லை. நித்யானந்தாவிற்கு கீழ் இருப்பவர்கள்தான் யாரோ இப்படி செய்கிறார்கள். முதலில் தலைவா அவர்கள கவனியுங்கள் என அந்த வீடியோவில் பேசியிருந்தார்.

English summary
You tuber Madhan Gowri gets Copyright infringement notice from Nithyananda.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X