பிரசார் பாரதியா?.. இந்தி பிரச்சார பாரதியா?.. மத்திய அமைச்சரிடம், சு.வெங்கடேசன் எம்.பி 'நறுக்' கேள்வி
சென்னை: தமிழ்நாட்டின் 6 மாவட்டங்களில் பணியாற்ற இந்தி எதற்கு? என்று பிரசார் பாரதி பணியிட அறிவிப்பு குறித்து மதுரை எம்.பி சு.வெங்கடேசன் கேள்வி எழுப்பி உள்ளார். பிரசார் பாரதியா? அல்லது இந்தி பிரச்சார பாரதியா? என்று அவர் கூறினார்.
பிரசார் பாரதியின் பணியிட விதியை உடனே மாற்ற வேண்டும் என்று மத்திய மத்திய தகவல் ஒலிபரப்பு துறை அமைச்சர் அனுராக் சிங் தாகூருக்கு மதுரை எம்.பி சு.வெங்கடேசன் கடிதம் எழுதியுள்ளார்.

இந்தி பிரச்சார பாரதியா?
இது தொடர்பாக அவர் எழுதிய கடிதத்தின் விவரம்: பிரசார் பாரதி "இந்தி பிரச்சார பாரதியாய்" தன்னை நினைத்துக் கொள்கிறதா என்று தெரியவில்லை.ஏனெனில்,பல் ஊடக பத்திரிக்கையாளர்" என்ற பதவிக்கான அறிவிக்கை கடந்த 11.01.2022 அன்று வெளியிட்டுள்ளது.

கூடுதல் விவரங்கள் இல்லை
ஒப்பந்த அடிப்படையிலான இந்த பணிக்கு,தமிழ்நாட்டில் சென்னை,கோவை,மதுரை,சேலம்,திருச்சி,நெல்லை ஆகிய 6 மாவட்டங்களில் 8 காலியிடங்கள் மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளன என்று தூர்தர்சன்,அகில இந்திய வானொலி ஆகியனவற்றிற்கு அவரது பணிகள் பயன்படுத்தப்படும்.அதற்கான தகுதியில் "விரும்பப்படும் கூடுதல் தகுதிகளில்" இந்தி அறிவும் குறிப்பிடப்பட்டுள்ளது.ஆனால்,அதற்கு என்ன கூடுதல் மதிப்பெண், முன்னுரிமை என்ற விவரங்கள் இல்லை.

பணியிடங்கள் எவ்வளவு?
இது இந்தி அறியாத விண்ணப்பதாரர்கள் மத்தியில் அச்சத்தை உருவாக்கி உள்ளது.தாங்கள் கழித்துக் கட்டப்படுவதற்கு இது காரணம் ஆக்கப்படுமோ என்று,போட்டியில் தங்களுக்கு தடைக் கல்லாக மாறுமோ என்று,நமக்கும் புரியவில்லை ஏன் இந்தி உள்ளே நுழைகிறது என்று விண்ணப்பதாரர்களின் மனதில் உண்மையான அச்சங்களை ஏற்படுத்தியுள்ளன. இந்த அறிவிக்கையில் இட ஒதுக்கீடு பற்றிய குறிப்புகளும் இல்லை.இந்த பதவி புதிதானதா? இந்த பதவியில் மொத்தம் அனுமதிக்கப்பட்டுள்ள பணியிடங்கள் எவ்வளவு? அந்த எண்ணிக்கை இட ஒதுக்கீடுக்கான வரம்பிற்குள் வருகிறதா இல்லையா?,

நேர்மையான பதில் வேண்டும்
மேலும்,விரும்பத்தக்க தகுதியில் இருந்து ஹிந்தியைக் கைவிடவும், பதவிக்கான குறைந்தபட்ச அளவுகோல்களை விட கேடர் வலிமை அதிகமாக இருந்தால்,ஆட்சேர்ப்பில் இடஒதுக்கீட்டை உறுதிசெய்யவும் பிரசார் பாரதியிடம் அறிவுறுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்.விரைவில் நேர்மறையாக பதிலளிப்பீர்கள் என்று நம்புகிறேன். இவ்வாறு சு.வெங்கடேசன் எம்.பி அந்த கடிதத்தில் கூறியுள்ளார்.
-
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்! -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி












Click it and Unblock the Notifications