சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"தலைநகர அரசியல்".. அதுதான் ஏற்கனவே நிறைய இருக்கே.. எதுக்கு புதுசா 2வது தலைநகரம்!

மதுரையை 2வது தலைநகராக அறிவிக்கலாமா என்பது குறித்து விவாதம் தேவையா என எழுந்துள்ளது

Google Oneindia Tamil News

சென்னை: மதுரையை 2வது தலைநகராக்குங்க.. இல்லை இல்லை.. திருச்சியைத்தான் ஆக்க வேண்டும்.. இப்படி ஒரு சண்டை தமிழகத்தில் கிளம்பி பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

Recommended Video

    மதுரையை இரண்டாவது தலைநகராகக்க வேண்டும் - ஆர். பி. உதயகுமார் தீர்மானம்

    சத்தியமாக இதில் நல்ல நோக்கம் இருக்கா என்று தெரியவில்லை. ஆனால் அரசியல் நோக்கம் கண்டிப்பாக இருக்கிறது. தேர்தல் நெருங்கும் சமயத்தில் வழக்கமாக பல திசை திருப்பல்கள் நடைபெறும். அப்படி ஒரு திசை திருப்பலாகத்தான் இதைப் பார்க்க வேண்டியுள்ளது.

    ஒரு காலத்தில் தமிழகத்தை இரண்டாக பிரிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது. டாக்டர் ராமதாஸ் இதை முன்வைத்தார். பழ. நெடுமாறன் போன்ற தலைவர்களும் கூட இதை பின் தொடர்ந்தனர். ஆனால் மக்கள் மத்தியில் இந்தக் கோரிக்கைக்கு ஆதரவு கிடைக்கவில்லை. ஒன்று பட்ட தமிழகத்தைத்தான் தமிழக மக்கள் விரும்புகிறார்கள்.

    உரிமையை மீட்டெடுத்த ஆத்துப்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவி அமிர்தம்-ஆட்சியர் முன்பு தேசியக்கொடி ஏற்றினார்உரிமையை மீட்டெடுத்த ஆத்துப்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவி அமிர்தம்-ஆட்சியர் முன்பு தேசியக்கொடி ஏற்றினார்

     2வது தலைநகரம்

    2வது தலைநகரம்

    இந்த நிலையில்தான் இப்போது 2வது தலைநகரம் கோரிக்கை கிளம்பியுள்ளது. ஆனால் இது புதிதில்ல.. இதற்கு முன்பே கூட உதித்த ஒன்றுதான். எம்ஜிஆர். திருச்சியை தமிழகத்தின் தலைநகராக மாற்ற வேண்டும் என்ற விருப்பத்தை பகிரங்கமாகவே வெளியிட்டார். திருச்சி, தமிழகத்தின் மையப் பகுதி எனவே அங்கு தலைநகரை மாற்றினால் ஒட்டுமொத்த தமிழக மக்களுக்கும் அது பயன் தரும் என்பது அவரது கருத்து. ஆனால் அதிகாரிகள் மட்டத்தில் அதற்கு வரவேற்பு கிடைக்கவில்லை. பல நடைமுறைச் சிக்கல்கள் இருப்பதாக அவர்கள் சொல்லவே திட்டம் கிடப்பில் போடப்பட்டது.

     குடிநீர் பிரச்சனை

    குடிநீர் பிரச்சனை

    பின்னர் சென்னை மாநகரின் மக்கள் நெரிசல், குடிநீர்ப் பிரச்சினை உள்ளிட்டவற்றைத் தீர்க்க துணை நகரங்கள் அமைக்கலாம் என்ற கோரிக்கைகள் எழுந்தன. சில துணை நகரங்களும் உருவாகின. கருணாநிதி காலத்திலேயே அவை ஆரம்பித்து விட்டன. இருந்தாலும் அவையும் கூட பலன் தரவில்லை. இந்த நிலையில்தான் சென்னை உயர்நீதிமன்றத்தின் கிளை மதுரையில் அமைந்தது. தென் தமிழக மக்கள் வழக்குகளுக்காக சென்னை வருவது நின்றது. அந்த வகையில் உயர்நீதிமன்றத்திற்கு சற்று நிவாரணம் கிடைத்தது.

     மதுரை

    மதுரை

    இது இருக்கட்டும்.. தமிழகத்தின் 2வது தலைநகரம் பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறோமே.. ஆனால் ஏற்கனவே தமிழகத்தின் பல நகரங்கள் பல்வேறு விஷயங்களில் தலைநகரங்களாகவே விளங்குவது குறித்து நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்.. உண்மைதாங்க.. மதுரையை எடுத்துக் கொண்டால் தமிழகத்தின் கலாச்சாரத் தலைநகர் என்று சொல்வார்கள். சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்த மதுரைக்கு அப்படியும் ஒரு செல்லப் பெயர் உண்டு.

    சிறப்பு

    சிறப்பு

    கோவையை எடுத்துக் கொண்டால் தமிழகத்தின் வர்த்தகத் தலைநகர் என்ற செல்லப் பெயர் உண்டு. கோவையின் தொழில் வளர்ச்சி சென்னையையும் மிஞ்சியது. சிறு தொழில்களின் தலைநகராகவும், தென்னிந்தியாவின் மான்செஸ்டராகவும் விளங்குவது கோவை. எனவே கோவையும் கூட தமிழகத்தின் ஒரு தலைநகராகவே ஏற்கனவே திகழ்கிறது.

     தஞ்சாவூர்

    தஞ்சாவூர்

    தஞ்சாவூரை எடுத்துக் கொண்டால் பண்பாட்டுத் தலைநகராக அதை அழைப்பார்கள். காவிரியின் குழந்தையான தஞ்சை காவிரி பாசனப் பகுதியின் தலைமை நகரமாக மட்டுமல்லாமல் தமிழ்ப் பண்பாட்டின் அடையாளமாகவும் திகழ்கிறது. இப்படி ஏற்கனவே தமிழகத்தின் பல நகரங்கள் பல விதங்களில் தலைநகரமாக மக்களால் அன்போடு அழைக்கப்பட்டும், கொண்டாடப்பட்டும் வருகின்றன. எனவே 2வது தலைநகரம், 3வது தலைநகரம் என்று சொல்லி புதிய விஷயங்களைக் கொண்டு வந்தால் அதை மக்கள் எப்படிப் பார்ப்பார்கள், எடுத்துக் கொள்வார்கள் என்பது விவாதத்துக்குரியது.

    English summary
    madurai should be declared the 2nd capital of tamil nadu, says tn ministers
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X