அணிலால் சேதமான மின்கம்பி.. 'தெர்மாகோல் சயிண்டிஸ்ட்'.. தொட்டு ஆய்வு பண்ணுங்க.. செந்தில் பாலாஜி நக்கல்
சென்னை : நாகையில், அணில் ஓடியதால் மின் கம்பிகள் உரசி விபத்து ஏற்பட்ட செய்தியை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து அமைச்சர் செந்தில் பாலாஜி, மதுரை தெர்மாகோல் சயிண்டிஸ்ட் செல்லூர் ராஜூ இந்த பார்க்கவும் என்று பதிலடி கொடுத்துள்ளார்.
Recommended Video
தமிழகத்தில் கடந்த ஒரு மாதமாக அடிக்கடி மின்வெட்டு ஏற்படுவதற்கு எதிர்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். அடிக்கடி மின் வெட்டு ஏற்படுவதற்கு கடந்த ஆட்சியில பாராமரிப்பு பணிகள் மேற்கொள்ளததது தான் காரணம் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி குற்றம்சாட்டினார்.
அத்துடன் மின் கம்பங்களில் மரங்கள், செடிகள் மண்டி மின் கம்பிகளில் அணில் ஓடும்போது இரு கம்பிகளும் இணைவதால் மின்தடை ஏற்படுவதாகவும் விளக்கம் அளித்திருந்தார். அமைச்சர் கூறிய தகவலில் 'அணில் மின் கம்பியில் ஓடுவதால் மின் தடை ஏற்படுகிறது' என்று கூறிய வீடியோவை கட் செய்து எதிர்க்கட்சியினர் கிண்டல் செய்து வருகின்றனர்.

அணில் காரணம்
இந்நிலையில் நாகை மாவட்டம் சாமந்தான்பேட்டையில் 55 மீட்டர் நீளமுள்ள உயரழுத்த மின் கம்பி அணில் செய்த சில்மிஷத்தால் இன்சுலேட்டர் வெடித்து திடீரென அறுந்து விழுந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த வெளிப்பாளையம் மின் துறை ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு வந்து பார்த்தபோது, அணில் ஓடியதால் சாட் அடித்ததில் மின்கம்பி அறுந்து விழுந்து இன்சுலெட்டர் வெடித்து விபத்து ஏற்பட்டதையும், இதன் காரணமாக அணில் உயிரிழந்து கிடந்ததையும் கண்டறிந்தனர்.

மின் கம்பி சேதம்
அணிலின் வாய்ப்பகுதி இன்சுலேட்டரிலும் (பீங்கான்), வால் பகுதி கம்பத்திலும் உரசிய உடன் ஷார்ட் அடித்து இன்சுலேட்டர் வெடித்து, 55 மீட்டர் நீளமுள்ள உயரழுத்த மின்கம்பியின் ஒரு பகுதிஅறுந்து விழுந்ததையும் கண்டறிந்தனர். அதனை தொடர்ந்து சாமந்தான்பேட்டை பகுதியில் விபத்து ஏற்பட்ட மின்கம்பம் அருகே அணில் செல்ல வசதியாக இருந்த மரக்கிளைகளை அகற்றிய மின் ஊழியர்கள், அணில் சேதப்படுத்திய 11 ஆயிரம் வோல்டேஜ் திறன் கொண்ட உயரழுத்த மின்கம்பியை சரி செய்தனர். '

அமைச்சர் பதிலடி
இதன் காரணமாக மின்சாரம் நாகை பகுதிகளில் தடைபட்டது. இந்நிலையில் அணில் ஓடியதால் மின் கம்பிகள் உரசி விபத்து ஏற்பட்ட செய்தியை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து அமைச்சர் செந்தில் பாலாஜி, மதுரை தெர்மாகோல் சயிண்டிஸ்ட் செல்லூர் ராஜூ இந்த பார்க்கவும் என்று பதிலடி கொடுத்துள்ளார்.

மின் கம்பியை பாருங்கள்
அமைச்சர் செந்தில் பாலாஜி தனது ட்விட்டர் பதிவில், தனியார் செய்தி தொலைக்காட்சியின் வீடியோவை பகிர்ந்து அதில், நாகையில், அணில் ஓடியதால் மின்கம்பிகள் உரசி விபத்து - மின்கம்பியை சீரமைக்கும் பணியில் #TNEB ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். மதுரை தெர்மாகோல் சயிண்டிஸ்ட்
செல்லூர் ராஜூ இந்த செய்தியை பார்த்த பின் நேரில் வந்து மின் கம்பிகளை பிடித்து ஆய்வு செய்ய அழைக்கின்றோம் என்று கூறியுள்ளனர்.

கொடுத்த விளக்கம்
இதேபோல் ஆலங்குளம் துணை மின் நிலையத்து மின் பிரச்சினைகளுக்கு அணில்கள் காரணமென, 2020ல் மதுரை உயர்நீதிமன்றத்தில் அப்போதைய அதிமுக அரசு அளித்த விளக்கம் இது. பார்க்க படித்தவர் போலிருக்கும் செல்லூர் ராஜூ இதைப்பற்றி முன்னாள் அமைச்சர் தங்கமணியிடமோ அல்லது உயர்நீதி மன்றத்திடமோ கேட்டு புத்தி தெளிய வேண்டுகிறேன் என்றும் செந்தில் பாலாஜி பதிலடி கொடுத்துள்ளார்.












Click it and Unblock the Notifications