மகளிர் உரிமை தொகை.. செக் பண்ண அதிகாரிகள் போட்ட புதிய கணக்கு.. எங்கயோ போகுதே!
சென்னை : மகளிர் உரிமை தொகை ஒருவரின் வங்கி கணக்கிற்கு சரியாக போகிறதா என்பதை சோதனை செய்ய ஒருவருக்கு ரூ.1 அனுப்பினால் கூட ரூ.1.06 கோடி செலவாகிறது என்பதால் பயனாளியின் கணக்குக்கு 10 பைசா அனுப்பி வருகிறார்கள். அப்படி 10 பைசா அனுப்பினாலும் 10.06 லட்சம் செலவாகும் என்கிறார்கள் அதிகாரிகள்.
மகளிர் உரிமை தொகை திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று காஞ்சிபுரத்தில் தொடங்கி வைத்துள்ளார். ஆனால் நேற்றே பலருக்கும் வங்கி கணக்கில்பணம் வைக்கப்பட்டுள்ளது.

அத்துடன் பலருக்கும் நீங்கள் கலைஞர் உரிமை தொகை திட்டத்திற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளீர்கள். மாதம் மாதம் உங்களுக்கு உரிமை தொகை கிடைக்கும் என்று எஸ்எஸ்எஸ் வருகிறது.
தமிழகம் முழுவதும் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்திற்கு விண்ணப்பித்தவர்கள் 1.63 கோடி பேர். இவர்களில் தகுதியான ஒரு கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள்.
தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளின் வங்கிக் கணக்கை சரிபார்க்கும் நடவடிக்கை தொடங்கி உள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பயனாளிகளின் வங்கிக் கணக்குகளுக்கு ஒரு ரூபாய் அனுப்பி சரிபார்க்கும் நடைமுறை நேற்றே தொடங்கிவிட்டது. இந்த தகவல் எஸ்எம்எஸ் வாயிலாக பயனாளிகளுக்கு தெரிவிக்கப்பட்டு வருகிறது. ஆனால் முதலில் ஒருவருக்கு ஒரு ரூபாய் அனுப்பி சோதிக்க முடிவு செய்து, பணத்தையும் அனுப்பினார்கள்.
ஆனால் ஒருவருக்கு ஒரு ரூபாய் அனுப்பினாலும் மொத்தம் 1.06 கோடி செலவாகும் என்பதால் ஒரு ரூபாய் அனுப்பி சோதிக்கும் முறையை கைவிட்டுவிட்டார்களாம். அதற்கு பதில் 10 பைசா அனுப்பும் திட்டத்தை செயல்படுத்தி உள்ளார்கள். இதன்படி 10 பைசா மட்டுமே வங்கி கணக்கில் அனுப்பப்படுகிறதாம். அப்படி 10 பைசா அனுப்பினாலும் 10.06 லட்சம் செலவாகும் என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். நேற்றே பலருக்கும் எஸ்எம்எஸ் வந்த நிலையில் இன்றும் பலருக்கும் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.
வரும் 18ம் தேதி வரை பணம் அனுப்பும் பணியினை வருவாய் துறை அதிகாரிகள் மேற்கொள்வார்கள் என்றும் அதற்குள் தேர்வு செய்யப்பட்ட மெசேஜ் அல்லது பணம் ஆகியவை வரும் என்றும், ஒருவேளை நிராகரிக்கப்பட்டாலும் அதற்கான எஸ்எம்எஸ்ம் அனுப்பி வைக்கப்படும். அவர்கள் இசேவை மையங்கள் மூலமாக மேல்முறையீடு செய்து பயன் பெறலாம் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது. எனவே பணம் வரவில்லை. எஸ்எம்எஸ் வரவில்லை என்றால் வரும் செப்டம்பர் 18ம் தேதி வரை காத்திருங்கள்.
-
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ்












Click it and Unblock the Notifications