மஹா சிவராத்திரி விழா.. சிவாலயங்களில் சிறப்பு வழிபாடு! பக்தர்கள் தரிசனம்
சென்னை: இன்று தமிழகம் முழுக்க உள்ள சிவாலயங்களில் மகா சிவராத்திரி மிகப் பெரிய வழிப்பாடாகக் கொண்டாடப்படுகிறது.
கோவில் நகரமான காஞ்சிபுரத்தில் உலக பிரசித்திபெற்றது உள்ளிட்ட அனைத்து சிவாலயங்களிலும் மஹாசிவராத்திரி விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. மஹாசிவராத்திரியை முன்னிட்டு சிவனுக்கு பல்வேறு சிறப்பு அபிஷேகமும், அலங்காரங்களும் செய்யப்பட்டு பக்தர்களுக்குக் காட்சியளித்தார்.
இந்நிலையில் காஞ்சிபுரம் மூங்கில் மண்டபம் அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மஹா சிவராத்திரியை முன்னிட்டு உலக புகழ்பெற்ற இமயமலையிலுள்ள அமர்நாத் பனி லிங்கத்தைப் போலவே தத்ரூபமாக அச்சு அசலாக அதனைப் பிரதிபலிக்கும் விதமாகப் பனி லிங்கமானது அமைக்கப்பட்டு பக்தர்களின் தரிசனத்திற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இமயமலை அமர்நாத் பனி லிங்கத்தை இதுவரையிலும் நேரில் சந்திக்காதவர்கள் எனக் காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் வசிக்கும் பொது மக்கள் பல்லாயிரக்கணக்கானோர் சில மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து தத்ரூபமாக அமைக்கப்பட்டிருந்த பனி லிங்கத்தைத் தரிசித்து வழிப்பட்டனர்
அதிலும் குறிப்பாக அமர்நாத் பனி லிங்கத்தை தரிசிக்கக் காடு மற்றும் மலை வழியாகப் பக்தர்கள் செல்வது போலவே தத்ரூபமாக அதற்கான பாதை அமைக்கப்பட்டு பொது மக்கள் பனி லிங்கத்தைத் தரிசிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
மேலும் மஹா சிவராத்திரியை முன்னிட்டு புதிய புயல் நடன குழுவினர் சார்பில் அரங்கேறிய பல்வேறு நடனக் கலை நிகழ்ச்சிகளையும் பல்லாயிரக்கணக்கான பொது மக்கள் கண்டு ரசித்தனர்.
இதேபோல தஞ்சாவூர், சிதம்பரம் என மாநிலம் முழுக்க உள்ள பல சிவாலயங்களில் மகா சிவராத்திரி கொண்டாடப்பட்டு வருகிறது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications