அன்று கோபல் கோட்சே...இன்று பேரறிவாளன்... காங்கிரஸ் எம்.பி கடுமையான கமெண்ட்
குற்றவாளிகள் கொலைகாரர்கள் அவர்கள் நிரபராதிகள் அல்ல.. உச்சநீதி மன்றதால் தண்டனை பெற்றவர் .இன்று விடுதலை என்று மாணிக்கம் தாகூர் எம்.பி கூறியுள்ளார்.
சென்னை: குற்றவாளிகள் கொலைகாரர்கள் அவர்கள் நிரபராதிகள் அல்ல.. உச்சநீதிமன்றதால் தண்டனை பெற்றவர் இன்று விடுதலை என்று காங்கிரஸ் கட்சியின் எம்.பி மாணிக்கம் தாகூர் கூறியுள்ளார். அன்று கோபல் கோட்சே, இன்று பேரறிவாளன் என்றும் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டுள்ளது தொடர்பாக காங்கிரஸ் தலைவர்கள் அதிருப்தியை வெளிப்படுத்தி வரும்நிலையில், தமிழக காங்கிரஸ் எம்பியான மாணிக்கம் தாகூர், பேரறிவாளனை கோட்சேவையும் ஒப்பிட்டு ட்விட் செய்துள்ளார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கடந்த 1991ம் ஆண்டு மே 21ம் தேதி சென்னை அருகே ஸ்ரீபெரும்புதூரில் வெடிகுண்டு தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி உட்பட 7 பேர் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறை தண்டனை அனுபவித்து வருகின்றனர். ஏழு தமிழர்களை விடுதலை செய்ய வேண்டும் என கோரிக்கை வைக்கப்படும் போதெல்லாம், காங்கிரஸ் தரப்பில் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது.

பேரறிவாளன் விடுதலை
இந்நிலையில், தன்னை விடுதலை செய்யக் கோரி பேரறிவாளன் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு மீது நீதிபதிகள் நாகேஸ்வர ராவ், பி.ஆர்.கவாய் அடங்கிய அமர்வு விசாரணை நடத்தியது. தமிழக அரசு, ஆளுநர் தரப்பு, மத்திய அரசு தரப்பு, பேரறிவாளன் தரப்பு வாதங்களை கேட்ட உச்ச நீதிமன்றம் பேரறிவாளனை விடுவித்து இன்று தீர்ப்பு வழங்கியது.

காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு
இதற்கு தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் பலவும் வரவேற்பு தெரிவித்துள்ளன. அதேவேளையில், காங்கிரஸ் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளது. இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர் கே.எஸ்.அழகிரி, கொலை செய்தவர்கள் தமிழர்கள். அவர்கள் 25 ஆண்டுகளாக சிறையில் இருக்கிறார்கள். அதற்காக அவர்களை விடுதலை செய்ய வேண்டுமென்று சிலர் கூறுகிறார்கள்.

தமிழர்களா?
பல நூற்றுக்கணக்கான தமிழர்கள் தமிழக சிறைகளில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக விடுதலை செய்யப்படாமலேயே இருக்கிறார்கள். அவர்களை விடுதலை செய்ய வேண்டுமென்கிற குரல் ஏன் எழவில்லை? அவர்களெல்லாம் தமிழர்கள் இல்லையா? ராஜிவை கொலை செய்தவர்கள் மட்டும் தான் தமிழர்களா? தமிழ் உணர்வு உள்ளவர்கள் இதற்கு பதிலளிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

மாணிக்கம் தாகூர்
நாளை காலை 10 மணி முதல் 11 மணிவரை வாயில் வெள்ளை துணியை கட்டிக்கொண்டு காங்கிரஸ் கட்சியினர் அறப்போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவரும் விருதுநகர் லோக்சபா தொகுதி எம்பியுமான மாணிக்கம் தாகூர் தனது ட்விட்டர் பக்கத்தில், 'குற்றவாளிகள் கொலைகாரர்கள் அவர்கள் நிரபராதிகள் அல்ல.. உச்சநீதிமன்றதால் தண்டனை பெற்றவர் . இன்று விடுதலை . அன்று கோபல் கோட்சே, இன்று பேரறிவாளன்' என பதிவிட்டுள்ளார்.

நெட்டிசன்கள் எதிர்வினை
மாணிக்கம் தாகூர் பதிவுக்கு பலரும் கமெண்ட் பதிவிட்டு வருகின்றனர். ஏழு தமிழர் விடுதலைக்கு எதிர்ப்பு தெரிவித்த காங்கிரஸ் கட்சி பேரறிவாளன் விடுதலை பற்றி நேரடியாகவே கடுமையான கமெண்ட் பதிவிடுவதற்கு பலரும் ட்விட்டரில் பதிலடி கொடுத்து வருகின்றனர்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications