என்ன சார் இதெல்லாம் .. இயக்குனர் பாரதிராஜாவை வம்பிழுத்த வாழப்பாடியாரின் வாரிசு
சென்னை: கடந்த ஆண்டு அமேசான் நிறுவனம் தமிழர்களின் உணர்வை புண்படுத்தி விட்டதாக கூறிக் கொண்டு பொங்கி எழுந்த பாரதிராஜா இந்த ஆண்டு அமேசான் நிறுவனத்தின் பெருமை பாடும் விளம்பரத்திலேயே நடித்திருப்பது குறித்து காஙகிரஸ் கட்சியின் மறைந்த மூத்த தலைவர் வாழப்பாடி ராமமூர்த்தியின் மகனான ராம சுகந்தன் கிண்டல் செய்துள்ளார்.
தமிழ் திரையுலகின் மறக்க முடியாத பல பக்கங்களுக்கு சொந்தக்காரர் இயக்குனர் பாரதிராஜா. லைம் லைட்களிலும் சினிமா செட்டுகளிலும் இயங்கிக் கொண்டிருந்த தமிழ் சினிமாவை நீர் ஓடைகளிலும் முட்காடுகளிலும் வயல்வெளிகளிலும் ஓட விட்டவர்.
கல்லையே நடிக்க வைத்தவர்யா பாரதிராஜா என சினிமாவில் ஒரு வசனம் வரும் அந்த அளவுக்கு மண் சார்ந்த மக்கள் சார்ந்த கதைகளை எடுத்து தனக்கென ஒரு தனி அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்தவர். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்றைய நிலைமைக்கு காரணம் பாரதிராஜாவால் உருவாக்கப்பட்ட பத்த வச்சுட்டியே பரட்டை கதாபாத்திரம்.

இயக்குனர் இமயம் பாரதிராஜா
காதல் சோகம் வன்மம் என கிராமத்து மனிதர்களின் மனதை ஜெராக்ஸ் எடுத்து அதனை வெள்ளித்திரையில் வெளிச்சம் போட்டு காட்டுவதில் பாரதிராஜாவுக்கு இணை பாரதிராஜா மட்டுமே. அவரது பாணியிலேயே பலர் வந்தாலும் பாரதிராஜா என்ற பெயருக்கான தனி அந்தஸ்து இன்னும் தமிழ் சினிமாவில் அப்படியே இருக்கிறது எனவே கூறலாம். அவரது 16 வயதினிலே , சிகப்பு ரோஜாக்கள், கருத்தம்மா, முதல் மரியாதை போன்ற படங்கள் தற்போது தமிழ் சினிமாவின் வரலாற்றையும் கதை சொல்லும் பாணியை புரட்டிப் போட்ட படங்கள்.

சர்ச்சையில் சிக்கிய பாரதிராஜா
சினிமா தாண்டி தமிழர் தமிழ் சார்ந்த சிந்தனையை கொண்டவர் பாரதி ராஜா தொடர்ந்து இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக பேசி வருபவர். சில நேரங்களில் அவரது பேச்சு தவறாகவோ அல்லது சர்ச்சையாக வருவது வழக்கம். அந்த வகையில் தற்போது அவரது செயல்பாடு தான் நெட்டிசன்கள் கேள்வி அவரை நோக்கியே எழுப்ப காரணமாகியுள்ளது . அமேசான் நிறுவனத்தின் விளம்பரத்தில் பாரதிராஜா நடித்துள்ளது தான் இந்த சர்ச்சைகளுக்கு காரணம்.

அமேசான் நிறுவனம்
உலக அளவில் சில்லறை வணிகம், டெலிவரி மற்றும் ஒடிடி துறையில் ஜாம்பவானாக விளங்கி வரும் அமேசான் நிறுவனம் தமிழகத்தில் தொடர்ந்து பல திரைப்படங்களை வெளியிட்டு வருகிறது. சார்பட்டா பரம்பரை , ஜெய்பீம், சூரரைப் போற்று, பொன்மகள் வந்தாள் உள்ளிட்ட மெகா ஹிட் திரைப்படங்களை வெளியிட்டு தியேட்டர் உரிமையாளர்களுக்கே டஃப் கொடுத்து வருகிறது அமேசான் நிறுவனம் .மேலும் பல பரிசுகளையும் அந்த நிறுவனம் வெளியிட்டு வரும் நிலையில் கடந்த ஆண்டு ஃபேமிலி மன் டோ இணைய தொடரை வெளியிட்டது.

பேமிலி மேன் 2 சர்ச்சை
தமிழில் போராளிகளின் வரும் விடுதலைப் போராட்டத்தையும் அவர்களின் வரலாற்றையும் அறியாத தகுதியற்ற நபர்களால் தமிழின விரோதிகள் இந்த தொடர் எடுக்கப்பட்டு இருக்கிறது என குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன இது தொடர்பாக அறிக்கை வெளியிட்ட திரைப்பட இயக்குனர் பாரதிராஜா வெளியிட்ட அறிக்கையில் எங்கள் இனத்திற்கு எதிரான தீர்ப்பு இணையத்தில் நிறுத்த வேண்டும் என தமிழ்நாடு அமைச்சர் உள்ளிட்ட அனைவரும் கோரிக்கை வைத்த பிறகும் கூட இந்திய அரசு இந்தத் தொடரை நிறுத்த உத்தரவு பிறப்பிக்க மௌனம் காப்பது எங்களுக்கு மிகுந்த வேதனை அளிக்கிறது என்றும் எங்கள் வேண்டுகோளை புறக்கணித்து தொடர்ந்து ஓட்டி தளத்தில் வெளிவந்தால் அமேசான் நிறுவனத்தின் அனைத்து விதமான வர்த்தகத்தையும் புறக்கணிக்கும் போராட்டத்தில் உலகெங்கும் பரந்துவாழும் தமிழர்கள் பங்கேற்பதை தவிர்க்க இயலாது என்பதை கோடிட்டுக் காட்ட விரும்புகிறேன் என குறிப்பிட்டிருந்தார்.

அமேசான் விளம்பரம்
இந்த சம்பவம் நடந்து ஓராண்டு ஆகியுள்ள நிலையில் தற்போது அமேசான் நிறுவனத்தின் விளம்பரத்தில் நடித்து உள்ளார் இயக்குனர் பாரதிராஜா. பொங்கல் பண்டிகையையொட்டி அமேசான் நிறுவனத்தின் விளம்பரம் ஒன்று சமீபத்தில் வெளியிடப்பட்டது. அதில் கிராமத்து மருத்துவராக இருக்கும் பாரதிராஜா தனது மகனை பார்த்து பேசுவது போல அமைக்கப்பட்டிருக்கும் விளம்பரத்தில் பாரதிராஜா தோன்றி முழுவதும் நடித்துள்ளார். அமேசான் நிறுவனத்தின் பெருமைகளை அவர் கூறுவது போலவும் வசனங்கள் வைக்கப்பட்டுள்ளது.

மீம்ஸ்களால் கலாய்க்கும் நெட்டிசன்கள்
இந்த நிலையில்தான் ஃபேமிலிமேன் 2 வெப்சீரிஸ் தொடர் தற்போது வரை அமேசான் தளத்தில் இருக்கும் போது பாரதிராஜா எப்படி இதில் நடிக்கலாம் என நெட்டிசன்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனர். இதுகுறித்து முன்னாள் அமைச்சர் வழப்பாடி ராமமூர்த்தியின் மகனான ராம சுகந்தனர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு கிண்டல் செய்துள்ளார்.
இது என்ன வகையான மன நிலை உள்ளிட்ட பல்வேறு கமெண்ட்கள் மூலம் ஆயிரக் கணக்கில் மீம்ஸ்ளையும் தயாரித்து வெளியிட்டு வருகின்றனர் நெட்டிசன்கள் இது பாரதிராஜாவுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தவில்லையா? தமிழ் தமிழர் பேச்சு எல்லாம் வேசமா? பணம் என்றால் கொள்கை அவ்வளவு தானா என பல்வேறு கேள்விகளை நெட்டிசன்கள் எழுப்பி வருகின்றனர்.
மேலும் பல்வேறு சமூக வலைதளங்களில் இதுகுறித்து ஏராளமான மீம்ஸ்கள் வைரலாகி வருகிறது.
-
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது?












Click it and Unblock the Notifications