வீரியமாக பரவும் கொரோனா..தமிழகம் முழுவதும் 1 லட்சம் இடங்களில் நாளை தடுப்பூசி முகாம்
தமிழகம் முழுவதும் 31 வது சிறப்பு மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நாளை காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை நடைபெறவுள்ளது.
சென்னை: தமிழகம் முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் நாளை காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை 31-வது சிறப்பு மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அறிவித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் சிறப்பு தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் கடந்த மே 8ஆம் தேதி மற்றும் கடந்த ஜூன் 12ஆம் தேதி என தமிழகம் முழுவதும் 1 லட்சம் இடங்களில் சிறப்பு மெகா கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடைபெற்றன.

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 2,722 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், இதுவரை தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 34,96,32 பேராக அதிகரித்துள்ளது. சென்னையில் அதிகபட்சமாக 939 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.
தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 34,39,606 பேராக உயர்ந்துள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பினால் கடந்த 24 மணி நேரத்தில் ஒருவர் உயிரிழந்ததால் இதுவரை தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 38,028 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன் 18,687 பேர் கொரோனா பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் கொரோனா பரவல் அதிகரித்ததால் மீண்டும் மெகா தடுப்பூசி முகாமை நடத்த மக்கள் நல்வாழ்வுத்துறை முடிவு செய்துள்ளது. அந்த வகையில் தமிழ்நாடு முழுவதும் ஒரு லட்சம் இடங்களில் நாளை மெகா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.
Recommended Video
நாளை காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை 31-வது சிறப்பு மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறவுள்ளது. தமிழகத்தில் இதுவரை 11.45 கோடி டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. 78.78 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அறிவித்துள்ளது.
-
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
தமிழ்நாடு முழுவதும்.. மூடப்படும் பெட்ரோல் பங்குகள்! சட்டம் ஒழுங்கு பிரச்சனையால்.. விஜய்க்கு சிக்கல்! -
சட்டமன்றத்தில் டீலிங்.. மாண்பை உடைத்த விஜய்! கொந்தளிக்கும் எதிர்க்கட்சிகள்! -
தமிழ்நாட்டில் டெண்டர் மற்றும் கட்டிட அனுமதிகளில் ரூல்ஸ் அடியோடு மாறுகிறது.. அரசு அதிரடி உத்தரவு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
Rich CM Vijay: நாட்டின் பணக்கார முதல்வர்கள் பட்டியல்! தமிழக முதல்வர் விஜய்க்கு எத்தனையாவது இடம்? -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல்












Click it and Unblock the Notifications