வெளிநாடுகளுக்கான ஏற்றுமதி..தமிழகம் முழுவதும் ஆவின் பால் தட்டுப்பாடு? தமிழக அரசுக்கு பறந்த கோரிக்கை!
சென்னை : தமிழகம் முழுவதும் ஆவினில் பால் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், அதனை சரி செய்ய பாலுக்கான கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் என தமிழக அரசுக்கு பால் முகவர்கள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இது தொடர்பாக அந்த அமைப்பின் தலைவர் பொன்னுசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்," கொரோனா நோய் பெருந்தொற்று காலத்திற்கு முன்பிருந்தே வடமாநிலங்களில் பசுக்களுக்கு தோல் கட்டி நோய் (LSD) பரவியதன் காரணமாக லட்சக்கணக்கான பசுக்கள் மரணமடைந்ததால் அம்மாநிலங்களில் பால் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் அவை தென் மாநிலங்களை குறி வைக்கத் தொடங்கின.
அத்துடன் நெய், வெண்ணெய், பாலாடைக்கட்டி உள்ளிட்ட பால் பொருட்களில் அதிக லாபம் கிடைப்பதால் முன்னணி தனியார் நிறுவனங்கள் பலவும் வெளிநாடுகளுக்கான ஏற்றுமதிக்கு முக்கியத்துவம் அளிக்கத் தொடங்கியதால் அண்டை மாநிலங்களிலும், தமிழகத்திலும் உள் மாநில விற்பனைக்கு தற்போது கடுமையான பால் தட்டுப்பாடு ஏற்படத் தொடங்கியுள்ளது.

ஆவின் பால்
அதன் காரணமாக நடப்பாண்டில் மட்டும் தனியார் நிறுவனங்கள் பால் கொள்முதல் விலையை கணிசமாக உயர்த்தி, விற்பனை விலையை பலமுறை உயர்த்தின. ஆனால் தமிழக அரசின் பொதுத்துறை கூட்டுறவு நிறுவனமான ஆவினோ கடந்த 2019ம் ஆண்டுக்குப் பிறகு மூன்று ஆண்டுகாலம் கடந்த பிறகும் கூட பாலுக்கான கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க முன் வராத காரணத்தால் ஆவினுக்கான பால் வரத்து தற்போது நாளொன்றுக்கு சுமார் 8 லட்சம் லிட்டருக்கும் மேல் குறையத் தொடங்கியுள்ளது, இந்த பால் வரத்து குறைவானது நாளடைவில் அதிகரிக்கும் என்றே தெரிகிறது.

ஆவினுக்கு இழப்பு
மேலும் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு ஆவின் பால் விற்பனை விலையை லிட்டருக்கு 3.00 ரூபாய் குறைத்தது காரணமாக ஆவினுக்கு சுமார் 270 கோடி ரூபாய்க்கு மேல் இழப்பு ஏற்பட்டு வருவதாக கூறப்படும் நிலையில் தீபாவளி பண்டிகைக்கு 200கோடி ரூபாய்க்கு மேல் இனிப்புகள் விற்பனை செய்ய இலக்கு வைத்திருக்கின்ற காரணத்தினால் இனிப்புகள் உற்பத்திக்கான பால் அதிகமாக தேவைப்படுவதால் தமிழகத்தில் நெல்லை, தூத்துக்குடி, மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கொழுப்பு சத்து செரிவூட்டப்பட்ட (ஆரஞ்சு) ஆவின் பால் விநியோகம் முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது. அதனால் நுகர்வோராகிய பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

மறைமுக விலையேற்றம்
மேலும் தற்போது ஆவின் நிர்வாகம் சந்தித்து வரும் இழப்பை ஈடுசெய்ய பால் கொள்முதல் விலையை உயர்த்தாமல் தனியார் நிறுவனங்களுக்கு இணையான அதிக விற்பனை விலை கொண்ட கொழுப்பு சத்து செரிவூட்டப்பட்ட டீமேட் பாலின் விற்பனையை கட்டாயப்படுத்தி பொதுமக்கள் தலையில் மறைமுக விலையேற்றத்தை ஆவின் நிர்வாகம் திணிக்கத் தொடங்கியுள்ளது. பால் கொள்முதல் விலையை உயர்த்தாமல் மறைமுகமாக விற்பனை விலையை உயர்த்தும் முடிவிற்கு தள்ளப்பட்டுள்ள ஆவின் நிர்வாகத்திற்கும், பால்வளத்துறைக்கும், தமிழக அரசுக்கும் தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் கண்டனத்தை பதிவு செய்கிறது.

தமிழக அரசுக்கு கோரிக்கை
அதே சமயம் ஆவினுக்கு வரவேண்டிய பால் வரத்து தனியார் நிறுவனங்களுக்கு செல்கின்ற இந்த நிலை சரி செய்யப்பட வேண்டுமானால் பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு 15.00 ரூபாய் உயர்த்தி வழங்க தமிழக அரசு உடனடியாக முன் வர வேண்டும். மேலும் வாக்கு வங்கி அரசியலை மனதில் கொண்டு ஆவின் நிறுவனத்தை அழிவுப்பாதைக்கு கொண்டு செல்லாமல் இருக்க ஆவினில் உற்பத்தி செய்யப்படும் சமன்படுத்தப்பட்ட (Toned Milk) பாலுக்கான விற்பனை விலையை மட்டுமே அரசு நிர்ணயம் செய்யவும், நிலைப்படுத்தப்பட்ட (Standardized Milk), கொழுப்பு சத்து செரிவூட்டப்பட்ட (Full Cream Milk) பால் வகைகளுக்கான விற்பனை விலையை முடிவு செய்யவும் ஏற்கனவே ஆவின் நிர்வாகத்திற்கு அதிகாரம் இருப்பதால் அதனைப் பயன்படுத்தி ஆண்டுக்கு ஒரு முறை சமன்படுத்தப்பட்ட பாலினை தவிர மீதமுள்ள பால் விற்பனை விலையையும், பால் கொள்முதல் விலையையும் மாற்றியமைக்க ஆவின் நிர்வாகத்திற்கு முழு அதிகாரம் கொடுக்கப்பட வேண்டும் என தமிழக அரசை தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் வலியுறுத்துகிறது." என கூறியுள்ளார்.
-
சென்னையின் தலையெழுத்தை மாற்றும் ப்ராஜெக்ட்.. ரெடியாகும் 'ரூட் மேப்'... எகிறப்போகும் வேகம்! -
வாகன ஓட்டிகளுக்கு குஷி.. தடம் தெரியாமல் மாறும் தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை? புது ப்ளூபிரிண்ட் ரெடி! -
Gold Investors: தங்கம் விலை தொடர் சரிவு! முதலீட்டாளர்களுக்கு நஷ்டம்? என்ன நடக்கிறது? -
Gold Price: ஒரே நாளில் 7,000 சரிந்த தங்கம்.. இப்போ வாங்குறது சரியாக இருக்குமா? நிபுணர்கள் சொல்வது என்ன? -
'மிஷன் இம்பாசிபிள்.. மெரினா டூ மடிப்பாக்கம்... பறக்கும் சென்னை.. தரம் தெரியாமல் மாறப்போகிறது! -
பிஎஃப் பணம்.. மாத சம்பளம் வாங்குவோருக்கு முக்கிய அறிவிப்பு.. சென்னை உள்பட 10 இடங்களில் முகாம் -
Gold Price: தங்கம் விலை ரூ.2 லட்சத்தை தொடப் போகுது.. இனி குறையவே குறையாது.. உச்சம் தான்! சலானி எச்சரிக்கை -
பறவை காய்ச்சல் மனிதர்களுக்கு பரவுமா? சென்னையில் பீதி.. பொது சுகாதாரத்துறை விளக்கம் -
ரயில்கள் மீது கல் வீசினால் 10 ஆண்டு ஜெயில் தண்டனை.. சென்னை ரயில்வே கோட்டம் கடும் எச்சரிக்கை! -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல!












Click it and Unblock the Notifications