Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நீங்கள் இதைச் செய்ய முன் வந்தால்...அரசு 75% மானியம் வழங்கும்! அமைச்சர் கீதாஜீவன் சூப்பர் அறிவிப்பு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக சட்டப்பேரவையில் இன்று நடைபெற்ற கேள்வி நேரத்தின் போது சூப்பர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார் சமூக நலத்துறை அமைச்சர் கீதாஜீவன்.

சங்கரன்கோவில் திமுக சட்டமன்ற உறுப்பினர் ராஜா எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதிலளித்து பேசிய அவர், அரசின் மானியம் குறித்த முக்கிய தகவலை வெளியிட்டார்.

அமைச்சர் கீதாஜீவன் வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பால் தமிழகம் முழுவதும் யாசகம் கேட்டு பிழைப்பு நடத்துவோர் மறுவாழ்வு பெற முடியும் என்ற சூழல் உருவாகியுள்ளது.

 பட்ஜெட் கூட்டத்தொடர்

பட்ஜெட் கூட்டத்தொடர்

தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கி ஒரு நாள் விடுமுறை நீங்கலாக இன்று 4-வது நாளாக நடைபெற்று வருகிறது. இன்றைய தினம் கேள்வி நேரத்தின் போது, மனநலம் பாதித்த நிலையில் யாசகம் கேட்டு பிழைப்பு நடத்துவோருக்கு மறுவாழ்வு இல்லம் அமைப்பது தொடர்பாக சங்கரன்கோவில் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் ராஜா கேள்வி எழுப்பினார்.

அமைச்சர் கீதாஜீவன்

அமைச்சர் கீதாஜீவன்

அதற்கு பதிலளித்து பேசிய சமூகநலத்துறை அமைச்சர் கீதாஜீவன், யாசகம் கேட்போர் மறுவாழ்வு இல்லங்களை தொடங்கவோ அல்லது நிர்வகிக்கவோ தொண்டு நிறுவன அமைப்புகள் முன்வந்தால் அரசு சார்பில் 75% மானியம் வழங்கப்படும் என்ற புதிய தகவலை வெளியிட்டார். மேலும், முதியோர், ஆதரவற்றோர், உள்ளிட்டோரையும் இணைத்து ஒருங்கிணைந்த மறுவாழ்வு இல்லங்கள் அமைக்க முன் வரும் தொண்டு நிறுவனங்களுக்கு அரசு சார்பில் உதவி செய்யப்படும் என்ற அறிவிப்பையும் வெளியிட்டார்.

 துணை நிற்கும்

துணை நிற்கும்

மறுவாழ்வு இல்லம் அமைக்கும் விவகாரத்தில் தொண்டு நிறுவனங்களுக்கு அரசு துணை நிற்கும் என அமைச்சர் கீதாஜீவன் அறிவித்திருப்பது முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக கருதப்படுகிறது. இதன் மூலம் வீதிகளில் கேட்பாரற்று சுற்றித்திரியும் மன நலம் பாதிக்கப்பட்டோர் மற்றும் யாசகம் கேட்போர் வாழ்வில் மறுமலர்ச்சி ஏற்படும் என்பது கவனிக்கத்தக்கது.

எங்கெங்கு அதிகம்

எங்கெங்கு அதிகம்

யாசகம் கேட்போர் மற்றும் மன நலம் பாதித்த நிலையில் வீதிகளில் ஆதரவற்ற நிலையில் தங்குவோர் எண்ணிக்கை சுற்றுலா தலங்களிலும், ஆன்மிகத் தலங்களிலும் அதிகம் இருப்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே அமைச்சர் கீதாஜீவன் வெளியிட்டுள்ள அறிவிப்பை தொடர்ந்து பல தொண்டு நிறுவன அமைப்புகள் மறுவாழ்வு இல்லங்கள் அமைக்க முன் வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+