ஐஏஎஸ் ராதாகிருஷ்ணனின் துறை மாற்றம்.. "அந்த செல்போன்" தான் காரணமா?.. உண்மை என்ன?

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஐஏஎஸ் ராதாகிருஷ்ணன் சுகாதாரத் துறையிலிருந்து மாற்றப்பட்டதற்கு செல்போன்தான் காரணம் என ஒரு தகவல் உலா வருகிறது.

திமுக ஆட்சிக்கு வந்து ஓராண்டில் ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் நடந்துள்ளது. இந்த நிலையில் கடந்த சில தினங்களாகவே ஜெ ராதாகிருஷ்ணனை சுகாதாரத் துறையிலிருந்து வேறு துறைக்கு மாற்றப்படலாம் என்ற பேச்சு அடிபட்டது.

இதை முதல்முதலில் ஒன் இந்தியா தமிழ்தான் பிரேக் செய்தோம். கொரோனா காலத்தில் சிறப்பாக செயல்பட்ட ஜெ ராதாகிருஷ்ணன் எதற்காக மாற்றப்படுகிறார் என்ற கேள்வி எழுந்தது. இத்தனைக்கும் முதல்வர் ஸ்டாலினின் குட் வில் புக்கில் இருந்தவர், பிறகும் ஏன் என்ற கேள்வி எழுந்தது.

தமிழகத்தில் 35 ஐஏஎஸ்

தமிழகத்தில் 35 ஐஏஎஸ்

இந்த நிலையில் நேற்றைய தினம் தமிழகத்தில் 35 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டனர். அதில் ராதாகிருஷ்ணனின் பெயரும் இருந்தது. இவரது மாற்றம் ஏன் என தலைமைச் செயலகத்தில் ஒன் இந்தியா சார்பாக பேசினோம். அப்போது அவர்கள் கூறுகையில், "ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம் குறித்த லிஸ்டானது 3 முறை தயாரிக்கப்பட்டதாம்.

லிஸ்ட்

லிஸ்ட்

அதில் ஒரு முறை வந்த லிஸ்ட்டை தலைமைச் செயலாளர் நிராகரித்துவிட்டார். இன்னொரு லிஸ்டை முதல்வர் ஸ்டாலின் நிராகரித்துவிட்டார். இப்படியாக 3 முறையும பணியிட மாறுதல் லிஸ்ட் கேன்சல் ஆனது. கடைசியாக 4 ஆவது முறை தயாரிக்கப்பட்ட லிஸ்ட்தான் நேற்றைய தினம் வெளியானது.

இடமாற்றம்

இடமாற்றம்

ஜெ ராதாகிருஷ்ணன் இடமாற்ற விவகாரத்தை நாம் நடவடிக்கையாக கருத முடியாது என நேற்றே உங்களிடம் தெரிவித்தோம். இன்றும் அதே பதில்தான். மேலும் கடந்த 2019ஆம் ஆண்டு முதல் 3 ஆண்டுகளாக ஒரே துறையில் இருப்பதால் ராதாகிருஷ்ணனே இந்த மாற்றத்தை எதிர்பார்த்து காத்திருந்ததாகதான் நாங்கள் கேள்விப்பட்ட வரை வந்த தகவல்" என தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.

 ஜெ ராதாகிருஷ்ணன்

ஜெ ராதாகிருஷ்ணன்

இவர்கள் இவ்வாறு சொல்ல, ஆனால் உண்மையில் ஜெ ராதாகிருஷ்ணன் மாற்றப்பட்டதற்கு அமைச்சர் மா சுப்பிரமணியன் பிரஸ் மீட்தான் காரணம் என சொல்லப்படுகிறது. பால் பவுடர் கொள்முதல் செய்யப்பட்டதில் ஊழல் நடைபெற்றதாக பாஜக குற்றம்சாட்டியுள்ளது.

 கொள்முதல்

கொள்முதல்

இன்னும் கொள்முதல் செய்யாத ஒரு பொருளில் எப்படி ஊழல் நடக்கும் என கேட்டு துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அருகே இருந்த சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தனது போனை பார்த்துக் கொண்டிருந்ததாகவும் ஒரு முக்கிய ஊழல் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் பதில் அளிக்கும் போது துறை செயலாளர் எப்படி போனை பார்த்துக் கொண்டு கேசுவலாக இருக்கலாம் என்ற பிரச்சினையால ஜெ ஆர் மாற்றப்பட்டதாகவும் ஒரு தகவல் உலா வருகிறது.

Recommended Video

    37 IAS அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. Tamilnadu Government நடவடிக்கை *Politics
    உறுதிப்படுத்தப்படாத தகவல்

    உறுதிப்படுத்தப்படாத தகவல்

    இது உறுதிப்படுத்தப்படாத ஒரு தகவல் ஆகும். ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு அவரவர் துறை குறித்த அ்ப்டேட்டுகள் மொபைலில் அவர்களுக்கு கீழே உள்ள அதிகாரிகள் அனுப்புவது வழக்கம். அதனால் இந்த குற்றச்சாட்டு தொடர்பான ஏதேனும் தகவல்கள் வந்துள்ளனவா என்று கூட ராதாகிருஷ்ணன் பார்த்திருக்கலாம். இது மா சுவுககும தெரியும். அப்படி இருக்கும் போது இதற்காக அவரை மாற்ற மாசு பரிந்துரைத்திருக்க மாட்டார். ஜெ ஆரே இந்த இடமாற்றத்தை விரும்பியிருக்கலாம் என தகவல்கள் கூறுகின்றன.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+