நீட் விலக்கு பெற முயற்சி! தேர்வு எழுதிய மாணவர்களுக்கு மன உளைச்சல்! அமைச்சர் மா.சு சொன்ன விளக்கம்!
சென்னை : நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் தொடர்ந்து முயற்சி எடுத்து வருகிறார் எனவும், நீட் தேர்வு எழுதிய 1,45,988 மாணவர்களுக்கும் மனநல ஆலோசனை வழங்கப்பட்டது என தமிழக மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கமளித்துள்ளார்.
நேசனல் டெஸ்டிங் ஏஜென்சி எனப்படும் தேசிய தேர்வு முகமை எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட இளங்கலை மருத்துவப்படிப்புகளுக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வை ஜூலை 17ஆம் தேதியான நேற்று நடத்தியது.
நாடு முழுவதும் சுமார் 18 லட்சத்திற்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் தேர்வுக்காக பெறப்பட்ட நிலையில், அதில் 90% மாணவர்கள் மேற்பட்டோர் நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்தனர். அவர்களிலும் நாடு முழுவதும் 497 நகரங்களில் நடைபெறும் இந்த தேர்வை 18,72,339 மாணவர்கள் எழுதினர்.

நீட் தேர்வு
இந்த நிலையில் இன்று பிற்பகல் 12 மணிக்கு நீட் தேர்வு முடிவுகள் வெளியானது. neet.nta.nic.in என்ற இணையதளத்தில் முடிவுகளை தெரிந்து கொள்ள முடியும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த பக்கத்தில் பிறந்த தேதி மற்றும் பதிவு எண் ஆகியவற்றை குறிப்பிட்டு தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ள முடியும்.

மா.சுப்பிரமணியன்
இந்நிலையில் நீட் தேர்வு எழுதிய 1,45,988 மாணவர்களுக்கும் மனநல ஆலோசனை வழங்கப்பட்டது என தமிழக மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கமளித்துள்ளார். இன்று சைதை தொகுதிக்குட்பட்ட சைதாப்பேட்டை காய்கறி அங்காடி மேம்படுத்துவது மற்றும் மகப்பேறு மருத்துவமனை மேம்படுத்துவதற்கான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது.

நீட் விலக்கு
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டபின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் தொடர்ந்து முயற்சி எடுத்து வருகிறார். தமிழக அரசு இதற்காக முழுவதுமாக போராடும். நிச்சயம் மாணவர்கள் எதிர்பார்க்கும் நல்ல முடிவு கிடைக்கும். நீட் தேர்வு நிறைவடைந்துள்ள நிலையில், இன்று தேர்வு முடிவுகள் வெளியாகி இருக்கிறது.

மன நல ஆலோசனை
நீட் தேர்வு எழுதிய 1,45,988 மாணவர்களுக்கும் மனநல ஆலோசனை வழங்கப்பட்டது. அதில் 564 மாணவர்கள் மன உளைச்சலில் இருப்பது கண்டறியப்பட்டு தொடர் ஆலோசனை வழங்கப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் தேர்வு முடிவுகளுக்குப் பிறகு திட்டமிட்டபடி கலந்தாய்வு நடைபெறும்" எனவும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.
-
சென்னை மடிப்பாக்கத்தில் பயங்கர தீ விபத்து.. பகலும் இரவானது.. கரும்புகையால் திணறிய மக்கள் - வீடியோ! -
பிளஸ் 2 முடிச்சிருக்கீங்களா! Apprentice training -ல் சேருங்க! மாதம் ரூ 18 ஆயிரம் ஊக்கத்தொகை பெறுங்க! -
சென்னையில் நாளை பல்வேறு இடங்களில் மின்தடை.. பல்லாவரம் டூ ராமாபுரம்.. முழு விவரம் -
நீல நிறமாக மாறிய.. 3 மாத பச்சிளம் குழந்தையின் உடல்! உயிரை காப்பாற்ற உடனே உதவுங்கள்! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
பயணிகள் கவனத்திற்கு.. சென்னை கோட்டத்தில் பராமரிப்பு பணி.. இன்றுமுதல் வைகை உள்ளிட்ட 7 ரயில்கள் தாமதம் -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு -
சென்னை கீழ்ப்பாக்கம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி.. அலாரம் அடித்ததும் மர்ம நபர் தப்பி ஓட்டம்! -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்?












Click it and Unblock the Notifications