Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழாவில் எம்ஜிஆர், ஜெ. படங்கள்.. முதல்வரின் பெருந்தன்மை- அமைச்சர் மெய்யநாதன்

Subscribe to Oneindia Tamil

சென்னை : 44வது செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழாவில் எம்ஜிஆர், ஜெ. படங்கள் இருந்தது முதல்வரின் பெருந்தன்மை தான் காரணம் எனவும், 44 ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டிக்காக சென்னையில் உள்ள நேப்பியர் பாலத்தை செஸ் போர்டு போல மாற்றி மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என்பது முதல்வரின் தனிப்பட்ட எண்ணத்தில் தோன்றிய திட்டம் என தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் கூறியுள்ளார்.

இது தொடர்பாக ஒன் இந்தியா தமிழிடம் பிரத்யேகமாக பேசிய அவர், 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகளுக்காக மேற்கொள்ளப்பட்ட திட்டங்கள், சந்தித்த சவால்கள், விமர்சனங்கள், பாராட்டுகள்,சர்வதேச அங்கீகாரங்கள் குறித்து விரிவாக பேசினார்.

இது குறித்து பேசிய அவர், "செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கு ஏற்பாடுகளை மேற்கொள்வதற்காக முதல்வர் ஸ்டாலின், நான், ஆ,ராசா சேப்பாக்கம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் அடங்கிய குழுவை அமைத்தார்.

சிறப்பான ஏற்பாடுகள்

சிறப்பான ஏற்பாடுகள்

இதற்கான ஏற்பாடுகளை மிகத் தீவிரமாக செய்து வந்தோம் குறிப்பாக சர்வதேச நாடுகளில் இருந்து வரும் செஸ் வீரர்களுக்கு உரிய மரியாதையையும் உபசரிப்பையும் வழங்க வேண்டும் என முதல்வர் நேரடியாகவே உத்தரவிட்டதோடு அதில் எந்த குறைபாடும் வரக்கூடாது என பார்த்துக் கொண்டார். அதன் அடிப்படையில் ஒரே நாளில் சுமார் 2500 தங்கும் அறைகள் ஏற்பாடு செய்யப்பட்டது. அதே நேரத்தில் ரேங்க் அடிப்படையில் அதாவது சிறந்த வீரர் அறிமுகம் இல்லாத வீரர் என்ற பாகுபாடு இல்லாமல் அனைவருக்கும் ஒரே மாதிரி நட்சத்திர விடுதிகளில் அறை ஒதுக்கப்பட்டது.

 விளையாட்டிலும் சமூக நீதி

விளையாட்டிலும் சமூக நீதி

அந்த வகையில் சமூக நீதியை காக்கும் கட்சியான திமுக, தமிழக அரசு சார்பில் நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் போட்டியிலும் அனைத்து வீரர்களுக்கும் ஒரே மாதிரியான உபசரிப்பு தங்கும் அறைகள் விடுதிகள் உணவு என ஒரே மாதிரி தான் ஏற்பாடு செய்திருந்தது. இதற்கு முன்னர் தமிழகத்தில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளில் சிறந்த வீரர்களுக்கு ஐந்து நட்சத்திர விடுதிகளிலும் அதற்கு அடுத்த நிலைகளில் உள்ள வீரர்களுக்கு நான்கு நட்சத்திரம் மற்றும் 3 நட்சத்திர வீடுகளில் அறை ஒதுக்கப்படும். ஆனால் தமிழக அரசு அப்படி செய்யவில்லை. செஸ் ஒலிம்பியாட் போட்டியை பொருத்தவரை அனைவருக்கும் ஒரே மாதிரியான கவனிப்பு தான் இருந்தது. இதன் மூலம் விளையாட்டிலும் சமூக நீதி பின்பற்றப்பட்டது.

 முதல்வரின் பெருந்தன்மை

முதல்வரின் பெருந்தன்மை

செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழாவில் எம்ஜிஆர், ஜெ. படங்கள் இருந்தது முதல்வரின் பெருந்தன்மை தான் காரணம் எனவும், தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் சென்னை மாநகராட்சியின் மேயராக இருந்தபோது மிகச்சிறந்த நிர்வாகி என்ற அடையாளத்தை பெற்றார். 2006 - 2011 திமுக ஆட்சி காலத்தில் உள்ளாட்சித் துறை அமைச்சராகவும் துணை முதலமைச்சர் ஆகவும் இருந்தபோது நிர்வாகத்திறன் படைத்த ஒரு மிகச்சிறந்த நிர்வாகி என்ற பட்டத்தை பெற்றார். பத்தாண்டு காலம் திமுக எதிர்க்கட்சியாக இருந்தபோது தமிழ்நாடு முழுவதும் அவர் கால் படாத இடங்களை கிடையாது. அவர் சந்திக்காத பிரச்சனை உள்ள மக்களே கிடையாது.

நம்பர் 1 முதல்வர்

நம்பர் 1 முதல்வர்

எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது மக்களின் பிரச்சினைகளை அறிந்திருந்தால் முதல்வர் ஸ்டாலின் தான் முதல்வராக பொறுப்பேற்கும் போது ஒரு நேர்மையான ஆட்சியை தருவதோடு ஏதாவது சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் படைத்தவர் நம் முதலமைச்சர். அந்த அடிப்படையில் கடந்த ஓராண்டு காலத்தில் இந்தியாவில் மிகச்சிறந்த முதலமைச்சர், நம்பர் ஒன் முதலமைச்சர் இடத்தைப் பெற்று இருக்கிறார். நான் முடிக்கின்ற பணிகள் 100% முழுமையாக இருக்க வேண்டும் என நினைப்பதால் தான் இவ்வளவு சிறப்பாக அவரால் பணியாற்ற முடிகிறது. எதை எடுத்தாலும் அதை வெற்றிகரமாக முடிக்கக்கூடிய ஆற்றல் நம் முதலமைச்சரிடம் இருக்கிறது.

நேப்பியர் பாலம்

நேப்பியர் பாலம்

44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிக்காக சென்னையில் உள்ள நேப்பியர் பாலத்தை செஸ் போர்டு போல மாற்றி மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என திட்டமிடப்பட்டது. இந்தத் திட்டமே முதல்வர் ஸ்டாலின் தனிப்பட்ட எண்ணத்தில் தோன்றிய திட்டம் தான். செஸ் ஒலிம்பியாட் போட்டியை அரசியல் கலப்பு இல்லாமல் மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என்பதுதான் முதலமைச்சரின் எண்ணமாக இருந்தது. அதன் அடிப்படையில் தான் நேப்பியர் பாலம் செஸ் போர்டு போல வடிவமைக்கப்பட்டது.

செஸ் தம்பிக்கு காரணம்

செஸ் தம்பிக்கு காரணம்

எந்த ஒரு சர்வதேச நிகழ்வுகள் நிகழ்ந்தாலும் எதிர்காலத்தில் அதனை நினைவுபடுத்தும் வகையில் ஒரு அடையாளம் வேண்டும் என்பதற்காகவே தம்பி அடையாளச் சின்னம் உருவாக்கப்பட்டது. தற்போதைய சூழலில் போட்டி நிறைந்த இந்த உலகத்தில் உலகம் முழுவதும் வாழும் மக்களுக்கிடையே போட்டி இருக்கிறது. அந்த போட்டி இருக்கக் கூடாது நாம் அனைவரும் சகோதர சகோதரிகள் என்பதை உணர்த்தும் வகையில் தான் செஸ் அடையாளச் சின்னத்துக்கு தம்பி என பெயர் வைக்கப்பட்டது. இதனை கூறிவரும் முதல்வர் தான்.

சர்வதேச போட்டிகள்

சர்வதேச போட்டிகள்

செஸ் ஒலிம்பியாட் போட்டியை நடத்தியதன் மூலம் தமிழகம் உலக அளவில் கவனம் பெற்று இருக்கிறது. அதன் அடிப்படையில் சர்வதேச அளவிலான போட்டிகளை தமிழகத்தில் நடத்துவதற்கு தமிழக முதலமைச்சர் திட்டமிட்டு இருக்கிறார். அந்த வகையில் இந்த மாதம் உலக மகளிர் டென்னிஸ் போட்டி நடைபெற இருக்கிறது அதற்கான பணிகள் தொடங்க இருக்கிறது. இதற்கான ஆய்வு பணிகளையும் மேற்கொள்ள இருக்கிறேன். அடுத்ததாக சென்னையில் பீச் வாலிபால் உள்ளிட்ட சர்வதேச போட்டிகளை நடத்துவதற்கான ஏற்பாடுகளும் தயாராக இருக்கிறது இதற்காக ஒன்றிய அரசின் அனுமதியை கேட்டு தமிழக முதல்வர் ஸ்டாலின் கேட்டுள்ளார்.

பீச் வாலிபால்

பீச் வாலிபால்

இதே போல பீச் வாலிபால் , சர்வதேச டென்னிஸ் போட்டி, ப்ரோ கபடி உள்ளிட்ட போட்டிகளையும் தமிழகத்தில் நடத்துவதற்கு முதல்வர் ஸ்டாலின் திட்டமிட்டுள்ளார். சர்வதேச அளவிலான போட்டிகளை தமிழகத்தில் நடத்துவதற்கு எந்த விதமான சாத்திய கூறுகள் இருக்கிறதோ அதையெல்லாம் செய்து முடிக்க முதல்வர் ஸ்டாலின் தயாராக இருக்கிறார். முதலில் போட்டிகளை நடத்த வேண்டும் என்றால் நாம் தான் போய் கேட்க வேண்டும். ஆனால் தற்போது செஸ் ஒலிம்பியாட் போட்டியை வெற்றிகரமாக நடத்தியதற்கு பிறகு உலக நாடுகளில் இருக்கும் சர்வதேச அமைப்புகள் தற்போது தானாகவே முதல்வர் ஸ்டாலின் இடம் கேட்டு வருகின்றனர்.

மாணவர்களுக்கு பயிற்சி

மாணவர்களுக்கு பயிற்சி

தமிழக முதலமைச்சரைப் பொறுத்தவரை அவரது முதல் கவனம் தடகளப் போட்டிகளில் இருக்கிறது. மாணவ மாணவிகளுக்கு உரிய பயிற்சிகள் கொடுத்து அவர்களை சர்வதேச போட்டிகளில் பங்கேற்க வைக்க வேண்டும் என்பதுதான் திட்டம். போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு உடனடியாக பரிசுத்தொகை வழங்குவது என ஆதரவளித்து வருகிறார். மேலும் வீரர்களை குடும்ப சூழ்நிலையை பொறுத்து அவர்களுக்கு அரசு வேலை வழங்குவது என வாழ்க்கை தரத்தை உயர்த்தும் நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் லட்சக்கணக்கான விளையாட்டு வீரர்கள் இருக்கிறார்கள் அவர்களுக்கான விளையாட்டு களங்களும் இருக்கிறது. அவர்களை இணைப்பதற்கு விளையாட்டு பயிற்சியாளர்கள் அவசியம் என்பதை உணர்ந்து பயிற்சியாளர்களை நியமிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

 ஜல்லிகட்டு மைதானம்

ஜல்லிகட்டு மைதானம்

முதல்வர் ஸ்டாலின் விளையாட்டுத்துறைக்கு ஆட்சி தொடங்கியதில் இருந்துதே முக்கியத்துவம் கொடுத்தார். 234 தொகுதிகளிலும் விளையாட்டு மைதானங்கள் அமைப்பதற்காக தலா மூன்று கோடி ரூபாய், சென்னையிலே ஒரு மிகப்பெரிய விளையாட்டு நகரம் அமைப்பது, ஒலிம்பிக் மையங்கள் அமைப்பது, மதுரையில் ஜல்லிக்கட்டை காண்பதற்கு என்றே ஒரு உலக தரத்தில் ஒரு பிரம்மாண்ட விளையாட்டு மைதானம் அமைய இருக்கிறது. இன்னும் நூற்றாண்டுகளுக்கு நமது பெருமையை கொண்டு செல்லும் வகையில் இந்த திட்டம் மேற்கொள்ளப்பட இருக்கிறது" என கூறினார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+