ஆவின் இனிப்புகளுக்கு போட்டி ஜாஸ்தியாயிடுச்சு! அதான் இப்படியெல்லாம் பண்றாங்க! அமைச்சர் நாசர் வேதனை!
சென்னை: ஆவின் இனிப்புகளுக்கு போட்டி அதிகமாகிவிட்டதாகவும் அதனால் தான் பொய்யான தகவல்களை தினமும் சிலர் பரப்பி வருகிறார்கள் எனவும் அமைச்சர் நாசர் தெரிவித்துள்ளார்.
ஆவின் இனிப்புகளை பொறுத்தவரை ஒன்றுக்கு பலமுறை சோதனை செய்த பிறகே விற்பனைக்கு அனுப்புவதாகவும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.
பிரபல இனிப்புக் கடைகளில் அதிக விலை என்பதால் தீபாவளி பண்டிகைக்கு மக்கள் ஆவின் இனிப்புகளை அதிகளவில் ஆர்டர் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

அமைச்சர் நாசர்
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை நந்தனத்தில் உள்ள ஆவின் அலுவலகத்தில் ஊழியர்களுக்கு பணப்பயன்கள் வழங்கினார் பால்வளத்துறை அமைச்சர் நாசர். அதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், ஆவின் இனிப்பு விற்பனை தீபாவளியை ஒட்டி இரண்டு மடங்கு அதிகரித்துள்ளதாகவும் இதுவரை ரூ.110 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். இதன் காரணமாக ஆவின் இனிப்புகளுக்கு போட்டியும் அதிகமாகிவிட்ட தகவலை வெளியிட்டார்.

போட்டி அதிகம்
போட்டியாளர்கள் ஆவின் இனிப்புகள் பற்றி தவறான தகவல்களை பரப்பி வருவதகவும் வேண்டுமென்ற தவறை கண்டுபிடிக்க வேண்டும் என்பதற்காக உண்மைக்கு புறம்பான தகவல்களை கசியவிட்டு வருவதாகவும் வேதனைத் தெரிவித்தார் அமைச்சர் நாசர். இது போல் செய்பவர்கள் மீது சட்டம் ஒழுங்கு நடவடிக்கை எடுப்பது பற்றி ஆலோசித்து வருவதாகவும் கூறியுள்ளார். இதேபோல் தவறான தகவல் கொடுத்தோர் மீது வழக்குப்பதிவு செய்யவும் நடவடிக்கை எடுத்து வருவதாக கூறினார்.

பால் கொள்முதல்
பால் கொள்முதல் விலையை உயர்த்துவது பற்றி இன்னும் ஒரு வாரத்திற்குள் முதலமைச்சர் ஸ்டாலின் முடிவெடுத்து அறிவிப்பார் என்று கூறிய அமைச்சர் நாசர், ஆவின் இனிப்புகளின் விற்பனை விகிதம் இரண்டு மடங்கு அதிகரித்துள்ளதால் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களிடம் தனது மகிழ்ச்சியை பரிமாறிக் கொண்டார்.

குவியும் ஆர்டர்
பிரபல இனிப்புக் கடைகளில் அதிக விலை என்பதால் தீபாவளி பண்டிகைக்கு மக்கள் ஆவின் இனிப்புகளை அதிகளவில் ஆர்டர் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது. எந்த ஆண்டும் இல்லாத வகையில் இந்தாண்டு நட்ஸ் ஹல்வா உள்ளிட்ட பல புதிய வகை இனிப்புகளை ஆவின் அறிமுகப்படுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது. தீபாவளிக்கு இன்னும் 2 நாட்கள் இருப்பதால் ஆவின் இனிப்பு விற்பனை விகிதம் இன்னும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
10 வருஷமா வேதனையில இருக்கேன்... எங்களை விஷம் வைத்து கொன்றுடுங்க... நடிகர் பாலா உருக்கம்!












Click it and Unblock the Notifications