இனி தமிழர்களுக்குதான் 100% அரசுப்பணி! அரசாணைக்கு செயல் வடிவம்.. பிடிஆர் கொண்டு வந்த அதிரடி மசோதா
சென்னை: தமிழ்நாடு அரசு பணிகளுக்கு தமிழ் மொழி கட்டாயம் என்று ஏற்கெனவே மாநில அரசு அரசாணை மூலம் தெரிவித்திருந்த நிலையில், அந்த அரசாணைக்கு செயல் வடிவம் கொடுக்கும் வகையில் புதிய சட்ட மசோதாவை பேரவையில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று தாக்கல் செய்திருக்கிறார்.

தமிழ்நாட்டின் வளர்ச்சி ஒவ்வொரு ஆண்டும் உச்சத்தை நோக்கி சென்றுக்கொண்டிருக்கையில் இந்த வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றும் அரசு துறைகளில் வெளி மாநிலத்தவர்கள்தான் அதிக அளவில் தேர்வு செய்யப்படுகிறார்கள் என்று தொடர் புகார்கள் எழுந்தன. தமிழ்நாட்டின் வேலைகள் அனைத்தும் தமிழர்களுக்கே கொடுக்கப்பட வேண்டும் என்று அரசியல் கட்சிகள் பல வலியுறுத்தி இருந்தன. இதனையடுத்து கடந்த 2021ம் ஆண்டு டிசம்பர் மாதம் இது தொடர்பான அரசாணை வெளியிடப்பட்டிருந்தது.
இதன்படி டிஎன்பிஎஸ்சி மற்றும் தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் தேர்வுகள் மூலம் அரசு வேலை பெறும் நபர்கள் தமிழ் மொழியில் போதுமான அளவு அறிவை கொண்டிருக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. அதாவது, தமிழ்நாட்டின் பணிகள் தமிழர்களுக்கே என்பதை உறுதி செய்யும் விதமாக இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. தற்போது இதற்கு செயல் வடிவம் கொடுக்கும் வகையில் புதிய சட்ட மசோதா அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
-
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்! -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
தமிழ்நாடு முழுவதும்.. மூடப்படும் பெட்ரோல் பங்குகள்! சட்டம் ஒழுங்கு பிரச்சனையால்.. விஜய்க்கு சிக்கல்! -
சட்டமன்றத்தில் டீலிங்.. மாண்பை உடைத்த விஜய்! கொந்தளிக்கும் எதிர்க்கட்சிகள்! -
தமிழ்நாட்டில் டெண்டர் மற்றும் கட்டிட அனுமதிகளில் ரூல்ஸ் அடியோடு மாறுகிறது.. அரசு அதிரடி உத்தரவு -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
Rich CM Vijay: நாட்டின் பணக்கார முதல்வர்கள் பட்டியல்! தமிழக முதல்வர் விஜய்க்கு எத்தனையாவது இடம்? -
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு












Click it and Unblock the Notifications