சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

லிப்ட் தரீங்களா?.. பைக்கில் லிப்ட் கேட்டு கொரோனா தடுப்பூசி முகாமை ஆய்வு செய்த அமைச்சர் மா.சு.!

Google Oneindia Tamil News

சென்னை: குறுகிய பாதையில் அமைச்சர்களின் வாகனம் வர முடியாத நிலை ஏற்பட்டதால் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாமை அமைச்சர்கள் மோட்டார் சைக்கிளில் சென்று ஆய்வு செய்தனர்.

தமிழகத்தில் வாரந்தோறும் மெகா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. இன்றைய தினம் 8ஆவது மெகா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.

போலி பணி நியமன ஆணை.. 7 வருடங்களாக பலே மோசடி.. சென்னை தலைமைச் செயலகம் அருகே சிக்கிய நபர் போலி பணி நியமன ஆணை.. 7 வருடங்களாக பலே மோசடி.. சென்னை தலைமைச் செயலகம் அருகே சிக்கிய நபர்

இந்த முகாமை அந்த மாவட்ட பொறுப்பாளர்களாக உள்ள அமைச்சர்கள் , எம்எல்ஏக்கள் பார்வையிடுகிறார்கள். முதல்வரும் இன்றைய தினம் கொளத்தூர் தொகுதியில் ஆய்வு மேற்கொண்டார்.

பூந்தமல்லி ஒன்றியம்

பூந்தமல்லி ஒன்றியம்

அந்த வகையில் பூந்தமல்லி ஒன்றியத்திற்குட்பட்ட காட்டுப்பாக்கம் ஊராட்சியில் கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இதில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் மற்றும் பால்வளத்துறை அமைச்சர் நாசர் ஆகியோர் கலந்து கொண்டு தடுப்பூசி முகாமை ஆய்வு செய்தனர்.

காட்டுப்பாக்கம்

காட்டுப்பாக்கம்

மேலும் அந்தப் பகுதியில் மக்களை தேடி மருத்துவ முகாமை தொடங்கி வைத்துவிட்டு பின்னர் காட்டுப்பாக்கத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு செய்ய இருவரும் சென்றபோது குறுகிய பாதையில் அமைச்சர்களின் கார்கள் வர தாமதமானது. இதனால் இருவரும் சிறிது தூரம் நடந்து சென்றனர்.

மோட்டார் சைக்கிள் பயணம்

மோட்டார் சைக்கிள் பயணம்

பின்னர் அந்த வழியாக சென்ற மோட்டார் சைக்கிள்களை மடக்கி மோட்டார் சைக்கிளிலேயே அமைச்சர்கள் இருவரும் பயணம் செய்து முகாம்களை ஆய்வு செய்தனர். பின்னர் அமைச்சர் மா சுப்பிரமணியன் அளித்த பேட்டியில் கூறியதாவது : தமிழகம் முழுவதும் 50 ஆயிரம் இடங்களில் தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது.

இரண்டாவது தவணை

இரண்டாவது தவணை

75 லட்சத்திற்கு மேற்பட்டவர்களுக்கு இரண்டாவது தவணை தடுப்பூசி போட வேண்டிய நிலையில் 8-ஆவது தடுப்பூசி முகாம் இன்று தொடங்கப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தை பொறுத்தவரை ஒரு லட்சத்து 98 ஆயிரத்து 886 பேருக்கு இரண்டாவது தடுப்பூசி செலுத்த வேண்டி உள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் 950 முகாம்கள் மூலம் ஒரு லட்சம் பேருக்கு தடுப்பது செலுத்துவது என்ற இலக்கோடு தடுப்பூசி முகாமை தொடங்கி இருக்கிறார்கள்.

இரண்டாவது தவணை

இரண்டாவது தவணை

திருவள்ளூர் மாவட்டத்தில் முதல் தவணை போட்டு கொண்டவர்கள் 75 சதவீதமாக உள்ளது. இரண்டாவது தவணை முப்பத்தி மூன்று சதவீதமாக உள்ளது. தமிழ்நாடு மருத்துவத் துறை வரலாற்றில் 6 ஆயிரம் இடங்களில் மருத்துவ முகாம் நடத்தப்பட்டது பெரிய சாதனை. தொலைநோக்கு திட்டம் எது என்பதை முருகன் அறிவித்தால் நன்றாக இருக்கும். வெள்ள பாதிப்பு காண கணக்கெடுப்பு நடந்து வருகிறது என தெரிவித்தார்.

English summary
Ministers Ma Subramanian and S.M.Nasar ride in two wheeler to review corona vaccine drive.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X