எடப்பாடி பழனிசாமிக்கு ‘செக் மேட்’.. ஒரே லெட்டரில் 3 கேட் போட்ட ஸ்டாலின்.. என்னதான் செய்வார் பாவம்!
சென்னை : தமிழக முதல்வர் ஸ்டாலின், அனைத்து எம்.எல்.ஏக்களுக்கும் எழுதியுள்ள கடிதம், அதிமுகவுக்கு வைத்திருக்கும் முக்கியமான 'செக்' என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.
தொகுதியில் நீண்ட நாட்களாக தீர்க்கப்படாமல் உள்ள, 10 முக்கியமான கோரிக்கைகள் அடங்கிய பட்டியலை 15 நாட்களுக்குள் மாவட்ட ஆட்சியர்களுக்கு அனுப்பி வையுங்கள் என அனைத்து எம்.எல்.ஏக்களுக்கும் முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
எடப்பாடி பழனிசாமி உட்பட அனைத்து எதிர்க்கட்சி எம்.எல்.ஏக்களுக்கும் முதல்வர் ஸ்டாலின் கடிதம் அனுப்பியுள்ளது ஒரு ராஜதந்திர நடவடிக்கை என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.
கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சியில் இருந்தும், அடிப்படை வசதிகள் பல நிறைவேற்றப்படாமல் இருந்தது எதிர்க்கட்சி எம்.எல்.ஏக்களின் கோரிக்கை மூலம் அம்பலமாகிவிடும் என்பதுதான் ஸ்டாலின் போட்டிருக்கும் கணக்கு என்கிறார்கள்.

எம்.எல்.ஏக்களுக்கு ஸ்டாலின் கடிதம்
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் நேற்று ஒரு கடிதம் எழுதினார். தங்கள் தொகுதிகளில் தீர்க்கப்படாமல் உள்ள 10 முக்கியமான கோரிக்கைகளின் பட்டியலை மாவட்ட ஆட்சியர்களுக்கு அனுப்ப வேண்டும் என்று ஸ்டாலின் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். எம்.எல்.ஏக்கள் அளிக்கும் பட்டியலில் இருக்கும் மிக முக்கியமான திட்டங்களை அடையாளம் கண்டு, 'உங்கள் தொகுதியில் முதலமைச்சர்' திட்டத்தின் மூலம் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.

எதிர்க்கட்சி எம்.எல்.ஏக்களுக்கும்
குறிப்பாக, எதிர்க்கட்சிகளின் எம்.எல்.ஏக்களுக்கும் இந்தக் கடிதத்தை அனுப்பியுள்ளார் முதல்வர் ஸ்டாலின். எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம், பாஜக சட்டமன்றக் குழு தலைவர் நயினார் நாகேந்திரன் ஆகியோருக்கும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. ஸ்டாலினின் கடிதத்தை ஏற்று எதிர்க்கட்சி எம்.எல்.ஏக்கள் கோரிக்கைகள் அடங்கிய பட்டியலை அளிப்பார்களா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

குற்றச்சாட்டைக் களைய
பொதுவாக, எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும், எதிர்க்கட்சி எம்.எல்.ஏக்கள் இருக்கும் தொகுதிகள் புறக்கணிக்கப்படுவது வாடிக்கை. இந்த ஆட்சியிலும் அதிமுக எம்.எல்.ஏக்கள் அந்தக் குற்றச்சாட்டை முன்வைத்து வருகின்றனர். அந்த குற்றச்சாட்டை களையும் விதமாகவே, எந்தப் பாகுபாடும் இன்றி அனைத்து தொகுதிகளுக்கும் திட்டங்களை செயல்படுத்துகிறோம் எனக் காட்டும் வகையில் முதல்வர் ஸ்டாலின் இதனைக் கையில் எடுத்துள்ளார் என்று கூறப்படுகிறது.

அதிமுகவுக்கு செக்
இதில் இன்னொரு முக்கியமான விஷயமும் உள்ளது. அதிமுக எம்.எல்.ஏக்கள், அடிப்படை வசதி திட்டங்களுக்கான கோரிக்கைகளை வலியுறுத்தும் பட்சத்தில், கடந்த 10 ஆண்டு கால அதிமுக ஆட்சியில் மக்கள் நலனுக்கான திட்டங்களை நிறைவேற்றவில்லை என்பதை ஒப்புக்கொள்வது போலாகிவிடும். இதனால், அவர்கள் தொகுதி மக்களின் கோரிக்கைகளை எடுத்துச் சொல்லவும் முடியாமல், முந்தைய ஆட்சியின் குறைகளை ஒப்புக்கொள்ளவும் முடியாமல் இருதலைக் கொள்ளி எறும்பாகத் தவிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

சிக்கல் தான்
அப்படி, ஸ்டாலினின் வேண்டுகோளை நிராகரித்து 10 கோரிக்கைகளை முன்வைக்காமல் இருந்தால், திமுக அரசு எதிர்க்கட்சி எம்.எல்.ஏக்களின் தொகுதிகளையும் மேம்படுத்த தயாராக இருந்தும் எம்.எல்.ஏக்கள் அரசியல் காழ்ப்புணர்ச்சியால் அதனைத் தவிர்த்து விட்டனர் என்ற குற்றச்சாட்டு கிளம்பும். அதிமுக எம்.எல்.ஏக்கள் என்ன முடிவு எடுத்தாலும் அது அதிமுகவுக்கு பாதகமாகத்தான் முடியும் என்கிற வகையில் செக் வைத்துள்ளார் ஸ்டாலின் என்கிறார்கள்.

இன்னொரு பாயிண்ட்
முதல்வர் ஸ்டாலின் கடிதத்தை ஏற்று தொகுதிக்கான கோரிக்கைகளை ஈபிஎஸ் ஆதரவாளர்களான அதிமுக எம்.எல்.ஏக்கள் முதல்வரிடம் வைத்தால், அதனை ஓபிஎஸ் தரப்பு விமர்சிக்கும் சூழலும் ஏற்படலாம். ஏனெனில், தொகுதி மேம்பாட்டுக்காக முதல்வரை சந்தித்ததாக தெரிவித்த ஓ.பி.ரவீந்திரநாத்தை ஈபிஎஸ் தரப்பினர் கடுமையாக விமர்சித்தனர். இப்போது, ஸ்டாலின் கடிதத்தை ஏற்று, கோரிக்கை வைத்தால் ஓபிஎஸ் தரப்பு ஈபிஎஸ்ஸை நோக்கி கேள்வி எழுப்பக்கூடும்.

இருதலைக்கொள்ளி எறும்பாக
முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சி எம்.எல்.ஏக்களுக்கும் சேர்த்து கடிதம் எழுதியுள்ளது பொதுமக்கள் மத்தியில், அவருக்கு அரசியல் பாரபட்சம் காட்டாமல் செயல்படுவதாக மைலேஜ் ஏற்றியுள்ள நிலையில், அந்த கடிதம் மீது எந்த முடிவு எடுத்தாலும், எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு மைனஸ் ஆகும் என்பதால், இதில் ஈபிஎஸ் என்ன முடிவு எடுக்கப்போகிறார் என்பது மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
சிவக்குமார் விஜய்யை பாராட்டி பேச பேச சத்யராஜ் கொடுத்த ரியாக்ஷன் பாருங்க.. அமைதியாக கவனிக்கும் திமுக -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ் -
பரந்தூர்-க்கு சொன்ன நோ.. சென்னை மக்களுக்கு அடுத்த அதிர்ச்சி! சீட்டுக்கட்டுப்போல் சரியும் மெகா திட்டங்கள்! -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா?












Click it and Unblock the Notifications