• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

'ஸ்வீப்' செய்கிறது திமுக.. '31' உறுதி.. 'யூ டர்ன்' அடிக்கிறதா '50' வருட வரலாறு?

|

சென்னை: டெல்டா பகுதியை 'வழக்கத்திற்கு மாறாக திமுக 'ஸ்வீப்' செய்ய வாய்ப்புள்ளதாக அனுப்பப்பட்டுள்ள 'லேட்டஸ்ட் ரிப்போர்ட்' அதிமுக தலைமையை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

'டெல்டா' பகுதி என்பது அதிமுகவின் வலது கை போன்றது. தேர்தல் நேரங்களில்.. அது மக்களவை தேர்தலாக இருந்தாலும் சரி, சட்டசபை தேர்தலாக இருந்தாலும் சரி.. அதிமுக நம்பி களமிறங்கும் பகுதி இது.

கிட்டத்தட்ட 70 விழுக்காடு, சமூகம் சார்ந்த வாக்குகள் நிறைந்த டெல்டா பகுதியில் இப்போது கள நிலவரம் அதிமுகவுக்கு எதிராக இருப்பதாக தெரிகிறது.

 எம்.ஜி.ஆர், ஜெயலலிதா

எம்.ஜி.ஆர், ஜெயலலிதா

திமுகவில் இருந்து பிரிந்து அதிமுகவை எம்.ஜி.ஆர் தொடங்கிய போது, 'குழ செல்லையா' உள்ளிட்ட பல தளபதிகளை அவருக்கு பக்கபலமாக அனுப்பிய பகுதி டெல்டா. அதன் பிறகு கட்சியை வழிநடத்திய ஜெயலலிதாவுக்கும் இதே ரெஸ்பான்ஸ் தான். எம்.ஜி.ஆர், ஜெ., ஆகிய இருவருக்கும் சமூகம் தாண்டிய சப்போர்ட் இங்கு இருந்தது. 'ஃபேஸ் வேல்யூ' இருந்தது. பல தொகுதிகளில், சமூகம் சார்ந்த வேட்பாளர்களை திமுக நிறுத்தினாலும், எம்.ஜி.ஆர், ஜெ., முகத்துக்காக அதிமுக வேட்பாளர்கள் வென்ற வரலாறு உள்ளது.

 முதல்வர் காட்டும் அக்கறை

முதல்வர் காட்டும் அக்கறை

ஆனால், இன்று நிலைமை அப்படியே ரிவர்ஸ் ஆவதாக திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளின் தலைமைக்கும் ரிப்போர்ட் சென்றுள்ளதாம். இதற்கு மிக முக்கிய காரணம் முதல்வர் பழனிசாமி என்ற தகவலும் இருபக்கமும் கொடுக்கப்பட்டுள்ளதாம். சசிகலா 'எக்ஸிட்', வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு, கொங்கு வேளாளர் மக்களின் முன்னேற்றம், முக்குலத்தோர் சமூக புறக்கணிப்பு, மற்ற சமூகங்கள் மீது முதல்வர் காட்டும் அக்கறை போன்ற காரணங்கள் அடுத்தடுத்து பட்டியலிடப்பட்டுள்ளனவாம்.

 திமுகவுக்கு 31

திமுகவுக்கு 31

திமுகவுக்கும் கணிசமாக இங்கு செல்வாக்கு இருந்தாலும், அதிமுக கையே எப்போதும் ஓங்கியிருக்கும் என்பதே நிதர்சனம். எனினும், எதிர்வரும் தேர்தலில் காவிரி டெல்டா மாவட்டங்களில் திமுக கூட்டணிக்கு 31 இடங்கள் வரை கிடைக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. அதிமுக 9 இடங்களையும், அமமுக 1 இடத்திலும் வெல்லும் என என்பதே கள நிலவரம் என்ற ரிப்போர்ட் இரு தலைமைக்கும் அனுப்பப்பட்டுள்ளதாம்.

 எதிர்ப்பு அலை

எதிர்ப்பு அலை

அதேசமயம், சசிகலா அரசியலில் இருந்து ஒதுங்காமல் இருந்திருந்தால், அதிமுக இந்த அளவுக்கு பின்னடைவை சந்திக்கும் சூழல் ஏற்பட்டிருக்காது என்பது அத்தனை உண்மை. இன்னும் சொல்லப்போனால், அதிமுக - சசிகலா இணைப்பு முயற்சி எடுத்த பாஜகவின் வியூகம் வெற்றிப் பெற்றிருந்தால், திமுக டெல்டாவில் பின்னடைவை சந்தித்திருக்கும். இதை திமுகவினரே ஒப்புக் கொள்வது தான் இங்கு முக்கியம். ரஜினி களத்தில் இல்லை, சசிகலா களத்தில் இல்லை, டிடிவி பலமாக இல்லை, முதல்வர் பழனிசாமி மீது வீசும் எதிர்ப்பு அலை போன்றவை டெல்டாவை அப்படியே திமுக கைக்கு தாரை வார்க்கும் சூழல் ஏற்பட்டிருக்கிறது.

 'ஜால்ரா' அடிக்க தெரியாது

'ஜால்ரா' அடிக்க தெரியாது

இதுகுறித்து பெயர் வெளியிட விரும்பாத அமமுக நிர்வாகி ஒருவரிடம் நாம் பேசினோம். டெல்டாவில் வாய்ஸ் உள்ள இந்த நிர்வாகி அதிமுகவில் இருந்து அமமுக வந்தவர். அவர் கூறுகையில், 'முதன் முறையாக டெல்டாவை திமுக ஸ்வீப் செய்யப் போகிறது என்று நினைக்கிறன். டெல்டாவில் அதிமுகவினர் மத்தியில் கோஷ்டி பூசல் இப்போது அதிகரித்துவிட்டது. சில நிர்வாகிகள் சமீபத்தில் தான் அதிருப்தி காரணமாக திமுகவில் இணைந்தனர். அதில் மிக முக்கியமானவர் அருள்நம்பி குழ செல்லையா. பல ஆண்டுகளாக கட்சிக்காக உழைத்தவர், 'ஜால்ரா' அடிக்க தெரியாததால் வெறுத்துப் போய், எதிரணி கேம்ப்பில் சேர்ந்துவிட்டார். இம்முறை ஜாதி வாக்குகள் எடுபடாது. எடுபடாது என்பதை விட, ஓட்டு வராது. ஆளும் கட்சி மீது இருக்கும் கோபம், ஸ்டாலினுக்கு சாதகமாக முடியும்-னு தான் டாக் இருக்கு. சசிகலாவை கட்சியில சேர்க்கலனா, அதிமுக அடுத்த தேர்தலுக்கு இருக்குமா-ங்கிறது சந்தேகம் தான்" என்று முடித்தார்.

புரிந்து கொள்வாரா எடப்பாடியார்?

 
 
 
English summary
MK stalin's dmk sweep delta votes - டெல்டா பகுதியில் திமுக
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X