சென்னை: மதவாத சக்திகளை வீழ்த்த ஒன்றுபடுவோம்- அரசியல் சாசன உரிமைகளை பாதுகாப்போம்; தமிழகத்தின் மாநிலத்தில் சுயாட்சி- மத்தியில் கூட்டாட்சி என்பது இன்று இந்தியாவின் முழக்கமாக உருவெடுத்துள்ளது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
முதல்வர் மு.க ஸ்டாலின் எழுதிய உங்களில் ஒருவன் என்ற சுயசரிதை நூல் வெளியீட்டு விழா சென்னை நந்தம்பாக்கம் வர்த்தகர் அரங்கில் இன்று நடைபெற்றது. காங்கிரஸ் முன்னாள் தலைவரும் எம்பியுமான ராகுல் காந்தி, கேரள முதல்வர் பினராயி விஜயன், காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா, பீகார் எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ் உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது பள்ளி, கல்லூரியில் படித்த காலம், இளமை காலம், அரசியல் ஆர்வம், முதல் அரசியல் கூட்டத்தில் பங்கேற்பு, முதல் பொதுக் கூட்ட பேச்சு, திரைத்துறையில் கால் பதித்தது, திருமண வாழ்க்கை, மிசா காலம் என 1976 ஆம் ஆண்டு வரையில் 23 ஆண்டுகள் நிகழ்ந்த வாழ்க்கை பயணத்தை சுயசரிதை புத்தகமாக எழுதியுள்ளார்.
இந்த நூல் வெளியீட்டு விழாவின் லைவ் அப்டேட்ஸ்:
Feb 28, 2022, 6:59 pm IST
1975- ஆக. 20-ல் எங்கள் திருமணம் அகில இந்திய திருவிழா போல் நடந்தது- முதல்வர் ஸ்டாலின்
Feb 28, 2022, 6:59 pm IST
JUSTIN | முயற்சியின் வெற்றிதான் இந்த புத்தகம்
Feb 28, 2022, 6:58 pm IST
மாநிலங்களுக்கு அதிக அதிகாரங்கள் வழங்க அரசியல் சாசனம் திருத்தப்பட வேண்டும்- ஸ்டாலின்
Feb 28, 2022, 6:58 pm IST
முதல்வர் ஸ்டாலின்
திராவிட மாடல் அல்லது திராவிடவியல் ஆட்சிமுறை என்பதுதான் எங்களது கோட்பாடு.
எல்லோருக்கும் எல்லாம் என்பதே திராவிடவியல் கோட்பாடு.
இந்தியா மாநிலங்களின் ஒன்றியம்; அனைத்து தேசிய இனங்களுக்கு சம உரிமை என்பது திராவிடவியல் கோட்பாடு.
கூட்டாட்சி தத்துவத்தை சரியாக செயல்படுத்த வேண்டும் என்பதுதான் திராவிடவியல் கோட்பாடு.
திராவிடவியல் கோட்பாட்டை இந்தியா முழுவதும் கொண்டு செல்ல வேண்டும்.
தமிழகத்தை பாஜகவால் ஒருபோதும் ஆள முடியாது என்று ராகுல் காந்தி சொன்ன வரிகள் இன்னும் ஒலித்து கொண்டிருக்கிறது.
திராவிடவியல் கோட்பாட்டை ராகுல் காந்தி முழுமையாக உள்வாங்கி இருக்கிறார்
Feb 28, 2022, 6:57 pm IST
கூட்டாட்சி தத்துவம் குறித்து அதிகம் பேசுகிற ராகுலுக்கு தமிழகத்தின் நன்றி - முதல்வர் ஸ்டாலின்
Feb 28, 2022, 6:53 pm IST
முதல்வர் ஸ்டாலின்
திராவிட மாடல் அல்லது திராவிடவியல் ஆட்சிமுறை என்பதுதான் எங்களது கோட்பாடு
Feb 28, 2022, 6:52 pm IST
நான் ஒரு தனி மனிதன் அல்ல- கொள்கை கூட்டத்தை சேர்ந்தவன்: முதல்வர் ஸ்டாலின்
Feb 28, 2022, 6:52 pm IST
முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை
நான் பிறந்த போது குலக்கல்வி எதிர்ப்பு- இன்று நீட் தேர்வுக்கு எதிர்ப்பு.
மாணவராக இருந்த போது நடத்திய இந்தி எதிர்ப்பு போராட்டம் தொடருகிறது.
மாநில சுயாட்சிக்கான முழக்கம் அன்று முதல் இன்று வரை தொடருகிறது
Feb 28, 2022, 6:51 pm IST
JUSTIN | உங்களில் ஒருவன் நான் - மு.க.ஸ்டாலின் உரை!
Feb 28, 2022, 6:51 pm IST
முதல்வர் ஸ்டாலின் உரை
அத்தனை திருப்பங்களையும் 23 வயதுக்குள் பார்த்தவன் நான்.
அண்ணா, கருணாநிதி அமர்ந்த நாற்காலியில் அமருவேன் என நினைத்ததே இல்லை
Feb 28, 2022, 6:49 pm IST
முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை
நான் அரசியல் பயிராகத்தான் வளர்ந்தேன் என்பதை இப்புத்தகம் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
அரசியல் என்பது என் ரத்தத்தில், சிந்தனையில், செயலில் கலந்தது.
மிகச் சிறிய வயதிலேயே அரசியல்தான் எதிர்காலம் என்பதை தீர்மானித்தேன்.
நான் இலக்கை அடைவதற்கு சாகசம் செய்யவில்லை- இயல்பாக இருந்தேன்.
பிறக்கும் போதே ஒரு தலைவரின் மகனான பிறந்தது என் பக்குவத்துக்கு காரணமாக இருக்கலாம்.
சாதாரண ஒரு இளைஞரின் வாழ்க்கையில் நடக்காதவைகள் நிகழ்ந்திருக்கின்றன.
5 மாத கைக்குழந்தையாக திருச்சி சிறையில் என் தந்தையிடம் காண்பித்திருக்கிறார்கள்.
என் 12 வயதில் தேச பாதுகாப்பு சட்டத்தில் கருணாநிதி, முரசொலி மாறன் கைது.
என் கல்லூரி படிப்பு காலத்தில் மிசா காலத்தில் கைது செய்யப்பட்டேன்.
சென்னை கோபாலபுரம் வீடு ராஜசபை- எங்களது உயிர் சபை- என்னை உருவாக்கியது
Feb 28, 2022, 6:45 pm IST
முதல்வர் ஸ்டாலின் உரை
எப்போதும் எந்த சூழ்நிலையிலும் உங்களில் ஒருவனாகத்தான் இருப்பேன்.
எத்தனை உயர்வான இடத்தில் உட்கார வைத்தாலும் உங்களில் ஒருவன் நான்.
திமுகவில் இணைந்த காலம் முதல் இப்போது வரை உங்களில் ஒருவனாகத்தான் செயல்படுகிறேன்.
முதல்வரான நிலையிலும் உங்களில் ஒருவனாகவே செயல்படுவேன்.
பதவி என்பதற்கு பொறுப்பு என மாற்றியவர் கருணாநிதி- எனக்கு அது பாடம்
Feb 28, 2022, 6:44 pm IST
வாழ்நாள் முழுவதும் உங்களில் ஒருவனாகவே செயல்படுவேன் -முதல்வர் ஸ்டாலின்
Feb 28, 2022, 6:43 pm IST
JUSTIN | இளமையாக இருப்பது பற்றி இன்னொரு புத்தகம் எழுத வேண்டும்
Feb 28, 2022, 6:38 pm IST
முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏற்புரையாற்றி வருகிறார்
Feb 28, 2022, 6:35 pm IST
முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்னும் இளமையாக தோற்றமளிக்கிறார்- பிறந்த நாள் வாழ்த்துகள்- ராகுல்
Feb 28, 2022, 6:35 pm IST
ராகுல் காந்தி உரை
ஒவ்வொரு மாநிலமும் ஒவ்வொரு மாநிலத்திடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டும்.
ஒவ்வொரு மாநிலமும் மற்றொருவரை மதிக்க வேண்டும்.
வேற்றுமையில் ஒற்றுமை என்பது நிலைநாட்டப்பட வேண்டும் என்பது நமது கருத்து.
இந்தியா எப்படி இருக்க வேண்டும் என்பதை பாஜக எப்படி தீர்மானிக்க முடியும்?.
இந்திய மக்கள்தான் இந்தியா எப்படி இருக்கவேண்டும் என்பதை தீர்மானிக்க முடியும்.
நம்முடைய அமைப்பில் மக்கள் குரல்கள்தான் எதிரொலிக்க வேண்டும்.
திட்டமிட்டு மக்களின் குரல்கள், உரிமைகள், நீதித்துறை, ஊடகம், தேர்தல் ஆணையம் அனைத்தும் நசுக்கப்படுகின்றன
Feb 28, 2022, 6:33 pm IST
ராகுல் காந்தி
நீங்கள் அன்பை வழங்கினால் தமிழக மக்கள் அன்பையும் பரிவையும் வாரி வழங்குவர்.
தமிழகம் குறித்து பிரதமர் மோடிக்கு தவறான புரிதல் இருக்கிறது .
தமிழகம் மட்டுமல்ல அனைத்து மாநிலங்களை பற்றியும் தவறான புரிதல் கொண்டிருக்கிறார் மோடி.
காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா அற்புதமாக உரையாற்றினார்.
சுதந்திரம் பெற்றது முதல் மாநிலத்தின் உரிமையை முதல் முறையாக பறித்துவிட்டது மோடி அரசு.
ஜம்மு காஷ்மீர் மக்களின் உரிமைகள் அவர்களிடம் இருந்து பறிக்கப்பட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீர் மக்கள் தங்களை தாங்களே ஆள முடியாத சூழ்நிலை.
உ.பி.,, குஜராத் போன்றவற்றின் அதிகாரிகள்தான் ஜம்மு காஷ்மீரத்தை ஆண்டு கொண்டிருக்கின்றனர்- இது அநீதி.
பி.எஸ்.எப். படையினருக்காக நூற்றுக்கணக்கான ஏக்கர் பஞ்சாப் மாநிலத்தின் நிலத்தை பறித்துள்ளனர்.
காஷ்மீர், பஞ்சாப்புக்கு செய்த அநீதியை தமிழகத்துக்கும் மத்திய அரசு செய்துள்ளது- ராகுல்
Feb 28, 2022, 6:33 pm IST
காஷ்மீர், பஞ்சாப்-க்கு செய்த அநீதியை தமிழகத்துக்கும் மத்திய அரசு செய்துள்ளது- ராகுல்
Feb 28, 2022, 6:30 pm IST
JUSTIN | நான் ஒரு தமிழன் - ராகுல்காந்தி
Feb 28, 2022, 6:29 pm IST
ராகுல் காந்தி
பிரதமர் மோடி பொருள் புரியாமல் தமிழ் பற்றி பேசுகிறார்.
தமிழ்நாடு என்பது 3,000 ஆண்டுகால் நாகரிகம் கொண்டது; தமிழ்நாடு என்பது ஒரு மாநிலம்.
தமிழ்நாடு என்ன என்பதை புரியாமல் பிரதமர் மோடி பேசுகிறார்.
நீட் தேர்வு தொடர்பாக தமிழக மக்கள் தொடர்ந்து கேள்வி கேட்கிற போது பதில் தராத பிரதமர் மோடி என்ன மரியாதை வைத்திருக்கிறீர்கள்?.
ஜி.எஸ்.டி நியாயமற்றது- பாதகமானது என்பதை புரிந்து கொள்ளாமல் மோடி அவமரியாதை செய்கிறார்.
தமிழ்நாட்டின் வரலாற்றையும் தேசத்தின் வரலாற்றையும் தெரிந்து கொள்வதில்லை.
3,000 ஆண்டுகளில் தமிழ்நாட்டின் மீது யாராலும் எதனையும் திணிக்க முடிந்தது இல்லை.
3,000 ஆண்டுகளாக தொடர்ந்து தமிழ்நாட்டின் மீது எதனையும் திணிக்க முடியாது
Feb 28, 2022, 6:28 pm IST
ராகுல் காந்தி
மாநிலம் என்றால் என்ன? மாநிலம் என்கிற சொல் எங்கிருந்து வருகிறது?.
மாநிலம் என்பது மண்ணைப் பற்றியது.. மக்களிடம் இருந்து மண்ணின் தன்மை வெளிவருகிறது.
மொழியில் இருந்து கலாசாரம் வருகிறது.. கலாசாரத்தில் இருந்து சரித்திரம் வருகிறது.. சரித்திரத்தில் இருந்து மாநிலங்கள் உருவாகின்றன.
இந்தியா என்பது மாநிலங்களின் ஒன்றியம் என சொன்னதன் மூலம் மாநிலங்களில் இருந்துதான் இந்தியா வருகிறது என்பதை அழுத்தமாக சொன்னேன்.
எழுத்துகள் வார்த்தைகளாக, வார்த்தைகள் வாக்கியங்களாக அவை இணைந்து கவிதையாகின்றன.
சொல், எழுத்து, வார்த்தை, கவிதைகளை மதிக்காவிட்டால் எதனையும் மதிக்கவே முடியாது
Feb 28, 2022, 6:26 pm IST
ராகுல் காந்தி
தமிழகத்தில் பிறக்காத, தமிழ் மொழி பேசாத, தமிழர் நாகரீகம் அறியாத நான் ஏன் அப்படி சொன்னேன்? என சிந்தித்தேன்.
என்னுடைய ரத்தம் தமிழ் மண்ணில் கலந்திருக்கிறது.
தந்தையை இழப்பது என்பது எனக்கு மிகவும் சோதனையான வேதனையான அனுபவம்.
தந்தையை இழந்த சோகமான அனுபவத்தை திரும்ப திரும்ப எண்ணிப் பார்க்கிறேன் .
என்னை தமிழன் என்று அழைத்து கொள்ள எனக்கு அனைத்து உரிமைகளும் உண்டு என உணர்ந்தேன்.
தமிழர் பண்பு, நாகரிகத்துக்கு தலைவணங்குகிறேன்
Feb 28, 2022, 6:26 pm IST
JUSTIN | அண்ணன் ஸ்டாலினுக்கு வாழ்த்துகள்
Feb 28, 2022, 6:24 pm IST
முதல்வர் ஸ்டாலின் நூல் வெளியீட்டு விழா: என்னுடைய ரத்தம் தமிழ் மண்ணில் கலந்திருக்கிறது- ராகுல்
Feb 28, 2022, 6:23 pm IST
முதல்வர் ஸ்டாலின் நூல் வெளியீட்டு விழா- என்னை அறியாமலேயே நான் தமிழன் என்றேன்... ராகுல் காந்தி
Feb 28, 2022, 6:22 pm IST
ராகுல் காந்தி உரை
எப்படி இளமையாக இருப்பது என்பது பற்றி இன்னொரு புத்தகத்தை ஸ்டாலின் எழுத வேண்டும்.
தமிழகத்துக்கு வருகை தருவது எப்போதும் எனக்கு மகிழ்ச்சி தரக் கூடியது என்பதை அடிமனதில் இருந்து சொல்கிறேன்.
நாடாளுமன்றத்தில் நான் ஆற்றிய உரையை இந்த தமிழகம் மிகப் பெரிய அளவில் பாராட்டியது.
ஏன் தமிழ்நாட்டை பற்றி அதிகமாக குறிப்பிட்டு பேசினீர்கள்? என்ற கேட்ட போது நான் ஒரு தமிழன் என என்னை அறியாமலேயே சொன்னேன்
Feb 28, 2022, 6:21 pm IST
ராகுல் காந்தி உரை
தமிழக மக்களுக்காக தொடர்ந்து போராடி வருகிறார் ஸ்டாலின்.
ஸ்டாலினுக்கு 69 வயது இருக்க வாய்ப்பே இல்லை என என்னிடம் வாதிட்டார் என் தாயார் சோனியா காந்தி.
ஸ்டானுக்கு 50, 60 வயது இருக்கலாம் என சொன்னார் சோனியா காந்தி.
கூகுளில் தேடி ஸ்டாலின் வயது 69 என ஒப்புக் கொண்டார் சோனியா காந்தி
Feb 28, 2022, 6:20 pm IST
ராகுல் காந்தி உரை:
அண்ணன் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்துகள்- ராகுல்
Feb 28, 2022, 6:18 pm IST
மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உரையாற்றுகிறார்
READ MORE
3:48 PM, 28 Feb
முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதிய உங்களில் ஒருவன் நூல் வெளியீட்டு விழா சற்று நேரத்தில் தொடங்குகிறது .
முதல்வர் ஸ்டாலின் நூல் வெளியீட்டு விழாவில் ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ்.
ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவை வரவேற்றார் முதல்வர் ஸ்டாலின்.
முதல்வர் ஸ்டாலின் நூல் வெளியீட்டு விழாவில் ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா.
ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லாவை வரவேற்றார் முதல்வர் ஸ்டாலின்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் சுயசரிதை நூல் வெளியீட்டு விழாவில் அரசியல் கட்சித் தலைவர்கள் பங்கேற்பு.
Kerala CM Pinarayi Vijayan, JDU leader Tejashwi Yadav, Jammu Kashmir National Conference's Omar Abdullah arrive at Chennai Trade Centre, where Congress leader Rahul Gandhi will be releasing the autobiography of Tamil Nadu CM and DMK president MK Stalin pic.twitter.com/I69nYe8jRh
முதல்வர் ஸ்டாலின் நூல் வெளியீட்டு விழாவில் கேரளா முதல்வர் பினராயி விஜயன் பங்கேற்பு
கேரளா முதல்வர் பினராயி விஜயனை முதல்வர் மு.க.ஸ்டாலின் வரவேற்றார்
3:56 PM, 28 Feb
முதல்வர் ஸ்டாலின் நூல் வெளியீட்டு விழாவில் அரசு அதிகாரிகள், திரை பிரபலங்கள் பங்கேற்பு
3:56 PM, 28 Feb
முதல்வர் ஸ்டாலின் நூல் வெளியீட்டு விழாவில் அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள் பங்கேற்பு
4:01 PM, 28 Feb
முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதிய சுயசரிதையை வெளியிட்டு ராகுல் காந்தி சிறப்புரையாற்றுகிறார்
4:03 PM, 28 Feb
முதல்வர் ஸ்டாலின் நூல் வெளியீட்டு விழாவுக்கு மூத்த காங். தலைவர் ராகுல் காந்தி வருகை
ராகுல் காந்திக்கு பூங்கொத்து கொடுத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வரவேற்றார்
4:06 PM, 28 Feb
முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதிய நூல் வெளியீட்டு விழா மேடைக்கு தலைவர்கள் வருகை
4:07 PM, 28 Feb
முதல்வர் மு.க.ஸ்டாலின் தமது 23 வயது வரையிலான வாழ்க்கையை சுயசரிதையாக எழுதியுள்ளார்
தந்தையின் வழியில் மகன் முதல்வர் மு.க.ஸ்டாலின் உங்களில் ஒருவன் என்ற தலைப்பில் சுயசரிதை
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி நெஞ்சுக்கு நீதி என்ற தலைப்பில் சுயசரிதை எழுதியுள்ளார்
4:12 PM, 28 Feb
முதல்வர் ஸ்டாலின் நூல் வெளியீட்டு விழா தேசிய அரசியலில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது
4:15 PM, 28 Feb
தமிழ்த் தாய் வாழ்த்துடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் நூல் வெளியீட்டு விழா தொடங்கியது
4:16 PM, 28 Feb
தமிழ்த் தாய் வாழ்த்துடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் நூல் வெளியீட்டு விழா தொடங்கியது
4:16 PM, 28 Feb
திமுக மகளிரணி செயலாளரும் லோக்சபா திமுக குழு துணைத் தலைவர் கனிமொழி வரவேற்புரையாற்றுகிறார்
கனிமொழி வரவேற்பு உரை:
சுயமரியாதை, சமூக நீதி, மாநில சுயாட்சி, மொழி உரிமை பேசும் தலைவர் ராகுல் காந்தி
திராவிடத்தின் குரலாக ஒலிக்கும் தேசிய தலைவர் ராகுல் காந்தி
நவீன இந்தியாவின் நம்பிக்கை குரல் ராகுல் காந்தி
4:18 PM, 28 Feb
கனிமொழி வரவேற்பு உரை:
சுயமரியாதை, சமூக நீதி, மாநில சுயாட்சி, மொழி உரிமை பேசும் தலைவர் ராகுல் காந்தி.
திராவிடத்தின் குரலாக ஒலிக்கும் தேசிய தலைவர் ராகுல் காந்தி.
நவீன இந்தியாவின் நம்பிக்கை குரல் ராகுல் காந்தி .
4:18 PM, 28 Feb
கனிமொழி உரை:
எதிரிகள் எதை விதைத்தாலும் அதை வீழ்த்துகிறவர் பினராயி விஜயன்.
அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் எனும் பெரியார் கனவை நனவாக்கியவர் பினராயி விஜயன்.
சபரிமலை விவகாரத்தில் சற்றும் விட்டு கொடுக்காதவர் பினராயி விஜயன்
4:19 PM, 28 Feb
கனிமொழி உரை:
காஷ்மீர் சிங்கம் ஷேக் அப்துல்லாவின் பேரன் உமர் அப்துல்லா.
திமுகவின் நெருக்கமான நண்பர் பரூக் அப்துல்லாவின் மகன் உமர் அப்துல்லா
4:21 PM, 28 Feb
கனிமொழி
கருணாநிதி எங்களுக்கும் தலைவர் என கூறுகிறவர் லாலு பிரசாத் யாதவ்.
பீகாரின் துணை முதல்வரும் லாலுவின் மகனுமாகிய தேஜஸ்வி யாதவை வரவேற்கிறேன்
4:22 PM, 28 Feb
சிறுவயது முதல் எங்களை விரல் பிடித்து வளர்த்தவர் துரைமுருகன் - கனிமொழி
4:22 PM, 28 Feb
நீட் தேர்வுக்கு எதிராக தொடர்ந்து களமாடுபவர் உதயநிதி ஸ்டாலின் - கனிமொழி எம்.பி.
4:23 PM, 28 Feb
கருணாநிதியின் நெஞ்சுக்கு நீதி ஒரு தலைமுறையின் அரசியல் வரலாறு- கனிமொழி
4:25 PM, 28 Feb
இளமையின் துள்ளலோடு அரசியல் ஆசான்களை உள்வாங்கி எழுதி இருக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின் - கனிமொழி.
முதல்வர் ஸ்டாலினின் உங்களில் ஒருவன் சுயசரிதை நூல் அரசியல் வரலாறு- கனிமொழி
4:26 PM, 28 Feb
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்து பேசும்போது கனிமொழியின் குரல் தழுதழுத்தது
4:27 PM, 28 Feb
முதல்வர் நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்ற தலைவர்களுக்கு உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. சால்வை அணிவித்து மரியாதை
4:29 PM, 28 Feb
முதல்வர் ஸ்டாலின் எழுதிய உங்களில் ஒருவன் சுயசரிதையை ராகுல் காந்தி வெளியிட்டார்
4:35 PM, 28 Feb
கருணாநிதியின் கோபாலபுரம் இல்லம் மாதிரி வடிவத்தின் முன்பாக நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது.
உங்களில் ஒருவன் நூலை ராகுல் காந்தி வெளியிட திமுக பொதுச்செயலாளர் அமைச்சர் துரைமுருகன் பெற்று கொண்டார்
4:35 PM, 28 Feb
நாடாளுமன்றத்தில் தமிழ் மக்களுக்காக சிங்கம் போல் கர்ஜித்தவர் ராகுல் காந்தி- ஆங்கிலத்தில் நடிகர் சத்யராஜ் பேச்சு
Ungalil oruvan Book: Rahul Gandhi, the former Congress leader and MP, is about to issue his autobiography, ungalil oruvan book, written by Chief Minister MK Stalin. Leading leaders of the coalition party are attending the ceremony in Chennai. Live updates of MK Stalin Book function is here.
Notifications
Settings
Clear Notifications
No New Notifications
Notifications
Use the toggle to switch on notifications
Block for 8 hours
Block for 12 hours
Block for 24 hours
Don't block
To start receiving timely alerts, as shown below click on the Green “lock” icon next to the address bar
Click it and Unblock the Notifications
Close X
Close X
To Start receiving timely alerts please follow the below steps:
Click on the Menu icon of the browser, it opens up a list of options.
Click on the “Options ”, it opens up the settings page,
Here click on the “Privacy & Security” options listed on the left hand side of the page.
Scroll down the page to the “Permission” section .
Here click on the “Settings” tab of the Notification option.
A pop up will open with all listed sites, select the option “ALLOW“, for the respective site under the status head to allow the notification.
Once the changes is done, click on the “Save Changes” option to save the changes.