“If You are Bad, I am Your Dad” முதல்வருக்கு பொருந்தும் வசனம்! சட்டசபையில் புகழ்ந்த திமுக எம்எல்ஏ..!
சென்னை : திரைப்படத்தில் புகழ்பெற்ற If You are Bad, I am Your Dad என்ற வசனம் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்கு பொருந்தும் என இன்று நடைபெற்ற சட்டசபை கூட்டத்தில் பேசிய சட்டமன்ற உறுப்பினர் முத்துராஜா கூறியுள்ளார்.
தமிழக சட்டசபையில் பட்ஜெட் கூட்டத் தொடரின் 2வது அமர்வில் இன்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் இன்று சட்டபேரவையில் நடைபெற்றது.
இதில் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை மா.சுப்பிரமணியன் பதிலளித்து பேசினார்.

எம்எல்ஏ முத்துராஜா
இந்நிலையில் மானிய கோரிக்கையின் போது பேசிய இதில் பங்கேற்று பேசிய திமுக சட்டமன்ற உறுப்பினர் முத்துராஜா மக்கள் நல்வாழ்வுத் துறை கடந்த அதிமுக ஆட்சியில் மற்றும் தற்போதைய திமுக ஆட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டங்கள் மற்றும், தமிழக முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் மா சுப்பிரமணியன் ஆகியோரின் செயல்பாடுகள் குறித்து பாராட்டிப் பேசினார்.

முதல்வருக்கு பொருந்தும்
தொடர்ந்து பேசிய அவர்," திரைப்படத்தில் புகழ்பெற்ற If You are Bad, I am Your Dad என்ற வசனம் தமிழக முதல்வரும் திராவிட முன்னேற்றக் கழகத்தில் கழகத்தின் எங்கள் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு நன்கு பொருந்தும். அந்த அளவுக்கு தமிழகத்திலே சிறப்பான ஆட்சி நடைபெற்று வருகிறது.

பணி நியமனம்
மருந்து முதல் மருத்துவ ஊழியர்களின் பணி நியமனம் வரை அனைத்திலும் கடந்த அதிமுக ஆட்சியில் ஊழல் காணப்பட்டது. ஆனால் தற்போது மாண்புமிகு தமிழக முதல்வர் ஸ்டாலின் தலையிலான திமுக ஆட்சியில் அனைத்து பணி நியமனங்களிலும் வெளிப்படைத்தன்மை காணப்படுகிறது.

திமுக உறுப்பினர்கள் வரவேற்பு
பொதுவாக எல்லாருக்கும் இதயம் ல்ப்டப் லப்டப் என்று தான் துடிக்கும், ஆனால் திமுக தலைவர் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான இந்த ஆட்சியின் மீது விமர்சனங்களை வைக்கும் மனிதநேய இல்லாதவர்களுக்கு இதயம் டப் டப் என்று துடிக்கும்", என திமுக சட்டமன்ற உறுப்பினர் முத்துராஜா பேசினார். அவரது இந்த பேச்சினை திமுக உறுப்பினர்கள் மேசையை தட்டி வரவேற்றனர்.
-
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்! -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி












Click it and Unblock the Notifications