திமுக முடிவு மகிழ்ச்சியாக இல்லை.. அதிருப்தியில் ஜவாஹிருல்லா.. கார்கே, ராகுலுக்கு பறந்துபோன கடிதம்!
சென்னை: வரும் லோக்சபா தேர்தல் வேட்பாளர் அறிவிப்பில் திமுக எடுத்த முடிவு மகிழ்ச்சியானதாக இல்லை என காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் ராகுல் காந்திக்கு பரபரப்பான கடிதம் எழுதியுள்ளார். அதோடு முக்கிய கோரிக்கையை காங்கிரஸ் கட்சிக்கு அவர் வைத்துள்ளார்.
தமிழ்நாடு, புதுச்சேரியில் ஏப்ரல் 19ம் தேதி ஒரே கட்டமாக 40 தொகுதிகளுக்கும் லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் திமுக 21 தொகுதிகளில் களமிறங்கி உள்ளது. மீதமுள்ள 19 தொகுதிகள் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தை பொறுத்தவரை பாபநாசம் தொகுதி எம்எல்ஏவான ஜவாஹிருல்லாவின் மனிதநேய மக்கள் கட்சி திமுக கூட்டணியிலும், தேசிய அளவில் ‛இந்தியா’ கூட்டணியிலும் இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில் தான் வரும் லோக்சபா தேர்தலில் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் திமுக கூட்டணியில் ஒரு இடம் கேட்கப்பட்டது. ஆனால் முதல்வர் ஸ்டாலின் மனிதநேய மக்கள் கட்சிக்கு லோக்சபா தொகுதி ஒதுக்க மறுத்துவிட்டார். இதனால் ஜவாஹிருல்லா ஏமாற்றமடைந்தார். இருப்பினும் கூட தொடர்ந்து திமுக மற்றும் இந்தியா கூட்டணிக்கு ஆதரவு தெரிவிப்பதாக அவர் அறிவித்தார்.
‛இன்று பிரசாரத்திற்கு கிளம்புறேன்’.. மோதலுக்கு நடுவே ஸ்டாலின் கூறியதும் ‛பெஸ்ட் ஆப் லக்’ சொன்ன ஆளுநர்
இந்நிலையில் தான் ஜவாஹிருல்லா காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் ராகுல் காந்திக்கு பரபரப்பான கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் திமுகவின் முடிவு மகிழ்ச்சியளிக்கும் வகையில் இல்லை என அவர் தெரிவித்துள்ளார். அதோடு காங்கிரஸ் கட்சிக்கு முக்கிய கோரிக்கையை அவர் முன்வைத்துள்ளார். இதுதொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:
தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ம் தேதி ஒரே கட்டமாக லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. திமுக கூட்டணியில் கடந்த 10 ஆண்டுகளாக மமக கட்சி தொடர்ந்து பயணித்து வருகிறது. மேலும் இந்த ஆண்டும் இந்தியா கூட்டணியை ஆதரித்து வருகிறது. தமிழகத்தில் 21 திமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். இதில் இஸ்லாமியர்களுக்கு வாய்ப்பு அளிக்கவில்லை. திமுகவின் இந்த முடிவு மகிழ்ச்சி தரும் வகையில் இல்லை.
டிடிவி தினகரனும் இருக்காரே.. தேனி, திருச்சி தொகுதி அமமுக வேட்பாளர்கள் யார் தெரியுமா? முக்கிய தகவல்
இதனால் தமிழ்நாடு, புதுச்சேரியில் 10 லோக்சபா தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி போட்டியிட உள்ளது. இதில் இஸ்லாமியருக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும். காங்கிரஸ் கட்சி இஸ்லாமியருக்கு வாய்ப்பு அளித்து இஸ்லாமிய மக்களின் எண்ணத்தை பூர்த்தி செய்ய வேண்டும்’’ என தெரிவித்துள்ளார்.
-
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம் -
அம்மா தான் முக்கியம்! செய்தியாளர் சந்திப்பை பாதியிலேயே நிறுத்தி போன் பேசிய நிதிஷ் ரெட்டி












Click it and Unblock the Notifications