சென்னை.. நடமாடும் காய்கறி வண்டி இப்போ எங்கே இருக்கிறது தெரியனுமா? புகார் சொல்லனுமா.. இதோ போன் நம்பர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடமாடும் காய்கறி கடைகள் தொடர்பாக சந்தேகங்கள் இருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்களை, மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் அளித்த பேட்டி: தளர்வுகள் இல்லாத ஊரடங்கு தற்போது அமலில் உள்ளது. எனவே, நடமாடும் காய்கறிகடை திட்டத்தை செயல்படுத்தி வருகிறோம்.

நடமாடும் காய்கறி கடைகளை கண்காணிக்க மண்டல வாரியாக அதிகாரிகள் நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள். நடமாடும் காய்கறி கடைகள் எந்தெந்த இடங்களில் உள்ளது என்பதை மாநாகராட்சி இணையதளத்தில் வெளியிடப்படும் இதன் மூலம் பொதுமக்கள் அறிந்து கொள்ளலாம்.

தொலைபேசி எண்கள்

தொலைபேசி எண்கள்

காய்கறி கடைகள் மற்றும் விலை குறித்து வரும் புகார்களை விசாரிக்க கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்களது சந்தேகங்கள் மற்றும் பிரச்சனைகள் இருந்தால் 044 45680200, 9499932899 தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

விக்ரமராஜா

விக்ரமராஜா

தமிழ்நாடு வணிகர் சங்க பேரவையின் தலைவர் விக்ரமராஜா கூறுகையில், பொதுமக்களுக்கு காய்கறி எளிதில் கிடைக்கும் வகையிலும் விவசாயிகள் பாதுகாக்கும் வகையில் இந்த நடமாடும் காய்கறி விற்பனை வாகனங்கள் பெரிய அளவில் உதவும். சென்னை மாநகரில் மட்டும் 5,000 நடமாடும் காய்கறி வாகனங்கள் காய்கறி விற்பனையில் ஈடுபடும்.

 அதிக விலை

அதிக விலை

அனைத்து தரப்பு மக்களும் ஊரடங்கிற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். மேலும், அதிக விலைக்கு காய்கறி விற்று வருகிறார்களா என்பதை கண்காணிப்பதற்கு சென்னை மாநகராட்சி சார்பில் 25 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

தடுப்பூசி போடுங்க

தடுப்பூசி போடுங்க

கொரோனோ பரவலை தடுப்பதற்கும் மேலும் பாதிப்பில் இருந்து விலகுவதற்கு அனைவரும் கொரோனோ தடுப்பு ஊசியை செலுத்தி கொள்வதே உகந்தது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+