சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கொரோனோ நோயாளிக்கு மருத்துவமனையில் எப்படி சிகிச்சையளிப்பது? மருத்துவ கையேடு

Google Oneindia Tamil News

சென்னை: மருத்துவ அவசர கால பிரச்சனைகளை எதிர்கொள்ள வசதியாக மருத்துவ துறை சார்பில் சில அறிவுறைகள் வழங்கப்பட்டுள்ளன.

அரசு மருத்துவமனைகளில் இதுபோன்ற வசதிகளும், நெறிகாட்டு வழிமுறைகளும் பின்பற்றப்பட வேண்டும். இது பற்றி அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

 Mock Drill for Emergency Response for Handling COVID -19 cases in Govt Hospitals

மருத்துவ கலந்தாய்வு அறையில், டாக்டர்கள் மற்றும் நர்சுகள் மட்டும் இருக்க வேண்டும். நோயாளிகளுக்கு உடல்ரீதியாக பரிசோதனைகள் செய்யப்படும். சுவாச பிரச்சனை பற்றியும், இதில், பரிசோதனை செய்யலாம். சுவாசப் பிரச்சனை இல்லாமல் மற்ற பிரச்சினைகள் பற்றிய பரிசோதனை செய்யப்படலாம்.

பரிசோதனை செய்த பிறகும், அதற்கு நடுவேயும் மருத்துவ உதவிப் பணியாளர்கள் சுத்திகரிக்கும் பணியை செய்வார்கள். நன்கு காற்றை வெளியேற்ற கூடிய கருவி, மற்றும் ஓரளவுக்கு காற்று வரக்கூடிய திறந்தவெளி பகுதியில் காத்திருப்பு அறைகள் அமைக்கப்படுவது அவசியம்.

அவசர உள்நோயாளிகள் சிகிச்சை மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட அறை இப்படி இருக்கும். டாக்டர்கள் மற்றும் நர்சுகள் இருக்கக்கூடிய பகுதியில் மருந்துகள், ஊசிகள், ஆக்ஸிஜன் செலுத்தும் வசதி, கைழுவும் இடம் மற்றும் சானிடைசர் அமைக்கப்பட்டிருக்கும்.

உதவி பணியாளர்கள் நோயாளியை உரிய முன்னெச்சரிக்கையுடன் சிகிச்சைக்கு அழைத்துச் செல்வார்கள். ஆய்வகங்களில், நோயாளிகளுடன் நேரடி தொடர்பு இருக்காது. ஆனால் ஆவணங்கள் பராமரிக்கப்பட வேண்டும். சானிடைசர் மூலமாக கைகள் கழுவும் வசதிகள் செய்து கொடுக்கப்படும். அவசரகால சிகிச்சை பிரிவில், ஐசியூ நர்சுகள், பணிக்கால தொழில்நுட்ப பணியாளர்கள் இருப்பார்கள்.

ஆக்சிஜன் வினியோகம், அவசர கால மருந்துகள், மானிட்டர், வென்டிலேட்டர் வசதி செய்யப்பட்டிருக்கும். இதேபோன்று நோயாளிகளை தேவைப்பட்டால் வேறு பகுதிக்கு கொண்டு செல்வதற்காக ஆம்புலன்ஸ் அங்கே தயார் நிலையில் வைக்கப்பட்டிருக்க வேண்டும். அங்கே, மெடிக்கல் ஊழியர்கள் இருப்பார்கள். நோயாளிகளை வாகனத்தில் வைத்து அழைத்து செல்வது மட்டுமே டிரைவருடய பணி. டிரைவர் இருக்கும் பகுதி நோயாளி இருக்கக்கூடிய பகுதியிலிருந்து தனித்திருக்க வேண்டும். நோயாளியை அழைத்துச் செல்லக்கூடிய உதவியாளர் முழுக்க முன்னெச்சரிக்கை மருத்துவ நடவடிக்கைகளை எடுத்திருக்க வேண்டும். இவ்வாறு அதில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

English summary
Consultation RoomHealthcare workers (Doctors and Nurses) Physical examination of patientswithrespiratory symptoms. Inventory PPEs & Medicines, hand washing and sanitizer facility.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X