சென்னை உயர்நீதிமன்றத்தில் 2 புதிய நீதிபதிகள் - என்.மாலா, எஸ்.சவுந்தர் பதவியேற்பு
சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளாக என்.மாலா மற்றும் எஸ்.சவுந்தர் ஆகியோர் இன்று பதவியேற்றுக்கொண்டனர்.
சென்னை: பாரம்பரியம் மிக்க சென்னை உயர்நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதிகளாக என்.மாலா மற்றும் எஸ்.சவுந்தர் ஆகியோர் இன்று பதவியேற்றுக்கொண்டனர். உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
புதிய நீதிபதிகளாக 6 வழக்கறிஞர்களின் பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்ட நிலையில் 2 பேர் மட்டுமே நியமனம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்துக்கு 2 கூடுதல் நீதிபதிகளை நியமித்து குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அதன்படி, வழக்கறிங்களாக இருந்த என்.மாலா, எஸ்.செளந்தர் ஆகியோரை நீதிபதிகளாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

புதிய நீதிபதிகள்
ஆறு பேரை நீதிபதிகளாக நியமிக்க உச்ச நீதிமன்றம் பரிந்துரைத்த நிலையில், இருவரை நியமித்து குடியரசு தலைவர் உத்தரவிட்டார். இரண்டு கூடுதல் நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 61ஆக அதிகரித்துள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில் தற்போது 14 நீதிபதி இடங்கள் காலியாக உள்ளது என்றும் கூறப்படுகிறது.

நீதிபதிகள் பதவியேற்பு
இன்று காலை 10 மணிக்கு உயர் நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இருவருக்கும் தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி பதவிபிரமாணம் செய்து வைத்தார். இதன் மூலம் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 61 ஆக உயர்ந்தது. சென்னை உயர் நீதிமன்றத்தில் உள்ள பெண் நீதிபதிகளின் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது.

நீதிபதி என்.மாலா
சென்னை டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரியில் சட்டப்படிப்பை படித்து, 1989ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வழக்கறிஞராக பதிவு செய்து, 32 ஆண்டுகளாக வழக்கறிஞராக இருந்து வருகிறார். ஆங்கிலோ பிரெஞ்ச் டெக்ஸ்டைல்ஸ் புதுச்சேரி பல்கலைக்கழகம், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் (ஐ.சி.எம்.ஆர்.), காப்பீட்டு நிறுவனங்கள் உள்ளிட்டவற்றிற்கு வழக்கறிஞராக ஆஜராகியுள்ளார். கடந்த 2020ஆம் ஆண்டு புதுச்சேரி யூனியன் பிரதேச அரசு பிளீடராக நியமிக்கப்பட்டார். அந்த பதவிக்கு நியமிக்கப்பட்ட முதல் பெண் என்ற பெருமை பெற்றவர்.

நீதிபதி எஸ் சௌந்தர்
நீதிபதி எஸ். சௌந்தர், மயிலாடுதுறையில் 1971ஆம் ஆண்டு ஜூலை 29ஆம் தேதி பிறந்தவர். இவரது தந்தை ஆர். சிவபுண்ணியம் மயிலாடுதுறையில் உள்ள மாவட்ட கூடுதல் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக தொழில்புரிந்தவர். தனது மகன் சௌந்தர் நீதிபதியாக நியமிக்கப்பட்டதை அடுத்து வழக்கறிஞர் தொழிலை கைவிட்டுள்ளார். பத்தாம் வகுப்பில் கணித படத்தில் 100 மதிப்பெண்கள் எடுத்து, பள்ளி கல்வியை மயிலாடுதுறையில் முடித்தவர். சென்னையில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சட்டக் கல்லுரியில் முதுகலை சட்டப்படிப்பை முடித்து விட்டு, 1993ஆம் ஆண்டு அக்டோபர் 13ஆம் தேதி வழக்கறிஞராக பதிவு செய்தார்.
-
சென்னை மாணவி தடா அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
பூவை ஜெகன்மூர்த்தி மீதான கடத்தல் வழக்கு தள்ளுபடி! கடுமையாக வாதம் வைத்த போலீஸ்.. மனுதாரர் ட்விஸ்ட்! -
Gold Price: மீண்டும் ஷாக் கொடுத்த தங்கம் விலை.. ஒரே நாளில் அதிரடி உயர்வு.. நகை பிரியர்கள் கலக்கம்! -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க












Click it and Unblock the Notifications