வார்த்தையை விட்டு மாட்டிக்கொண்ட சீமான்.. உச்ச நீதிமன்ற தீர்ப்பிற்கு எதிராக சொல்கிறாரா? ஆ குழப்புதே!
சென்னை: நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று வெளியான உச்ச நீதிமன்ற தீர்ப்பு குறித்து பேசிய கருத்துக்கள் கடுமையான சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. அவர் இது தொடர்பாக வெளியிட்ட கருத்துக்கள் அவருக்கே பிரச்சனையாக மாறும் வாய்ப்புகள் உள்ளன.
சீமானுக்கு எதிராக நடிகை கொடுத்த பாலியல் வழக்கு மீதான விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. இந்த விவகாரத்தில் இரு தரப்பும் கலந்து பேசி உடன்பாடு காண அறிவுறுத்தி, 12 வாரத்தில் விசாரித்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு உள்ளது. சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு இடைக்கால தடை விதிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சீமான் ஸ்டேட்மெண்ட்
ஆனால் இதில்தான் சீமான் உச்ச நீதிமன்ற தீர்ப்பிற்கு எதிராக ஸ்டேட்மெண்ட் வெளியிட்டு உள்ளார். சமரசத்திற்கு வாய்ப்பில்லை என்று சீமான் கூறியுள்ளார்.
நடிகையுடன் சமரசம் பேச வாய்ப்பில்லை. அதற்கான தேவையும் இல்லை. இது ஆதாரம் இல்லாத அவதூறு வழக்கு. என்று சீமான் கூறியுள்ளார். நடிகை தொடர்ந்த பாலியல் வழக்கில் இரு தரப்பும் கலந்து பேசி உடன்பாடு காண வேண்டும், என்று உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியது குறித்த கேள்விக்கு சீமான் இந்த பதிலை வழங்கி உள்ளார்.
இதுதான் சீமானுக்கு சிக்கலாக மாறி உள்ளது. ஏனென்றால் இரண்டு தரப்பும் கலந்து பேச வேண்டும் என்று கூறித்தான் இந்த வழக்கிற்கு இடைக்கால தடை விதித்து உள்ளது. ஆனால் அதை மீறி பேச்சுவார்த்தை எல்லாம் நடத்த முடியாது.. சமரசம் செய்ய முடியாது என்று சீமான் கூறியுள்ளார். இது கோர்ட்டில் அடுத்த கட்ட விசாரணைகளில் அவருக்கே எதிராக மாறும் வாய்ப்புகள் உள்ளன.
சர்ச்சை கருத்துகள்
இந்த பாலியல் பலாத்கார வழக்கில் சீமான் தொடர்ந்து வார்த்தையை விட்டு சர்ச்சையில் சிக்கி வருகிறார்.
ஏற்கனவே, நீ விரும்பித்தானே உறவு வெச்சீங்க..அப்புறம் அதில் என்ன பிரச்சனை? பிடிக்கலை பிரிந்து போயிட்டீங்க.. 15 வருஷமாகிடுச்சு.. எனக்கு கல்யாணம் ஆகியே 14 வருஷமாச்சு.. இதை எல்லாம் யாரும் கேள்வி கேட்கவில்லை? நான் பேசுறது மட்டும் முகம் சுளிக்க வைக்கிறதா?
பாலியல் குற்றவழக்கு... பாலியல் குற்றவழக்கு... என்ன பாலியல் குற்றம்? நிரூபிக்கப்பட்டுள்ளதா? விரும்பி வந்து உறவுவெச்சுட்டு போனவ அவ... சேட்டை பண்ணிட்டு இருக்கக் கூடாது.. முகம் சுளிச்சா சுளிச்சுட்டு இரு.
15 வருஷமாக என்னை பழிபோட்டு அவமானப்படுத்துறீங்க? என்னைய என் குடும்பத்தை என் பிள்ளைகளை குதறி தின்றீங்களே எல்லோரும்.. என் மகன் பெரியவனுக்கு நல்லா விவரம் தெரிந்துவிட்டது.. அதை எல்லாம் அவன் பார்த்தா, அவன் நண்பர்கள் பார்த்தா என்னாவாங்க? அப்போ எல்லாம் உங்களாள் முகம் சுளிக்க முடியலை?, என்று கூறி உள்ளார்.
அதே போல், கருணாநிதி பலமுறை சிறையில் அடைத்து என்னை தலைவராக்கினார். இப்போது, அப்பாவும், மகனும் சிறையில் அடைத்து முதல்வராக்கிவிட்டு தான் செல்வார்கள். பிறந்தநாள் நிகழ்ச்சியின் போது நான் வந்தால் செய்தியில் யாரை போடுவது என்ற சூழல் ஏற்படும். பிறந்த நாள் பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் பேசும் வரை இருந்துவிட்டு பிறகு என்னை காவல்நிலையத்திற்கு போலீசார் வர சொன்னார்கள். ஸ்டாலின் 'அப்பா'வுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள், என்று சீமான் கூறியது கடுமையான விமர்சனங்களை சந்தித்து வருகிறது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது












Click it and Unblock the Notifications