குடியுரிமை சட்ட திருத்தத்தை திரும்ப பெற கோரி நாளை நாம் தமிழர் கட்சி ஆர்ப்பாட்டம்
சென்னை: மத்திய அரசின் குடியுரிமை சட்ட திருத்தத்தை திரும்பப் பெற கோரி சென்னையில் நாளை நாம் தமிழர் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அதன் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சீமான் வெளியிட்டுள்ள அறிக்கை:

குடியுரிமைச் சட்டத்திருத்தத்தைத் திரும்பப்பெறக் கோரி, நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு சார்பில் தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் தலைமையில் 18-12-2019 புதன்கிழமை, காலை 10 மணியளவில் சென்னை வள்ளுவர்கோட்டத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவிருக்கின்றது.
கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஆதித்தமிழர் விடுதலை இயக்கம் சார்பாக அ.வினோத், தமிழர் தேசிய விடுதலைக் கழகம் சார்பாக ஆ.கி.சோசப் கென்னடி, தமிழர் நலப் பேரியக்கம் சார்பாக மு.களஞ்சியம், மருது மக்கள் இயக்கம் சார்பாக செ.முத்துப்பாண்டி, தமிழர் தாயகம் கட்சி சார்பாக கு.செந்தில் மள்ளர், இஸ்லாமியர் சேவை சங்கம் சார்பில் ஏ.கே.சாகுல் அமீது, தமிழ்த்தேசியக் கட்சி சார்பில் தமிழ்நேசன் ஆகியோர் கண்டன உரையாற்றுகிறார்கள்.
இறுதியாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனப் பேருரையாற்றுகிறார். இந்நிகழ்வில் நாம் தமிழர் கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினரும், தமிழ்த்தேசிய உணர்வாளர்களும், சமூகச் செயற்பாட்டாளர்களும் பெருந்திரளாகப் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு சீமான் கூறியுள்ளார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications