நாகாலாந்து ஆளுநர் இல.கணேசன் அப்போலோ மருத்துவமனையில் அனுமதி.. என்ன நடந்தது?
சென்னை: நாகாலாந்து ஆளுநர் இல.கணேசன் திடீர் உடல்நலக் குறைவு காரணமாக அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு, கீழே விழுந்ததால் தலையில் அடிபட்டிருப்பது தெரிய வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து அவசர சிகிச்சைப் பிரிவில் அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
தமிழ்நாட்டில் பாஜகவையும், தாமரை சின்னத்தையும் பட்டி தொட்டியெங்கும் கொண்டு சென்றவர் இல.கணேசன். தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர், மாநிலங்களவை உறுப்பினர் உள்ளிட்ட பதவிகளில் இருந்துள்ள இல.கணேசன், தஞ்சாவூரை பூர்வீகமாக கொண்டவர். பாஜகவில் இருந்தாலும், திமுக மற்றும் அதிமுக ஆகிய கட்சிகளுடன் நட்புடன் இருந்தவர்.

இவர் 2021ஆம் ஆண்டு மணிப்பூர் மாநில ஆளுநராக நியமனம் செய்யப்பட்டார். இதன்பின் மேற்கு வங்க ஆளுநர் பொறுப்பையும் சேர்த்துக் கவனித்து வந்தார். தொடர்ந்து 2023ஆம் ஆண்டு முதல் நாகாலாந்து ஆளுநராக செயல்பட்டு வருகிறார். அண்மையில் இல.கணேசன் தனது 80வது பிறந்தநாளினைக் கொண்டாடினார். சதாபிஷேக விழாவில் முதல்வர் ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் பங்கேற்றிருந்தார்.
இந்த நிலையில் சென்னையில் உள்ள வீட்டில் இல.கணேசன் தங்கி ஓய்வெடுத்து வந்தார். இன்று காலை திடீரென இல.கணேசனுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டிருக்கிறது. இதன் காரணமாக உடனடியாக ஆயிரம் விளக்கு பகுதியில் அமைந்துள்ள அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள இல.கணேசனுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த நிலையில் இல.கணேசன் கீழே விழுந்ததில் தலையில் அடிபட்டிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இதன் காரணமாகவே அவர் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார் என்பதும் தெரிய வந்துள்ளது.
அதேபோல் அப்போலோ மருத்துவமனை தரப்பில் இல.கணேசனின் உடல்நிலை தொடர்பாக இதுவரை எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை. விரைவில் அப்போலோ மருத்துவமனை சார்பாக இல.கணேசன் உடல்நிலை குறித்த அறிக்கை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications