தாய்பாசம்.. காதல்.. மனைவியின் பிரிவு.. கவிஞர் வைரமுத்துவின் நாட்படு தேறல் 2 பருவ பாடல்கள் அறிமுகம்
சென்னை: கவிப்பேரரசு வைரமுத்துவின் நாட்படு தேறல் பருவம் 2 பாட்டுத்தொடர் ஏப்ரல் 17 முதல் வெளியாக உள்ள நிலையில் பாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன .தாய்பாசம், காதல், மனைவியின் பிரிவு உள்பட பல்வேறு கருப்பொருட்களுடன் பலதரப்பட்ட வாழ்வியல் முறைகளை கண்முன்னே காட்டும் வகையில் பாடல் வரிகளும், காட்சிகளும் அமைக்கப்பட்டுள்ளன.
தமிழ் திரையுலகில் சிறந்த கவிஞர், பாடலாசிரியராக திகழ்பவர் தான் கவிப்பேரரசு வைரமுத்து. இவர் நாட்படு தேறல் என்ற பெயரில் வாரம் ஒரு பாடல் வீதம் 100 பாடல்கள் உருவாக்கி வெளியிட முடிவு செய்தார். இதற்கான முயற்சிகளையும் முன்னெடுத்தார்.
அதன்படி 100 இசையமைப்பாளர்கள், 100 இயக்குனர்கள், 100 பாடகர்களுடன் கவிப்பேரரசு வைரமுத்துவின் 100 பாடல்கள் வெளிவர உள்ளது. நாட்படு தேறல் ஒன்று பாட்டுத்தொடர் முடிவடைந்த நிலையில் நாட்படு தேறல் 2 பாட்டுத்தொடர் பணிகள் நடந்து வந்தன. இந்த நாட்படு தேறல் பருவம் 2க்கான பாட்டுத்தொடர் ஏப்ரல் 17 முதல் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையிலும் கலைஞர், இசையருவி சேனல்களில் ஒளிபரப்பாக உள்ளது.

பாடல் காட்சி வெளியீடு
இந்நிலையில் நாட்படு தேறல் 2ம் பருவத்தில் இடம்பெற உள்ள பாடல்களின் காட்சிகளை கொண்டு ப்ரோமா வீடியோ ஒன்றை தனது டுவிட்டர் கவிஞர் வைரமுத்து வெளியிட்டு இருந்தார். பனிபடர் மலை, ஓடும் நீரோடை, தோகை விரிக்கும் மயில் என கண்களை குளிர வைக்கும் இயற்கை காட்சிகள், கிராம வாழ்க்கையை எடுத்துரைக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. மேலும், காதல் காட்சியும் கண்களை கொள்ளை கொள்ளும் வகையில் இருந்தன.

வரிகளோடு பாடல் காட்சிகள்
இதன் தொடர்ச்சியாக இன்று வரிகளுடன் பாடல் காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளன. இதற்கான அறிமுக வீடியோவை கவிஞர் வைரமுத்து வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ 1.41 நிமிட நீளம் கொண்டதாக உள்ளது. ‛விரைவில் தேறல் முதலில் தூறல்' எனக்கூறி அவர் இந்த வீடியோவை வெளியிட்டுள்ளார்.

பாடல்கள் என்னென்ன
ரோஜாவே தமிழ் பேசு..., அன்னம்மா பெத்தவளே ஆடு மேய்க்க போனவளே அந்தி மசங்கும் முன்னே ஆட வந்த மாயம் என்ன..., கனா கண்டேன்.., என்னைக்கு பொண்டாட்டி என்னை விட்டு போனாலே அன்னைக்கே என்படுக்கை திண்ணைக்கு வந்திடுச்சி..., ஆயிரம் தான் கவி சொன்னேன் அழகழகா பொய் சொன்னேன்... ஒவ்வொரு நாளும் உலகை திறக்கும் உதய கதிரே வணக்கம்.., கூந்தல் மேகம் ஒன்று கொண்டை ஏறி நின்று என பாடல்கள் அமைந்துள்ளன. இந்த பாடல்களில் தாய்ப்பாசம், காதல், மனைவியின் பிரிவு உள்பட பல்வேறு கருப்பொருட்களுடன் பாடல்கள் அமைந்துள்ளன.

இயக்குனர்கள் யார் யார்
முன்னதாக இந்த நாட்படுத்தேறல் 2ம் பருவத்தை பொறுத்தமட்டில் ஏற்கனவே பாடகர்கள், இசையமைப்பாளர்கள், இயக்குனர்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. பாடல் காட்சிகளை இயக்குனர் சிம்புதேவன், ‛மதயானைக்கூட்டம்' விக்ரம் சுகுமாறன், ‛பைரவா' பரதன், ‛சிட்டிசன்' சரவண சுப்பையா, ‛க/பெ ரண சிங்கம்' விருமாண்டி, இயக்குனர் தளபதி பிரபு, ரமேஷ் தமிழ்மணி, சரண், காந்தி கிருஷ்ணா, நடன இயக்குனர் ராதிகா, தேன்கணேஷ் விநாயகன், ‛காக்கா முட்டை' மணிகண்டன் ஆகியோர் இயக்கி உள்ளனர்.

இசையமைப்பாளர்கள் யார் யார்
பாடல்களுக்கு இசையமைப்பாளர்களாக வித்யாசாகர், யுவன் சங்கர்ராஜா, ஜிவி பிரகாஷ், ரமேஷ் விநாயகம், அனில் சீனிவாசன், சைமன் கே கிங், நவ்பல் ராஜா, அவ்கத், ரமேஷ் தமிழ்மணி, ஜெரார்ட் பெலிக்ஸ், வாகு மசான், இனியவன் உள்ளிட்டோர் இசையமைத்துள்ளனர். மேலும் எஸ்பி பாலசுப்பிரமணியம், சங்கர் மகாதேவன், பாம்பே ஜெயஸ்ரீ, ஹரிணி, கல்பனா, வைக்கம் விஜயலட்சுமி, விஜய் யேசுதாஸ், ஹரிசரண், பென்னிதயாள் உள்ளிட்டவர்கள் பாடல்களை பாடியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications